நீங்கள் மார்க்கெட்டிற்கோ அல்லது உங்கள் தெருக்கோடியில் உள்ள கடைக்கோ சென்று காய்கறி வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது தக்காளிக்கும், கத்திரிக் காய்க்கும் கடைக்காரர் சொல்லும் விலையை கேட்டு நீங்கள் திகைத்து போகிறீர்கள்.
.
அன்னிச்சையாக செல்போனை கையில் எடுத்து பார்க்கிறீர்கள். உடனே கடைக்காரர் சொன்ன விலை யிலிருந்து கொஞ்சம் இறங்கி வருகிறார். நீங்கள் மறுபடியும் செல் போனை பார்க்கிறீர்கள். திருப்தியோடு கடைக்காரர் சொன்ன விலைக்கு காய்கறிகளை வாங்கிக் கொண்டு நடையை கட்டுகிறீர்கள்.
அடுத்ததாக மளிகைக்கடைக்கு செல்கிறீர்கள். அங்கேயும் உங்கள் செல்போனை கையில் எடுப்பதை பார்த்ததும் கடைக்காரர் சரியான விலையை சொல்கிறார். செல்போனை எடுத்தவுடன் அப்படி என்ன மாயம் நிகழ்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். செல்போன் மூலம் தெரிய வரும் தகவல்களால்தான் இந்த மாற்றம் நிகழ்கிறது.
இப்போதைக்கு இந்தியர்களாகிய நாம் இந்த வசதியை அனுபவிக்க வாய்ப்பில்லை. ஆனால் இத்தாலியில் உள்ள நுகர்வோருக்கு இந்த வசதி சாத்தியமாகி இருக்கிறது. அதாவது சந்தையில் நிலவும் சரியான விலை என்ன? என்பதை தெரிந்து கொண்டு கடைக்காரர்கள் சொல்லும் விலை நியாயமானதா? அல்லது அநியாய மானதா? என்பதை தெரிந்து கொள்ளும் வசதி.
தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்று சொல்லப்படுவதுண்டு. இத்தாலியில் அதிகரித்து வரும் விலைவாசியின் விளைவாக, நுகர் வோருக்கு ஆசுவாசமளிக்கும் சேவையை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டு அரசே இந்த சேவையை வழங்க முன் வந்திருக்கிறது.
கடந்த சில மாதங்களாக உணவுப் பொருட்களின் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. பல பொருட்களின் விலை எக்கச்சக்கமாக ஏறி இருக்கிறது. இதில் குறிப்பிட்ட ஒரு நாட்டில் மட்டுமே உள்ள நிலையாக இல்லாமல் உலகம் முழுவதும் இப்படித்தான் இருக்கிறது.
உணவுப் பொருட்கள் நெருக்கடி காரணமாக பல நாடுகளில் விலை வாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியும் இதற்கு விதிவிலக்கல்ல.
அந்நாட்டிலும் மளிகைப் பொருட்கள், உணவு தானியங்கள் மற்றும் காய்கறியின் விலை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
அதுமட்டுமல்ல, நாளுக்கு நாள் இந்த பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. விலைவாசி உயர்வு சந்தை நிலவரத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்றாலும், இதனை பயன்படுத்திக் கொண்டு வியாபாரிகள் விலையை இன்னும் கொஞ்சம் கூடுதலாக உயர்த்துவது உண்டு.
நுகர்வோர் இந்த கூடுதல் விலையை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு உண்டா? அப்படி தெரிந்து கொள்ள முடிந்தால் பேரம் பேசி, விலையை குறைக்கலாம். அல்லது புறக்கணித்து விட்டு வேறு கடைக்கு சென்று விடலாம். ஆனால் சந்தையில் அப்போதைய உண்மையான விலை என்னவென்பதை நுகர்வோர் அறிந்து கொள்வது எப்படி?
இந்த கேள்விக்கான பதிலைதான் இத்தாலிய அரசு வழங்கி இருக்கிறது. அந்நாட்டு விவசாயத்துறை அமைச்சகம் நுகர்வோர் அமைப்பு களோடு இணைந்து, எஸ்எம்எஸ் மூலம் அப்போதைய சந்தை விலை நிலவரத்தை அறிந்து கொள்ளும் சேவையை அறிமுகம் செய்திருக்கிறது.
இதன்படி நுகர்வோர் அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டு தாங்கள் வாங்க விரும்பும் காய்கறி அல்லது மளிகை சாமானை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பினால் அன்றைய தினம் இத்தாலியில் பல்வேறு சந்தைகளில் என்ன விலைக்கு அந்த பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன என்பதை எஸ்எம்எஸ் மூலம் அரசு தெரிவிக்கும்.
அந்த விலை விவரத்தை கையில் வைத்துக் கொண்டு கடைக்காரர் சொன்ன விலையோடு ஒப்பிட்டு அது அதிகபடியானதா?, அதிகபடியானது என்றால் எந்த அளவுக்கு அதிகமானது என்பதை நுகர்வோர் தெரிந்து கொள்ள முடியும். இந்த தகவல் கையிலிருக்கும்
தைரியத்தோடு வியாபாரியோடு வாதிடலாம். பேரம் பேசலாம், அல்லது நடையை கட்டலாம்.
சாதாரணமாக விலையை குறைப்ப தற்காக வாதிடும் நுகர்வோரை விட சந்தையில் நிலவும் விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு வாதிடும் நுகர்வோரிடம் வியாபாரி அடாவடியாக நடந்து கொள்ள வாய்ப்பில்லை.
எனவே நியாயமான விலைக்கே அவர் பொருட்களை விற்க வேண்டி வரும். சந்தையில் தேவை மற்றும் உற்பத்திக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் விலை நிலவரத்தை நுகர்வோர் தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் பொருட்களை வாங்குவது பற்றி முடிவெடுக்க உதவுவதே இந்த சேவையின் நோக்கம் என்று இத்தாலிய விவசாய அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அந்நாட்டின் நுகர்வோர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த சேவையை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். விரைவில் இந்த சேவை பெரிய அளவில் பிரபல மாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
சந்தையை பொறுத்தவரை தகவல் களே முக்கிய பங்கு வகிப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். சரியான தகவல்கள் நுகர்வோருக்கு தெரிய வருமானால் விலையும், தரமும் சரியானதாகவே இருக்கும் என்று பரவலாக கருதப்படுகிறது.
இதுவரை கடைக்காரர் சொல்லும் விலையை தவிர வேறு எந்த விவரத்தையும் நுகர்வோர் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. அதற்கு மாறாக தற்போது நுகர்வோர் சந்தை விலை நிலவரத்தை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த எஸ்எம்எஸ் சேவை வழிவகுக்கிறது.

0 Comments on “என்ன விலை அரசே!”
shanthi
இங்க தமிழ் நாட்டுல ரொம்ப காலமா கோயம்பேடு மார்க்கெட் காய்கறி நிலவரம் வருது. ஆனா சென்னைல இருக்குற சிறு வியாபாரிகள் அதுக்கு தகுந்து விலை எல்லாம் விக்கறது இல்ல. கேட்டா எங்களுக்கு கட்டுபடி ஆகாது என்று சாதாரணமா சொல்லிடுவாங்க.
வடுவூர் குமார்
வித்தியாசமான/தேவையான அனுகுமுறை.
இந்தியாவுக்கு வர நீங்கள் சொன்ன மாதிரி வெகுநாட்கள்/வருடங்கள் ஆகலாம்.
butterflysurya
நல்ல பதிவு. பயனுள்ள தகவல்கள். வாழ்த்துக்கள்.
நுகர்வோர் உரிமைகள்
அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடி 15 மார்ச், 1962 அன்று அமெரிக்கப் பாராளுமன்றத்தில் நுகர்வோர் உரிமைக்காக குரல் கொடுத்தார்.
அந்த நாளின் நினைவாக 15 மார்ச் 1983 அன்று முதல் ‘சர்வதேச நுகர்வோர் உரிமை தினம்’ கடைப்பிடிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல்- 4, 1985 அன்று நுகர்வோர் பாதுகாப்பிற்கு சர்வதேச வழிமுறைகளை அமல்படுத்தியது.
*நுகர்வோருக்குப் பாதுகாப்பு உரிமை
* தகவல் அறிவதற்கான உரிமை
* தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
* தங்கள் கருத்தை வெளியிடுவதற்கான உரிமை
* அடிப்படைத் தேவைகளின் திருப்தி பற்றிய உரிமை
* இழப்பை ஈடுசெய்ய கோரும் உரிமை
* கல்வி கற்பதற்கான உரிமை
* சுகாதாரமான சுற்றுசூழலுக்கான உரிமை
என்னும் அடிப்படை விதிமுறைகளின் அடிப்படையில் நுகர்வோர் சட்டங்கள் பல்வேறு நாடுகளில் இயற்றப் பட்டு அமல் படுத்தப் படுகிறது.
காலாவதியான பொருட்களை விற்பது, அதிக விலைக்கு விற்பது, எடை, அளவு குறைவாக விற்பது, போலியான பொருளை விற்பது ஆகியவை நுகர்வோருக்கு எதிரான குற்றங்களாகும்.
Diwakar
Adhellam sari, electionla endha katchi evlo kudukkurangannu edhavadhu SMS varuma?