மேம்பட்ட உலகிற்கான புத்தகங்கள் (betterworldbooks.com) என்னும் பெயரில் ஒரு புத்தக விற்பனை தளம் இருக்கிறது. பழைய புத்தகங்களை விற்பனை செய்வதற்கான தளம் என்றாலும் இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட முடியாது. பெயரைப்போலவே மேம்பட்ட உலகிற்கான முயற்சியாகவே இந்ததளம் செயல்பட்டு வருகிறது.
யாருக்கும் பலனின்றி வீணாக போய் விடக் கூடிய புத்தகங்களை சேகரித்து விற்பனை செய்யும் பணியை தான் இந்த மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை கல்வியறிவை வளர்க்க பாடுபடும் அமைப்புகளுக்கு நன்கொடையாக இந்த தளம் வழங்கி விடுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பட்டதாரி மாணவர்கள் இந்த தளத்தை நடத்தி வருகின்றனர்.
வெற்றிகரமான தொழிலுக்கு வியாபார நோக்குடன் சமூக அக்கரையும் அவசியம் என்னும் உணர்வுடன் செயல்பட்டு வரும் இந்த தளத்தின் பின்னே சுவாரசியமான கதை இருக்கிறது.
பெட்டர் வேர்ல்டு புக்ஸ் தளத்தின் நிறுவனரான சேவியர் ஹெல்கிசன் 7 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் இன்டியானாவில் உள்ள “நாட்ரே டேமே’ பல்கலையில் படித்துக் கொண்டிருந்தார். கடைசி வருட படிப்பு. பட்டதாரியாவது உறுதியா னாலும் உடனடி வேலை வாய்ப்புக்கு உறுதி இல்லாத நிலையில், எதிர்காலம் பற்றிய கவலை வாட்டியது. அந்த கவலையோடு தனது அறை நண்பர் கிறிஸ்டோபர் கிரீஸ் என்பவரோடு, அவர் விவாதித்துக் கொண்டிருந்தார்.
பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியை அவர்கள் தேடிக் கொண்டி ருந்தனர். அப்போது தான் சேவியர் கண்ணில் அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாட புத்தகங்கள் கண்ணில் பட்டன.
இன்டெர்நெட் மூலம் பழைய புத்தகங்களை சுலபமாக விற்பனை செய்ய முடியும் என அறிந்திருந்த சேவியருக்கு புத்தகங்களை பார்த்ததுமே அவற்றை விற்றால் என்ன என்ற யோசனை ஏற்பட்டது.
உடனே கொஞ்சம் புத்தகங்களை தேர்வு செய்து, விற்பதற்காக பட்டிய லிட்டார். முதல் வாரத்திலேயே முதல் புத்தகத்தை நல்ல விலைக்கு விற்க முடிந்தது. அதற்கு முன்பாகவே அவரது நண்பர் கிறிஸ்டோபர் தனது புத்தகங்களை விற்பனை செய் திருந்தார். இருவருமாக சேர்ந்து அடுத்த கட்டமாக மற்ற புத்தகங்களை விற்பனை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றனர்.
இதனால் கையில் கணிசமாக பணம் சேர்ந்தது. மகிழ்ச்சியில் திளைத்த அவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. பழைய புத்தகங் களை சுலபமாக விற்க முடிந்தது அவர்களை யோசிக்க வைத்தது. மற்ற மாணவர்களிடமும் இப்படி படித்து முடித்த புத்தகங்கள் இருக்குமே என்று நினைத்தனர். நண்பர்களை அணுகி, அவர்களின் புத்தகங்களை சேகரித்து விற்கத் தொடங்கினர்.
ஆனால் இதனால் தாங்கள் மட்டுமே லாபம் பெற நினைக்கவில்லை. அவர்கள் கல்லூரி வளாகத்திலேயே ராபின்பென் சமூக கல்வி மையம் என்னும் பிரிவு செயல்பட்டு வந்தது மாலைநேர பயிற்சி வகுப்பு நடத்த அந்த மையம் திட்டமிட்டிருந்தது. மாணவர்களிடம் இருந்து பழைய புத்தகங்களை திரட்டி விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் தொகையை இந்த மையத்திற்கு வழங்க விரும்பினர்.
பழைய புத்தகங்களை விருப்பப்படும் மாணவர்கள் நன் கொடையாக தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் சக மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வந்து குவித்து விட்டனர். சேவியரும், கிறிஸ்டோபரும் இந்த வரவேற்பை பார்த்து திக்குமுக்காடி போய் விட்டனர். பின்னர் பொறுமையாக செயல்பட்டு அந்த புத்தகங்களை பிரித்து வகைப்படுத்தி, இன்டெர்நெட் மூலம் விற்பனை செய்தனர்.
இந்த முயற்சியின் பலனாக பயிற்சி மையத்திற்கு அவர்களால் 8 ஆயிரம் டாலர் நிதி திரட்டி தர முடிந்தது. வெற்றியை சுவைக்கும் போது அதனை விட்டு விடாமல் தொடர்வதே வாழ்வின் வெற்றி ரகசியம்.
தங்கள் கல்லூரியில் மேற்கொண்ட இதே முயற்சியை மற்ற சில கல்லூரிகளில் மேற்கொண்டு பார்க்கலாமே என்று சேவியர் மற்றும் கிறிஸ்டோபர் நினைத்தனர். இந்த கட்டத்தில் தான் ஒப் குர்ட்ஸ்மன் என்னும் மற்றொரு நண்பர் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். நிதித்துறையில் வேலை பார்த்து வந்த ஒப் தனது பணியில் அதிருப்தி அடைந்திருந்த நிலையில் நண்பர்களின் புதிய முயற்சியில் ஆர்வத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார். மூவருமாக சேர்ந்து பழைய புத்தகங்களை சேகரித்து விற்பனை செய்வதையே பெரிய அளவில் செய்யத் தொடங்கினர்.
ஒவ்வொரு கல்லூரியாக சென்று பழைய புத்தகங்களை சேகரிக்கத் தொடங்கினர். எல்லா கல்லூரி களிலுமே நல்லவரவேற்பு கிடைத்தன. புத்தகங்கள் குவிந்தன.
பெரும்பாலான பழைய புத்தகங்கள், குப்பை கூளத்தில் கொட்டப்பட்டு வீணாவதே அமெரிக்க அனுபவமாக இருந்தது. இப்படி வீணாவதை விட நன்கொடையாக அளிக்க பலரும் தயாராக இருந்தனர்.
புத்தகங்களை விற்பனை செய்ய தாங்களாகவே “”பெட்டர் வேர்ல்டு புக்ஸ்” என்னும் பெயரில் இணைய தளம் ஒன்றை அமைத்தனர். விரைவிலேயே நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் கால் பதித்து விட்டனர். அடுத்த கட்டமாக நூலகங்களும் சேர்ந்து கொண்டன.
மூன்றே ஆண்டுகளில் அமெரிக்க முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் நூலகங்களில் இருந்த புத்தகங்களை சேகரிக்கும் அளவுக்கு உயர்ந்து விட்டனர்.
இன்று நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் அவர்களை தேடி வருகிறது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அவர்கள் இணைய தளம் மூலம் வாங்கப்படுகின்றன.
புத்தக விற்பனையில் கிடைக்கும் வருவாயில் 15 சதவீதம் வரை பல்வேறு கல்வியறிவு திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கி விடு கின்றனர். கல்வியறிவு வழங்குவதன் மூலம்நல்ல காரியங்கள் செய்ய முடியும் என்று இவர்கள் நம்புகின்றனர்.
சாதாரணமாக ஆரம்பித்த முயற்சி இத்தனை பெரிய வெற்றி பெறும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறும் இந்த வாலிபர்கள், இந்த முயற்சி புதிய அனுபவமாக அமைந்து புதிய பாடங்களை கற்றுக் கொடுத் திருக்கிறது என்று உற்சாகமாக கூறுகின்றனர்.
இப்போது இந்த தளம் மிகவும் பிரபலமாகி விட்டதால், பழைய புத்தகங்களை வைத்திருப்பவர்கள் அதனை தூக்கி வீச மனம் இல்லாத நிலையில் தங்கள் சொந்த செலவில் இந்த தளத்திற்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்.
இந்த தளத்தின் மற்றொரு சிறப்பம்சம் புத்தகங்களை அனுப்பி வைக்கும் போது வாடிக்கையாளர் விரும்பினால் அதனை சுற்றுச் சூழலுக்கு கேடு ஏற்படாத வகையில் பசுமை மார்க்கத்தில் அனுப்பி வைக்கின்றனர். இதனால் கார்டன் கிரிடிட் புள்ளிகள் பெறவும் வாய்ப்பு உள்ளது.
இந்த சமூக சிந்தனை பெட்டர் வேர்ல்டு புக்ஸ் தளத்தை மேலும் பிரபலமாக வைத்துள்ளது
—————-