செல்போன் குறுக்கு வழி

இருந்த இடத்தில் இருந்தே இன்டெர்நெட்டை அணுகும் வசதி. செல்போன் மூலம் இன்டெர்நெட் இணைப்பை பெறுவது, இந்த நிலையைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வசதி காரணமாக இன்டெர்நெட்டை அணுகும் விதமே மாறி வருவதாக கருதப்படுகிறது.

இன்டெர்நெட்டை அணுகுவதற்கு இன்டெர்நெட் மையங்களையோ, வீட்டில் உள்ள கம்ப்யூட்டரையோ சார்ந்திராமல், கையில் இருக்கும் செல்போன் மூலமே வலையை வரவைத்து விடுவது. நினைத்த நேரத்தில் தகவல்களை தேடிக் கொள்ள மற்றும்சேவைகளை பெற வழி செய்திருக்கிறது.

ஆனால் செல்போன் மூலம் இன்டெர்நெட்டை அணுகுவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் அதற்கேற்ற நவீன செல்போன் மற்றும் இன்டெர்நெட் சேவைக்கு ஈடுகொடுக்கக்கூடிய செல்போன் இணைப்பு ஆகியவை தேவை. மேலும் இதற்கான விசேஷ சாப்ட்வேர்களும் தேவைப்படுகிறது.

செல்போனின் சின்னத்திரை இன்டெர்நெட் பயன்பாட்டில் மிகப்பெரிய தடையாக இருப்பதாக கருதப்படுகிறது. இந்த பிரச்சனைக்கான மாற்று வழிகளை கண்டறியும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

செல்போனின் இன்டெர்நெட்டை அணுகுவதில் மற்றொரு பிரச்சனையும் இருக்கிறது. இதுவரை அதனை யாரும் பெரிதாக கருதவில்லை. ஆனால் செல்போன் சார்ந்த இன்டெர்நெட் பயன்பாடு அதிகரிக்கக்கூடிய நிலையில், இந்த பிரச்சனையை எல்லோருமே உணரத் தொடங்கலாம். பலரும் இந்த பிரச்சனையை உணர்வதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய வாலிபர் ஒருவர் இதற்கான தீர்வை முன்வைத்திருக்கிறார்.

செல்போன்களுக்கு ஏற்ற வகையில் இணையமுகவரிகளை மாற்றி அமைக்கும் சேவையை டிஜிட் யூஆர்எல்(www.digiturl.com) என்னும் பெயரில் அவர் அறிமுகம் செய்திருக்கிறார். சிறிய அளவிலான இன்டெர்நெட் முகவரிகளை நினைவில் வைத்து கொள்வதிலோ, டைப் செய்வதிலோ எந்த பிரச்சனையும் இல்லை. உதாரணத்திற்கு சி.என்.என்.டாட்காம், பி.பி.சி.டாட்காம் போன்றவை.
ஆனால் எல்லா இணைய முகவரிகளும் இப்படி எளிமையாக இருப்பதில்லை.

நீளமான இணையமுகவரிகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இணையதளத்தில் குறிப்பிட்ட பக்கத்துக்கு செல்லவேண்டுமானால் அதனை குறிப்பிடும் முகவரி சிக்கலானதாகவே இருக்கும். கம்ப்யூட்டரில் இவற்றை டைப் செய்வது சிக்கலானது.

அப்படியிருக்க செல்போனின் சின்ன விசைப்பலகையில் சிக்கலான இணையமுகவரிகளை டைப் செய்வது சுலபமான காரியமில்லை. இந்த பிரச்சனையை தீர்க்கத்தான் டிஜிட் யூஆர்எல் சேவை அறிமுகமாகியிருக்கிறது.

இந்த சேவையை பயன்படுத்தும் போது, இணையமுகவரியை செல்போனில் டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு மாறாக குறிப்பிட்ட எண்ணை டைப் செய்தால் போதும்.
இணையமுகவரிகளை எண்ணாக மாற்றும் வசதியை டிஜிட்யூஆர்எல் வழங்குகிறது.

எனவே எந்த முகவரியையும் நேரடியாக குறிப்பிடாமல் அவற்றுக்கான எண்ணை டைப் செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட இணையதளங்களை எளிதாக செல்போன் மூலம் அணுகிவிட முடியும்.

செல்போனில் எழுத்துக்களை டைப் செய்வது சிக்கலானது என்பதை அனைவரும் அறிந்திருக்கலாம். ஆனால் செல்போனில் எண்களை டைப் செய்வது மிகவும் இயல்பானதாகவே இருக்கிறது.

அந்த வகையில் இப்படி குறிப்பிட்ட எண்களை டைப் செய்வதன் மூலம் இணையதள முகவரிகளை அணுகுவது செல்போன் வைத்திருப் பவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆன்ட்ரூ கிரே என்னும் வாலிபர் இந்த சேவையை உருவாக்கியிருக்கிறார்.

ஏற்கனவே சிக்கலான இணையமுகவரிகளுக்கு மாற்றாக எளிமையான இணையமுகவரிகள் டைனியூஆர்எல் என்னும் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன. இதே போல செல்போன்களுக்கான குறுக்கு வழி சேவையாக டிஜிட் யூஆர்எல்லை உருவாக்கியிருப்பதாக கிரே கூறுகிறார்.

எதிர்காலத்தில் செல்போன் மூலம் இன்டெர்நெட்டை அணுகுவது பன்மடங்கு அதிகரிக்கக்கூடிய நிலையில் இந்த சேவை மிகவும் தேவையானதாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.

டிஜிட்யூஆர்எல் இணைய தளத்தில் இருந்து இதற்கான சாப்ட்வேரை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஜாவா சாப்ட்வேர் செயல்படக்கூடிய எல்லா போன்களும் இது செயல்படும். இந்த சேவையை கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது. கம்ப்யூட்டரில் நாம் பார்க்கும் இணைய தளங்களில் பின்னர் பயன்படுத்துவதற்காக சேமித்து வைத்து கொள்ளும் வசதியும் உண்டு.

பத்திரிகை கட்டுரைகளை படிப்பது, இன்டெர்நெட் ஷாப்பிங் செய்வது, பிராட்காஸ்டிங் மற்றும் வரைபட விவரங்களை பெறுவது போன்ற விஷயங்களில் இந்த சேவை மிகவும் உதவியாக இருக்கும் என்று கிரே தெரிவிக்கிறார்.

தொழில்நுட்பத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக முயற்சி செய்து இந்த சேவையை உருவாக்கி யிருக்கிறார். இன்டெர்நெட் மற்றும் செல்போனின் பயன்பாடு வேகமாக மாறிவருவதை கருத்தில் கொண்டு இந்த சேவையை உருவாக்குவதற் கான எண்ணம் பிறந்ததாக அவர் கூறுகிறார்.

செல்போன் மூலம் இன்டெர் நெட்டை பயன்படுத்துவது என்பது எளிதாக இருக்க வேண்டும் என்பது தனது நோக்கம் என்று அவர் கூறுகிறார்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “செல்போன் குறுக்கு வழி

  1. பயனுள்ள தகவல்..

    Reply
  2. good and useful information.
    anbudan aruna

    Reply
  3. But still we are unable to do voice chat (yahoo, gtalk, paltak) through mobile phone. we can do only IM chats within buddies.

    That should come.

    Similarly we cant hear songs from raaga or musicindi websites through mobile phone net.

    I think laptop companies are lobbying/blocking such developments.

    Reply
  4. நல்ல பயனுள்ள தகவல். ஆனால் இது போன்று எத்தனை நம்பர்கள் வரை செல்ல முடியும் என்று தோணவில்லை.

    ஆயினும் பயன்பாடுகள் அதிகரிக்கும் என்று தோன்றுகிறது.

    Reply
  5. ஆட்காட்டி

    காசு எகுறுமே?

    Reply
  6. Ramya

    Excellent and useful info. Thanks.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *