நுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா? நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை வாங்கி விடலாகாது என்று சொல்லப்படுவது உங்களுக்கு தெரியுமா?
நுகர்வோரான உங்கள் கடமையை சரிவர செய்ய, வாங்கப்படும் பொருள் பற்றியும், அதனை தயாரித்த நிறுவனம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பது தெரியுமா?
எல்லாம் தெரியும், விளம்பரங்களை பார்த்து விஷயங்களை தெரிந்து கொண்ட பின்னர் தான் கடைக்கே போகிறோம் என்று நீங்கள் அலுப்புடன் அலட்சியமாக சொல்லலாம். ஆனால், இங்கே குறிப்பிடுவது விளம்பரம் மூலம் தெரிவிக்கப்படும் தகவல்களை அல்ல; அவற்றின் பின்னே உள்ள தகவல்களை அதாவது நிறுவனங்கள் மறைக்க விரும்பும் தகவல்கள் மற்றும் வெளியிட விரும்பாத விவரங்கள் இவற்றை எல்லாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.
அது உங்களின் தார்மீக கடமை என்று சொல்கின்றேன். அப்போது தான் நீங்கள் தார்மீக பொறுப்புடன் நடந்து கொள்ள முடியும் என்றும் சொல்கின்றனர்.
சொல்வது, வர்த்தக நிறுவனங்கள் லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படாமல் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை உறுதி செய்ய நுகர்வோர் செய்ய வேண்டியது எல்லாம், தகவல்களை தெரிந்து கொண்டு அதனடிப்படையில் சரியான முடிவுகளை மேற்கொள்வது தான்.
கெட்ட பெயர் சம்பாதித்த நிறுவனங்களை நுகர்வோர் இயல்பாகவே தவிர்த்து விடுவ துண்டு. ஆனால் நுகர்வோர் அறியாமலேயே தவறான கொள்கைகளை/ நடைமுறையை கடைபிடிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றனவே. ஒரு நிறுவனம் தெரிந்தே குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு நியமித்திருக்கலாம். ஒரு நிறுவனம், சுற்றுச் சூழல்
மாசுபடுவது பற்றி கவலைப்படாமல் செயல்பட்டு கொண்டிருக்கலாம். ஒரு நிறுவனம் உள்ளூர் மக்களின் நீர் ஆதாரத்தை சுரண்டி லாபம் பார்த்து கொண்டிருக்கலாம். இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லலாம்.
வர்த்தக செயல்பாடுகள் பற்றி பெருமைபட்டுக் கொள்ளும் நிறுவனங்கள், இத்தகைய சர்ச்சைக்குரிய சங்கதிகளை மூடி மறைத்து விடவே முயற்சி செய்கின்றன.
இப்போது உங்கள் முன் உள்ள கேள்வி, ஒரு நிறுவனம் தவறாக செயல்படுகிறது என்று தெரிந்து கொண்டால் அதன் தயாரிப்பை, வாங்காமல் புறக்கணிப்பது தானே சரி. ஆம் என்பது உங்கள் பதிலாக இருந்தால், இந்த தகவல்களை எல்லாம் எப்படி தெரிந்து கொள்வது என்ற கவலை உங்கள் மனதில் உண்டாகலாம்.
அந்த கவலையே வேண்டாம். நிறுவனங்களின் பொருட்கள் பற்றிய விவரங்களை அளிப் பதற்காக என்றே ஒரு இணைய தளம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இன்றைய வர்த்தக உலகில் எல்லா பொருட்களுமே விலையை குறிக்க பார்கோடை தாங்கி நிற்கின்றன அல்லவா? அந்த பார்கோடை வைத்தே அப்பொருள் தொடர்பான முழு விவரங்களையும் அளிப்பதை நோக்கமாக கொண்டு இந்த தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதனை பார்கோடு விக்கிபீடியா என்று சொல்லலாம்.
ஒரு பற்பசையையோ, சோப்பு கட்டியையோ பால் பாக் கெட்டையோ நீங்கள் வாங்க போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே அதில் உள்ள பார்கோடை குறித்து வைத்துக் கொண்டு இந்த தளத்தில் அதனை டைப் செய்து பார்த்தீர்கள் என்றால் அந்த தயாரிப்பு தொடர்பான விவரங்கள் திரையில் வந்து நிற்கும்.
விவரங்கள் என்றதும் வெறும் தகவல்கள் மட்டும் அல்ல. நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒரே பார்வையில் அலசி ஆராய்ந்து எடை போட்டு விட உதவும் வகையிலான செய்திகள், விமர்சனங்கள், சர்ச்சைகள் என சகல விதமான விவரங்களும் தொகுக்கப் பட்டிருக்கும்.
உதாரணத்திற்கு நிறுவனத்தின் தயாரிப்பு முறை மற்றும் தொழிற்சாலையில் ஊழியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து ஏதாவது செய்திகள் வெளி வந்திருந்தால் அவை கட்டாயம் இடம் பெற்றிருக்கும் நிறுவனம் அரசு சலுகையை தவறாக பயன்படுத்தியது தொடர்பான செய்திகள் போன்றவையும் இடம் பெற்றிருக்கும்.
அதே போல அந்த தயாரிப்பு பற்றி சக நுகர்வோரின் விமர்சன கருத்துக்களும் இடம் பெற்றிருக்கும். நிறுவனம் ஏதாவது சர்ச்சையில் சிக்கியிருந்தால் அந்த விவரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்படியாக ஒவ்வொரு பொருள் பற்றிய முழு விவரங்களும் தொகுத்தளிக்கப் பட்டிருக்கும். பார்கோடை டைப் செய்வதன் மூலம் எந்த பொருள் பற்றியும் இதன் வழியே தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறாக ஒரு நிறுவனம் தவறாக எதையும் செய்யவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அப்பொருளை நிம்மதியுடன் வாங்கலாம். இல்லை என்றால் இது போன்ற செயல்பாடுகளுடன் உடன்பட மாட்டேன் என கம்பீரமாக மறுத்து நிராகரிக்கலாம்.
நுகர்வோருக்கான இந்த தளம் நுகர்வோர் பங்களிப்பு இல்லாமல் சிறப்பாக உருவாக வாய்ப்பில்லை. எனவே நுகர்வோர் உதவியுடனேயே இதில் விவரங்கள் இடம் பெற உள்ளது.
எனவே தான் விக்கி பீடியா பாணியில் இந்த தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் நுகர்வோர் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தங்கள் மதிப்பீடுகள், கருத்துக்கள் மற்றும் கண்ணில் படும் செய்திகளை சமர்பிக்கலாம். இப்படியாக நுகர்வோர் சமர்பிக்கும் தகவல்கள் தொகுக்கப்பட்டு பொருட் களுக்கான களஞ்சியமாக இந்த தளம் உருவாக உள்ளது.
இந்த தளத்தில் மற்றுமொரு கூடுதல் வசதியும் உண்டு. பார்கோடை காமிரா போன் மூலம் அப்படியே கிளிக் செய்து இந்த தளத்தில் சமர்பித்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
(http://gepir.gs1.org/V31/xx/)
என்னும் முகவரியில் இத்தளம் அமைக்கப்பட்டு வருகிறது.