பள்ளிக்குத் திரும்புதல்’ என்னும் தலைப்பு நன்றாக இருக்கிறது அல்லவா! இது ஏதோ நாவல் (அ) புதிய கவிதைத் தொகுதியின் தலைப்பு அல்ல! பாராட்டத்தக்க ஒரு இணைய தளத்தின் தலைப்பு இது!
.
பேக்டூ ஸ்கூல் (back 2 school.in) என்னும் இந்த இணைய தளத்தின் முகவரியை பலவிதங்களில் தமிழ்படுத்தலாம். “மீண்டும் பள்ளிக்கு’ அவற்றில் ஒன்று. இதைவிட பள்ளிக்கு திரும்புதல் என்பது கவித்துவமான ஒன்றாக இருப்பதோடு, இணைய தளத்தின் நோக்கத்திற்கும் பொறுத்தமாக இருக்கிறது.
பள்ளி படிப்பை பாதியில் கைவிட நேரும், மாணவ மாணவிகளை அப்படியே சென்றுவிட அனுமதிக்காமல், மீண்டும் அவர்களை பள்ளிக்கு கொண்டு வந்து சேர்க்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் இணைய தளம் இது.
உள்ளபடியே உன்னதமான முயற்சி: ஆனால் கடினமானது, சவாலானது. எந்த அளவுக்கு சவாலானதோ அதே அளவுக்கு இன்றியமையாததும் கூட! இதை நன்கு உணர்ந்தே, பள்ளிக்கு திரும்ப வைக்கும் முயற்சியாக “பேக்டு ஸ்கூல்’ இணைய தளம் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி படிப்பை நிறுத்திக் கொள்வது என்பது சர்வ சாதாரணமாக இருக்கும் இந்தியாவில், இத்தகைய முயற்சிக் கான தேவை உணரப்பட்டு, இந்த இணைய தளம் அமைக்கப் பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இதில் மேலும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால், நாட்டுக்கே முன் மாதிரியாக திகழக் கூடிய “பேக்டூ ஸ்கூல்’ இணைய தளம் தமிழகத்தில் இருந்து மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்பதுதான்! ஆம் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த முன்னோடி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் டாக்டர் சந்தோஷ் பாபு முயற்சியால் “பேக்டூ ஸ்கூல்’ இணைய தளம் அமைக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திக் கொள்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏழைகளே அதிகம் உள்ள நம்நாட்டில் பள்ளி படிப்பை தொடராமல் போவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் விநோதமானவையும் உண்டு. வேதனையில் ஆழ்த்துபவையும் உண்டு. இருப்பினும் இந்த காரணங் களில் சில பொதுத்தன்மைகள் இல்லாமல் இல்லை. எதிர்பாராமல் குடும்ப உறுப்பினர்கள் மரண மடைவது, அல்லது வருமானம் ஈட்டுவோர் வேலை இழப்பது போன்றவை பெரும்பாலான மாணவர்கள் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் போவதற்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன. இது போன்ற சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட குடும்பங்களின் பொருளாதார சுமை மிகுதியாகி, பிள்ளைகளின் கல்வி செலவை சுமக்க முடியாமல் போகலாம் (அ) குடும்ப செலவை சுமக்க பிள்ளைகளின் பிஞ்சுக்கரம் தேவைப்படலாம். இந்த நிலை வேதனையானது! அது ஒரு புறமிருக்க பல நேரங்களில் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் போவது போன்ற எளிமையான காரணங்களுக்காக படிப்பு நிறுத்தப்படுவதும் உண்டு. பள்ளி படிப்பை தொடர வேண்டிய நிர்ப்பந்தம் வலுவலாக இல்லாத நாட்டில் இது சகஜம்தான்!
இந்த இடத்தில் தான், “பேக்டு ஸ்கூல்’ இணைய தள முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது. மாணவர்கள் படிப்பை நிறுத்திக் கொள்வதற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; அதனை அறிந்து கொண்டு தீர்வு காண வேண்டியது, ஆட்சி பொறுப்பில் உள்ளவர்களின் கடமை அல்லவா!
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சந்தோஷ் பாபு இப்படி தான் நினைத்தார். மாணவர்கள் படிப்பை நிறுத்தும் நிலைஏற்படும் போது, அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு, பிரச்சனையை தீர்க்க முயன்றால், அம்மாணவர்களை தொடர்ந்து கல்வி பயில வைக்கலாம் என்பது அவரது நம்பிக்கை.
நல்ல எண்ணம் தான்! ஆனால் ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத்தியில் யாரெல்லாம் படிப்பை நிறுத்துகின்றனர் என்று தெரிந்து கொள்வது சாத்தியம் தானா?
அப்படியே தெரிந்து கொண்டாலும் குறிப்பிட்ட மாணவர்களுக்கு ஏன் இந்தநிலை ஏற்பட்டது என்று கண்டுபிடிப்பது நடைமுறை சாத்தியம் தானா? இதற்கு நூற்றுக்கணக்கான பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலையை கண்கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டாமா?
மனம் இருந்தால் சாப்ட்வேர் உண்டாயிற்றே! இந்த கண்காணிப்பு பணியை கண்ணும் கருத்துமாக செய்யக்கூடிய சாப்ட்வேர் உருவாக்கப் பட்டு, அதனை பக்கபலமாக கொண்டு, பேக்டு ஸ்கூல் இணைய தளம் வடிவமைக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக இந்தப் பணி மிக அருமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டத்தில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவர் பற்றிய விவரங்களும் சேரிக்கப்பட்டு அவர்களுக்கு என ஒரு அடையாள எண் கொடுக்கப்படுகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் சாப்ட்வேரிடம் சமர்பிக்கப்பட்டு விடுகின்றன.
இரண்டாவது கட்டத்தில் அவ்வப் போது மாணவர்களின் வருகை சரிபார்க்கப்பட்டு, தொடர்ந்து பள்ளிக்கு வந்து கொண்டிருக் கின்றனரா என்னும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவையும் சாப்ட்வேரிடம் சமர்பிக்கப் படுகின்றன. ஏற்கனவே உள்ள விவரப் பட்டியலோடு இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் சாப்ட்வேர் படிப்பை நிறுத்திக் கொண்ட மாணவர்கள் பற்றிய தகவலை, மைய கம்ப்யூட்டரில் எட்டிப் பார்க்கச் செய்கிறது. மைய கம்ப்யூட்டர் மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில் இருப்பதால், படிப்பை கைவிடும் மாணவர்களை அறிந்து கொள்ளும் கலெக்டர், அதன் பின்னே உள்ள பிரச்சனையை தீர்த்து, மாணவனை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வரும் முயற்சியை மேற்கொள்ள முடியும்.
அவ்வப்போது பள்ளிக்கு விஜயம் செய்து , விலகிச் செல்லும் மாணவர்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும் பொறுப்பு தன்னார்வ தொண்டர்களிடம் விடப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ஊழியர் முதல் தலைமை ஆசிரியர் வரை பலர் அரசு பணியை மேற்கொள்கின்றனர். மற்ற பொறுப்பை மாவட்ட கலெக்டர் பார்த்துக் கொள்கிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்த தளம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல் கட்டத்தில் 337 பஞ்சாயத்துகளும், 9000 தன்னார்வ தொண்டர்கள் மூலம் கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாணவர்களில் ஒருவர் கூட பள்ளி படிப்பை நிறுத்திவிடக்கூடாது என்பதை முதன்மை நோக்கமாக அறிவிக்கும் இந்த தளத்தில், மாணவர்கள் படிப்பை தொடர அரசு தரும் உதவித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் குழந்தை தொழிலாளர் பற்றி புகார் தெரிவிக்கும் வசதியும் இடம் பெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோதனை முறையில் செயல்படுத்தப் படும் அரசு திட்டம், எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் செயல்படுத்தப்படலாம்.
| |