புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக ஸ்டுடியோவுக்கு செல்வதே மிகப் பெரிய நிகழ்வாக இருந்த காலம் உண்டு. இதற்கான தனி தயாரிப்பு தேவை. ஸ்டுடியோவுக்கு போகும் போது தனி மனநிலை ஏற்பட்டு விடும். ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. இன்று கையடக்க கேமராக்களின் வருகையால் நினைத்த நேரத்தில் காட்சிகளை கிளிக் செய்ய முடிவதால் ஸ்டுடியோக்களுக்கு செல்லும் வைபவம் அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது.
.
ஸ்டுடியோவுக்கு செல்லும் பழக்கம் மங்கி விட்டது போலவே புகைப்படங்களை பிரேம் போட்டு வீட்டில் மாட்டி வைக்கும் வழக்கமும் அரிதாகி வருகிறது.
அந்த கால வீட்டில் அடியேடுத்து வைத்தாலே குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளப்பட்ட புகைப்படங்களை சுவரில் பார்த்து ரசிக்கலாம். இன்றோ டிஜிட்டல் யுகத்தில் படமெடுப்பது சுலபமாகி இருக்கும் அதே நேரத்தில் புகைப்படங்களை டிஜிட்டல் வடிவத்தில் பார்த்து மகிழ்வதே வழக்கமாகி விட்டது.
எடுத்து படங்களை கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது பிரிண்ட் போட்டு கொள்வதும் சுலபமாக இருக்கிறது. ஆனால் ஆயிரம்தான் சொல்லுங்கள். புகைப்படங்களை பிரேம் போட்டு வீட்டில் மாட்டி வைப்பதன் அழகே தனிதான்.
அழகு மட்டுமல்ல அதற்கென ஒரு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு தேவை இருக்கவே செய்கிறது. இந்த டிஜிட்டல் யுகத்திலும் புகைப்படங்களை பிரேம் போட்டு அளிக்கும் சேவையை தரும் இணையதளங்கள் இருக்கிறது என்பதுதான் விசேஷம்.
இத்தகைய தளங்களில் ஒன்றான இபோட்டோ பிரேம்ஸ் இணையதளம் பிரேம் போட உதவுவதோடு மரம் வைக்கவும் வழி ஏற்படுத்தி தருகிறது. அதாவது இந்த தளத்தின் மூலம் போட்டோ பிரேமை ஆர்டர் செய்யும் ஒவ்வொரு முறையும், வாங்குபவரின் சார்பாக ஒரு மரக்கன்றை நட திட்டமிட்டிருப்பதாக இந்த தளம் தெரிவிக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைப்பதற்காக உலகம் முழுவதும் பசுமை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த தளம் புகைப்படங்களோடு பசுமை பாதையையும் இணைத்திருக்கிறது.
ஒரு பிரேம், ஒரு மரம் எனும் வாசகத்தோடு இந்த சேவையை இபோட்டோ பிரேம்ஸ் தளம் வழங்கி வருகிறது. டிஜிட்டல் யுகத்திலும் புகைப்படங்களை பிரேம் போட தூண்டும் வகையில் மிகவும் அழகான, நேர்த்தியான பிரேம்களை இந்த தளம் விற்பனை செய்கிறது.
பல்வேறு வகையிலான பிரேம்கள் இந்த தளத்தில் காட்சிக்கு கிடைக்கின்றன. அவற்றில் இணையவாசிகள் தங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து ஆர்டர் செய்து கொள்ளலாம். அந்த பிரேமில் அவர்கள் விரும்பும் புகைப்படம் வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும். அதனை தங்களது இல்லத்தில் மாட்டி மகிழலாம்.
இப்படி பிரேமை விற்பனை செய்வதோடு, ஒவ்வொரு பிரேம் விற்பனைக்கும் ஒரு மரக்கன்றை நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மரக்கன்று நடுதலில் ஈடுபட்டுள்ள இயக்கத்தோடு இந்த தளம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதாது. அவற்றை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் அவை காடுகளாக செழித்து வளரும். இந்த நோக்கத்தோடு செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் அமைப்போடு இந்த தளம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த தளம் சார்பாக தற்போது தாய்லாந்தில் உள்ள இரண்டு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. சுனாமி பேரலை வீசியபோது தாய்லாந்தில் உள்ள தீவு ஒன்றில் காடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. அந்த இடத்தில் மீண்டும் காடுகளை உருவாக்குவதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
மேலும் இபோட்டோ பிரேம்ஸ் இணையதளம் கரியமில வாயுவின் அடிச்சுவற்றை குறைக்கும் திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற்றுள்ளது. எனவே இத்தளத்தின் மூலம் புகைப்பட பிரேம்களை வாங்கும் போது இந்த சான்றிதழின் கீழ் புள்ளிகளையும் பெறலாம்.
புகைப்பட பிரேம்களை வாங்குவதே ஒரு மனநிறைவான விஷயம்தான். அந்த நிறைவோடு உலகின் இயற்கை வளத்தை பெருக்குவதற்கு நம்மாலான ஒரு சிறிய பங்களிப்பை செய்த திருப்தியையும் இந்த தளம் சேர்த்து வழங்குகிறது.
அந்த வகையில் இணையவாசிகளுக்கு இரட்டிப்பான மனநிறைவை இந்த தளம் தருகிறது என்று கூறலாம்.
———–
link;
www.ephotoframes.co.uk