பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய மூதாதையர்கள் தீயை கண்டுபிடிப்பதற்கு முன்னர் இருளில் எப்படி அவதிப்பட்டனரோ, இதே போலத்தான் நாம் இன்று நகர காட்டில் திண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?
நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களோ இல்லையோ, புதிய இணைய தளம் ஒன்று இப்படி தான் நினைக்கிறது.
அது மட்டுமல்ல நகர காட்டில் உங்களது திண்டாட்டத்தை போக்குவதற்கான சேவையையும் அறிமுகம் செய்வதாக அந்த தளம் கூறுகிறது. டெக்ஸ்பர்ட்ஸ் டாட்காம் என்பது அந்த தளத்தின் முகவரி.
டெக்ஸ்பர்ட்ஸ் என்பது புதுவகையான வார்த்தை பிரயோகம்தான். எக்ஸ்பர்ட்ஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு நிபுணர் என்ற பொருள்வரும். இதன் அடிப்படையில் பார்த்தால் டெக்ஸ்பர்ட்ஸ் என்றால் டெக்ஸ்டிங் என்று குறிப்பிடப்படும் எஸ்எம்எஸ் தொடர்பான விஷயங்களில் நிபுணர் என்று அர்த்தம். இத்தகைய நிபுணர்களை கொண்டிருப்பதால்தான் இந்த தளம் தன்னை டெக்ஸ்பர்ட்ஸ் என்று அழைத்து கொள்கிறது. இந்த நிபுணர்கள் என்ன செய்கிறார்கள்? நீங்கள் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு சரியான பதிலை அளிக்கிறார்கள் என்கிறது இந்த தளம். உங்கள் கேள்வி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த கேள்விக்கு ஐந்தே நிமிடத்தில் இந்த தளம் தன்னுடைய நிபுணர்களின் மூலம் பதிலளித்து விடுகிறது. பதில்கள் எஸ்.எம்.எஸ். மூலம் வந்து சேர்கின்றன. இன்டெர்நெட்டில் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதனை தேடுவதற்கான வழிகளும் அநேகம் இருக்கின்றன. என்றாலும், உடனடியாக தேவைப்படக் கூடிய நேரத்தில் தகவல்களை தேடிக் கொண்டிருப்பதை விட, கேட்டதும் கிடைப்பதே பயனுள்ளதாக இருக்கும். இந்த கருத்தை அடிப்படையாக கொண்டு செல்போன் மூலம் தகவல்களை கேட்டு பெறும் சேவை அறிமுகமானது. அறிமுகம் இல்லாத நகரத்தில் இருக்கும் போது அங்கே ஓட்டல் அல்லது அலுவலக கட்டிடம் போன்ற விவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ளவிரும்பினால் இன்டெர் நெட்டின் பின்னே அலைந்து கொண்டிருப்பது சரியல்ல. இத்தகைய நேரங்களில் செல்போன் மூலம் தேவைப்படும் தகவலை கேள்வியாக அனுப்பி வைத்தால் உடனடியாக பதில் கிடைக்கும். இத்தகைய சேவையை 82 ஆஸ்க் என்னும் இணைய தளம் வழங்கி வந்தது. இப்படி பதில்களை தேடுவதன் மூலம் ஊழியர்கள் தனி நிபுணத்துவம் பெற்றதால், அதனை உரிய முறையில் பயன்படுத்தி கொள் ளும் நோக்கோடு இந்த தளம் டெக்ஸ்பர்ட்ஸ் என்னும் பெயரில் மறு அவதாரம் எடுத்துள்ளது. இப்போது இந்த தளத்தில் கேள்வி களை கேட்டால் ஐந்தே நிமிடத்தில் சரியான பதில் கிடைத்துவிடும் என்று அந்த தளம் சொல்கிறது. இதற்காக கட்டணம் செலுத்த வேண்டும். இணையவாசிகள் இதனை ஏற்று கொள்கிறார்களோ இல்லையோ, இந்த தளம் இன்டெர்நெட் உலகில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் மறு அவதாரம் எடுத்திருக்கிறது. முழு வீச்சில் அறிமுகம் ஆவதற்கு முன்னர், அதிக விவரங்கள் இல்லாமல் ஒரு இணைய தளத்தை அமைத்து, முட்டாள்கள் யோசித்து கொண்டிருப்பார்கள். புத்திசாலி யாரிடமாவது கேட்பான் என்னும் வாசகத்தை மட்டும் தளத்தின் முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், ஆகஸ்ட் 14ந் தேதி செல்போன் மூலம் தகவல்களை கேட்டு பெறும் சேவை அறிமுகமானது. பல இணையவாசிகளுக்கு இதனால் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். காரணம் இந்த சேவை ஒன்றும் முற்றிலும் புதிதானதல்ல. ஏற்கனவே பல இணைய தளங்கள் இது போன்ற சேவையை வழங்கி வருகின்றன. மோசியோடாட்காம் அதில் ஒன்று. இந்த தளத்தின் மூலம் கேள்வி கேட்டால், யாராவது ஒருவர் அதற்கான பதிலை தேடி சமர்ப்பிப்பார். ஆனால் இவற்றை யெல்லாம் விட துல்லிய மானதாகவும், மேம்பட்டதாகவும் தனது சேவை இருப்பதாக டெக்ஸ் பர்ட்ஸ் தளம் கூறிக்கொள்கிறது. |