ரோபோக்கள் மனித இயந்திரம்தான் என்றாலும் அவற்றை உணர்ச்சி இல்லாதவை என்று இனி யாரும் கூறி விட முடியாது. காரணம் வலியை உணரக் கூடிய ரோபோவை ஜப்பான் நாட்டில் வடிவமைத்துள்ளனர். இந்த ரோபோ வலியை உணரக் கூடியது மட்டுமல்ல; வலியை உணர்த்தக் கூடியதும் என்பதுதான் விசேஷம்.
.
ரோபோ ஆய்வு மற்றும் தயாரித்தல் ஜப்பான் முன்னிலை வகிக்கிறது. ரோபோ பயன்பாட்டிலும் அந்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது. ரோபோ தொடர்பான ஆய்வு ஜப்பானில் தீவிரமாக நடைபெற்று வருவதால் புதுப்புது ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருவதாலும் அங்கே சர்வதேச ரோபோ கண்காட்சி அண்மையில் நடத்தப்பட்டது.
தலைநகர் டோக்கியோவில் நான்கு நாட்கள் இந்த கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பலவிதமான ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் ஒன்றுதான் வலியை உணரும் ரோபோ. ரோபோ நோயாளியாக இது அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் இதற்கு தனியே பெயரும் சூட்டப் பட்டுள்ளது. சிம்ராய்டு என்பது இதன் பெயர்.
அழகான இளம்பெண்ணை போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, பல் மருத்துவ மாணவர் களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவால் பல்வலியை உணர்ந்து வெளிப்படுத்த முடியும்.
பல்வலிக்கு சிகிச்சை பெறும் நோயாளி எப்படி வலியால் துடிப்பாரோ அந்த உணர்வை இந்த ரோபோ வெளிப்படுத்தும். பயிற்சி மருத்துவர்கள் இந்த ரோபோவை கொண்டு பயிற்சியில் ஈடுபடும் போது, நோயாளிகள் வலியை எப்படி உணர்வார்கள் என்பது குறித்த அனுபவத்தை பெற முடியும் என்று கருதப்படுகிறது.
மருத்துவர்கள் நோயாளிகளின் வலியை உணர்வது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக நோயாளிகளை கஷ்டப்படுத்தாமல் இந்த பணியை செய்வதற்காக என்று ஒரு ரோபோவை உருவாக்கி உள்ளனர். விரைவில் இந்த ரோபோ விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல் மருத்துவர்கள் நோயாளிகளின் உணர்வை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்க இந்த ரோபோ நோயாளி உதவும் என்றும் கருதப்படுகிறது.
இந்த ரோபோ கண்காட்சியில் மேலும் பல வித்தியாசமான ரோபோக்களும் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் ஒன்று வீட்டு வேலையில் கைகொடுக்கக் கூடிய ரோபோ சேவகன்.
இந்த ரோபோ பல்வேறு விதமான வீட்டு வேலைகளை செய்து முடிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. அதோடு மனிதர்கள் மீது மோதிக் கொண்டால் அதனை உணரும் ஆற்றலும் இந்த ரோபோவுக்கு உண்டு.
வயதானவர்களை கைகொடுத்து தூக்கி விடுவது போன்ற சேவைகளையும் இந்த ரோபோ செய்யும் திறன் படைத்தது. ஜப்பானில் வயதானவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாலும் அவர்களின் தனிமை உணர்வை போக்க ஏற்கனவே ரோபோக்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் மற்றுமொரு புதிய துணைவனாக இந்த ரோபோ வந்திருப்பதாக கருதப்படுகிறது.
டோக்கியோவை சேர்ந்த வசேடா பல்கலைக்கழகம் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது. டூவன்டிஒன் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ சந்தைக்கு விற்பனைக்கு வர மேலும் பல ஆண்டுகள் ஆகும் என்று கருதப்படுகிறது.
அநேகமாக 2015 ஆம் ஆண்டு வாக்கில் இந்த ரோபோ விற்பனைக்கு வரும். அதற்கு முன்பாக இந்த ரோபோ மேலும் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த ரோபோ காலை உணவையும் பரிமாறக் கூடிய திறன் படைத்தது.
இந்த கண்காட்சியில் மேலும் பல ரோபோக்கள் அரங்கேற்றப்பட்டாலும் இந்த கண்காட்சிக்கு தொடர்பில்லாத ஒரு வித்தியாசமான ரோபோவை பற்றி தெரிந்து கொள்ளலாம். ரோபோ கித்தார் எனும் பெயர் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தானியங்கி கித்தார் அது. இந்த கித்தாரில் என்ன விசேஷமென்றால் அது தன்னைத்தானே ஸ்ருதி சேர்த்துக் கொள்ளும் என்பதுதான்.
கித்தாரை இயக்குவதில் தேர்ச்சி இல்லாதவர்கள் இதனை பயன்படுத்துவது எளிது. இசைக்கப்படும் பாடலுக்கு ஏற்ப அது தன்னைத்தானே ஸ்ருதி அமைத்துக் கொள்ளும்.
கிப்சன் எனும் ஆய்வாளர் 15 ஆண்டு கால ஆய்வின் முயற்சியாக இந்த ரோபோ கித்தாரை வடிவமைத்துள்ளார்.
முதல் கட்டமாக சுமார் 4 ஆயிரம் கித்தார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இது விற்பனைக்கு வருகிறது. இசைப் பிரியர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
——