இசைப்பட வாழ்வது பற்றி தமிழ் கவிதை பேசுகிறது. இப்போது இசைப்பட சம்பாதிப்பதற்கான வாய்ப்பை இன்டெர்நெட் ஏற்படுத்தி தந்துள்ளது. இசைப் பிரியர்களுக்கு பொற்காலம் என்று சொல்லக் கூடிய வகையில், இன்டெர்நெட் பாடல்களை பகிர்ந்து கொள்ள சுலபமான வழியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இது காப்புரிமை மீறும் செயல் என்பதால் இணையவாசிகள் வழக்கு மற்றும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்ட காலமும் வெகு வேகமாக மலையேறி வருகிறது.
தற்போது காப்புரிமை சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் அதே நேரத்தில் புதிய தொழில்நுட்பம் வழங்கும் பகிர்தல் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பாடல்களை கேட்டு மகிழ்வதற்கான புதிய வழிகள் பல அறிமுகமாகி இருக்கின்றன.
சொல்லப் போனால் மற்ற எந்த துறையையும் விட இசை சார்ந்த துறையில் புதிய சேவைகளும், அவற்றை முன்வைக்கும் இணையதளங்களும் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன.
இந்த வகையில் தற்போது வந்திருப்பதுதான் இணையவாசிகள் இசைப்பட பொருளீட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் இணையதளம். மிக்சாலூ எனும் வித்தியாசமான பெயரை கொண்டு அறிமுகமாகி உள்ள இந்த இணையதளம், இசைப் பிரியர்கள் எந்தவித முயற்சியும் இல்லாமல் வருவாய் ஈட்டுவதற்கான வழியை காண்பிக்கிறது
அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்களுக்கு பிடித்த பாடல்களை வரிசைப்படுத்தி அவற்றை நண்பர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான். எத்தனை நண்பர்கள் அந்த பாடல்களை கேட்டு மகிழ்கின்றரோ அந்த அளவுக்கு அவர்களுக்கு வருவாய் கிடைக்கும்.
நண்பர்களுக்கு பாடல்களை பரிந்துரை செய்வதன் மூலமே பொருளீட்டலாம் என்று சொல்வது முதலில் மிகச் சுலபமானதாக இருக்கிறதே என்று எண்ண வைக்கும். அடுத்த நொடியே இது ஏதோ மல்டி லெவல் மார்க்கெட்டிங் மோசடி போன்ற செயலாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழலாம். இந்த முறை சுலபமானதே தவிர நிச்சயமாக மோசடியானது இல்லை. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஒரு சாதாரண பழக்கத்தை அனைவருக்கும் பணம் பெற்றுத் தரக் கூடிய வழியாக மாற்றும் ஒரு புத்திசாலித்தனமான முயற்சி இது. மேற்கத்திய நாடுகளில் மிக்ஸ்டேப் என்று ஒரு கலாச்சாரம் உண்டு. பெயரை கேட்டவுடன் இது ஏதோ புதிய சங்கதி என்று நினைத்து விட வேண்டாம். நமக்கு பிடித்தமான பாடல்களை நாம் தேர்ந்தெடுக்கும் வரிசையில் பதிவு செய்து கொள்வதையே இப்படி மிக்ஸ்டேப் என்று சொல்கின்றனர். பொதுவாக கேசட்டில் இப்படி இசைப் பிரியர்கள் பல்வேறு ஆல்பங்களிலிருந்து பாடல்களை தேர்வு செய்து பதிவு செய்து கொள்வார்கள். நம்ம ஊரில் கேசட்டில் சினிமா பாடல்களை தேர்வு செய்து பதிவு செய்து கொள்வதில்லையா அது போல. ஆனால் மிக்ஸ்டேப் கலாச்சாரத்தில் என்ன விசேஷமென்றால், அங்கே நிலவும் ஆல்பம் சார்ந்த சூழ்நிலையில், இது இசைப் பிரியர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கான வாய்ப்பாக அமைவது என்பதுதான். எல்லா இசை வெளியீடுகளுமே நிறுவனமயமாக்கப்பட்டு ஒரு முழுமையான ஆல்பமாக முன் தீர்மானிக்கப்பட்ட வடிவில் வெளிவரும் நிலையில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த பாடலை தேர்வு செய்து பதிவு செய்து கொள்வது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த சிடி யுகத்திலும் கூட இது தொடர்கிறது. மிக்சாலூ இணையதளம் இந்த மிக்ஸ்டேப் கலாச்சாரத்தை டிஜிட்டல் உலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அதாவது இசைப் பிரியர்கள் தங்களது மிக்ஸ்டேப் பதிவுகளை இந்த தளத்தில் இடம் பெற வைத்து தங்களது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்தில் இடம் பெற வைப்பதோடு தங்களது பிளாக் தளம் மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் இடம் பெற வைத்து அதன் மூலமும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். அப்படி அவர்கள் வாங்கும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பாடலை பரிந்துரை செய்தவர் என்ற முறையில் இசைப் பிரியர்களுக்கு வழங்கப்படும். ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கும் போது ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரசனைக்கேற்ப பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் பாடல்களிலிருந்து நாம் இதுவரை கேட்டிராத நல்ல பாடல்களை அறிமுகம் செய்து கொள்ள முடியும். நாமே கூட நம்மிடம் எத்தனை கேசட் இருந்தாலும் நண்பர்கள் வைத்திருக்கும் கேசட்டின் பட்டியலை பார்த்து அதில் உள்ள அபூர்வ பாடல்களை இணங்கண்டு வியந்து போவதுண்டல்லவா. இதுதான் மிக்ஸ்டேப்பின் பலம். தற்போது இசைப் பிரியர்கள் இதனை இன்டெர்நெட் மூலம் சக இசைப் பிரியர்களோடு பகிர்ந்து கொள்வதற்கான வழியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. அதன் மூலம் வருவாயையும் ஈட்டலாம் என்கிறது. |
website;www.mixaloo.com