“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கொண்டு வந்து சேர்ப்பீர் கிளிக் செய்த காட்சிகளை எல்லாம்”- மகாகவி பாரதி இன்று இருந்தால் இப்படி பாடியிருக்க வாய்ப்பு உள்ளது. பாரதி பாடாமலேயே இன்று சாமான்ய புகைப்படக்காரர்கள் இதனை தான் செய்து கொண்டிருக் கின்றனர். ஆனால், தமிழகத்தின் பங்கு தான் அந்த அளவிற்கு ஈடுகொடுக்க கூடியதாக இல்லை.
.
எனவே புகைப்பட ஆர்வம் கொண்ட சாமான்ய தமிழர்கள், மாநிலத்தின் பிரசித்தி பெற்ற இடங்களுக்கு எல்லாம் சென்று புகைப்படங்களை கிளிக் செய்து அவற்றை ஃபிளிக் கரில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இப்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தொடங்கி, மணி முத்தாறு அணைவரை வள்ளுவர் கோட்டம் தொடங்கி, குமரி முனை வள்ளுவர் சிலை வரை எல்லா காட்சிகளையும் கிளிக் செய்து, ஃபிளிக்கர் இணைய தளத்தில் சேர்த்து விட வேண்டும்.
புகைப்பட பகிர்வு இணைய தளமான ஃபிளிக்கரில் இப்போதே கூட, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களை இடம் பெற வைத்து வருகின்றனர். உதாரணத்திற்கு வள்ளுவர் கோட்டம் தொடர்பாக ஃபிளிக்கர் தளத்தில் 94 படங்கள் பட்டியலிடப் பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தொடர்பாக 271 படங்கள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில், சித்தனவாசல் ஓவியம், கன்னிமாரா நூலகம் என தமிழகத்தில் உள்ள எந்த இடத்தை குறிப்பிட்டு தேடினாலும், ஃபிளிக்கரில் நூற்றுக்கணக்கான படங்களை காணலாம். ஆனால் இது போதவே போதாது.
நூறு கோடிக்கும் அதிகமான புகைப்படங்களின் இருப்பிடமாக திகழும் ஃபிளிக்கர் இலக்கணப்படி, ஒரு பிரபலமான இடம் என்றால், ஆயிரக்கணக்கான படங்கள் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ரோமில் உள்ள புகழ் பெற்ற சரித்திர கோட்டையில் எடுக்கப்பட்ட படங்கள் ஃபிளிக்கரில் 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கின்றன. பாரிசின் புகழ் பெற்ற ‘தோட்ரே டோம்’ கட்டிடம் தொடர்பாக 80 ஆயிரம் புகைப்படங்களும், அமெரிக் காவின் பிரசித்தி பெற்ற சுதந்திர தேவி சிலைக்கு 60 ஆயிரம் புகைப்படங்களும் இருக்கின்றன.
இந்த எண்ணிக்கையோடு புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கான 271 புகைப்பட எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என்பது (அ) நாம் எந்த அளவுக்கு இன்னமும் புகைப்படங்களை எடுத்து ஃபிளிக்கரில் சேர்க்க வேண்டும் என்பதும் புரியும்.
இதனை ஒரு முக்கிய குறிக் கோளாகவே கொண்டு செயல் படலாம் என்றாலும், உண்மையில் அந்த அளவுக்கு கஷ்டப்பட வேண்டியதில்லை. மகிழ்ச்சியாக சுற்றுலா செல்லுங்கள். கிரிவலம் செல்லுங்கள். கையில் கேமிரா இருந்தால் அங்கு காணும் காட்சியை கிளிக் செய்யுங்கள். (நீங்கள் கிரிவலம் செய்வது போன்ற படமாக கூட இருக்கலாம்) உங்கள் பெயரில் ஃபிளிக்கரில் ஒரு முகவரி கணக்கு தொடங்கி, அந்த படங்களை இடம் பெற வையுங்கள். இது ரொம்ப சுலபமானது, தவிர ஃபிளிக்கர் சேவை இலவசமானதும் கூட!
இப்படியாக நாம் தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களின் ஆயிரக்கணக்கான புகைப்படங்களை ஃபிளிக்கரில் சேர்த்தாக வேண்டும்! அவை திருக்கோயிலாகவோ, பிரபலமான சுற்றுலா தலமாகவே தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சென்னை நகரின் மூளை முடுக்குகளை எல்லாம் கூட வளைத்து வளைத்து படம் எடுக்கலாம். ஆயிரக்கணக்கான படம் ஃபிளிக்கரில் நம்மூர் தொடர்பாக இருக்க வேண்டும் என்பதே விஷயம்.
தமிழகம் மட்டும் அல்ல. டெல்லி, ஆக்ரா, பெல்லாரி, கவுகாத்தி, ஸ்ரீநகர், அந்தமான் என இந்தியா முழுவதும் ஃபிளிக்கரில் ஆயிரக்கணக்கில் படங்கள் ஒவ்வொரு இடத்திற்கும் இருந்தால் நல்லது. ஃபிளிக்கரில் படங்களை தேடும் போது, தமிழகம் தொடர்பாக ஆயிரக்கணக்கான படங்கள் இருக்க வேண்டும் என்று சொல்வது, எண்ணிக்கை கணக்கிற்காக அல்ல! ஃபிளிக்கர் மூலம் சாத்தியமாகும். அற்புதத்தின் பலனை நாமும் பெற வேண்டும் என்பதற்காக தான்.
உண்மையில், தமிழகம் என்றில்லை இந்தியா என்றில்லை, உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆயிரமாயிரம் படங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு ஒரு சில படத்தை (அ) சில நூறு படங்களை இடம் பெறச் செய்தால் போதும், தானாக ஆயிரக்கணக்கில் படங்கள் சேர்ந்து விடும்.
இதையே ஒரு வேலையாக வேட்கையோடு செய்து வந்தால், குறிப்பிட்ட இடத்திற்கான ஆயிர மாயிரம் படங்களை சீக்கிரத்தில் சேர்த்து விடலாம். இதெல்லாம் எதற்காக? ஏற்கனவே ஒரே இடம் தொடர்பான (அவை எத்தனை அற்புதமாக இருக்கட்டுமே) நூற்றுக்கணக்கான, மற்றும் ஆயிரக்கணக்கான புகைப் படங் களை பார்க்க நேர்வதால் திகட்டிப் போய் விடுகிறதே என நீங்கள் நினைக்கலாம். சமபங்கு களில், ஒரே மாதிரி படங்களை அடுத்தடுத்து பார்க்கும் போது, எப்படி வரிசைப்படுத்தி, வகைப்படுத்துவது என்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறதே என்றும் நினைக்கலாம்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியின் விளைவாக, ஃபிளிக்கர் படங்களுக்கு முப்பரிமாண தன்மை கொடுக்கும் மாயம் சாத்தியமாகி உள்ளது. அதன் விளைவாக ஃபிளிக்கர் தளம் ஒரு காட்சி கலை களஞ்சி யமாக உருவாக வாய்ப்பு உருவாகி உள்ளது. அதனால் தான் மாமல்லபுரம் காட்சிகளை எல்லாம் பல கோணங்களில் கிளிக் செய்து ஃபிளிக்கரில் சேர வேண்டும் என்னும் கருத்தை முன் வைக்கிறோம்! ஏன்? என்று பார்ப்போம்…..