கலைகள் இல்லாமல் இயக்கங்கள் இருந்த காலம் தான் உண்டா? இல்லை, இயக்கங்கள் இல்லாமல் இருந்த காலம் தான் உண்டா? கலைகள் என்றால், இசை கவிதை, நாடகம், சுவரொட்டிகள் எல்லாமும் தான்.
சுவரொட்டிகளை கலையின் வடிவமாக சொல்வதில் பலருக்கு தயக்கம் இருக்கலாம்.
.
ஆனால் இந்த கருத்தை மீறி, சுவரொட்டிகள் சமூக மாற்றத்துக்கான இயக்கங்களின் முக்கிய பிரச்சார ஆயுதமாக திகழ்கின்றன. பிரச்சாரத்தின் நேரடி கலைத்தன்மையின் கழுத்தை நெரிக்காமல், அதன் தீவிரத்திற்கு வலு சேர்ப்பதாகவே இருக்கிறது.
அதிலும் குறிப்பாக அரசியல் நோக்கம் கொண்ட சுவரொட்டிகள் கலைத்தன்மையின் காட்சிகளாக மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் அமைதிக்காகவும், நியாயத்திற்காகவும் நடைபெற்ற போராட்டத்தின் நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
எச்சரிக்கை, தோழமை, வேண்டுகோள் என எத்தனையோ விதமான உணர்வுகளோடு சுவரொட்டிகள் இயக்கச் செய்திகளை தாங்கி நின்றிருக்கின்றன. சமகாலத்தில் பார்க்கும் போது இவற்றின் கலை நுட்பம் மற்றும் முக்கியத்துவம் கண்ணில் படாமல் போய்விடலாம். ஆனால் காலத்தை திருப்பி பார்க்கும் போது, சுவரொட்டிகள், கடந்த காலத்தின் ஒளிக் கீற்றுகளை கண்முன் நிறுத்தி, கால வெள்ளத்தில் மிதக்க வைத்து விடும்.
அந்த காலத்து சினிமா சுவரொட்டிகள் (அ) விளம்பர வாசகங்களை புரட்டிப்பார்த்தாலே, கடந்து போன காலத்தில் கோலோச்சிய கலாச்சார போக்குகளும், வெகு ஜன உணர்வும் மனத்திரையில் நிழலாடும். அப்படி இருக்க சரித்திர சின்னங்கள் என்பது சொல்லக்கூடிய, போராட்ட அமைப்புகள் மற்றும் அரசியல் இயக்க சுவரொட்டிகளை ஒரு சேர பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்?
மெய் தான்! ஆனால் இந்த சுவரொட்டிகளுக்கு எங்கே போவது என ஏக்கம் கலந்த குரலில் ஆர்வத்துடன் கேட்பவர் நீங்கள் என்றால், இந்த விவரங்களையும், அதன் தொடர்ச்சியாக வரும் “ஜிஎஸ்பிஜி’ அமைப்பு பற்றிய விவரமும் உங்களுக்கானது தான்!.
ஜிஎஸ்பிஜி என்பது சென்டர் பார் ஸ்டடி ஆப் பொலிடிகல் கிராபிக்ஸ் என்று அமைப்பின் சுருக்கம். அதாவது அரசியல் சுவர் சித்திரங்களின் ஆய்வுக்கான மையம் என்று பொருள். பெயரில் இருந்ததே புரிந்து கொள்ளக்கூடியது போலவே இந்த அமைப்பானது வரலாற்று மற்றும் சமகால சுவரொட்டிகளை சேகரித்து பாதுகாத்து அவற்றின் உட்பொருளை ஆய்வு செய்து வருகிறது. சமுக மாற்றத்தின் அடையாளமாக சுவரொட்டி விளங்குவதை இந்த அமைப்பின் ஆய்வு அழகாக விளக்குகிறது.
சேகரிப்பும் ஆய்வு மட்டுமே இந்த அமைப்பின் நோக்கம் அல்ல! இவற்றின் கலைத்தன்மை மூலம், மக்களிடம் போராடும் குணத்தை தூண்டி விடுவது, இந்த அமைப்பின் பிரதான நோக்கம். சுவரொட்டியை சேகரிக்க என பல்வேறு முறைகளையும், திட்டங்களையும் கொண்டிருக்கும் இந்த அமைப்பு, ரஷ்ய புரட்சி காலத்தில், கம்பனியை கனலேந்திய சுவரொட்டிகள் உட்பட உலகம் முழுவதும் தோன்றிய பல்வேறு இயக்கங்கள் சார்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை சேகரித்து வைத்திருக்கிறது.
இவற்றில் பெரும்பாலானவற்றை வேறு எங்குமே பார்க்க முடியாது. சுவரொட்டிகளிலும் தான் எத்தனை ரகங்கள், காகிதத்தில் அச்சிட்டவை, பட்டுத்துணியில் தீட்டப்பட்டவை, மரத்தில் செதுக்கப்பட்டவை, நகலெடுக்கப்பட்டவை என்று எண்ணற்ற வகைகள் இருக்கின்றன. எல்லாதரப்பு மக்களுடனும் நேரிடையாக தொடர்பு கொண்டு செய்தியை சொல்லி விடுவது இவற்றின் பொதுத்தன்மை.
இவை சிந்திக்கவும் தூண்டும். செயல்படவும் தூண்டும். தங்கள் காலத்தில் பரிமுதல் செய்யப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட சுவரொட்டிகளும் உண்டென்பதால், அதனையும் மீறி, சேகரிக்கப்பட்ட சுவரொட்டிகள் காலப்பெட்டகமாக இந்த அமைப்பால் உண்டாக்கப்பட்டிருக்கிறது
வரலாறு கண்ட இயக்கங்களையும் கட்சிகளையும் இந்த சுவரொட்டிகளின் மூலம் பார்க்க முடியும். மூக மாற்றத்துக்கு கொடி தூக்கிய இயக்கங்கள் முதல், போர் எதிர்ப்பை வெளிப்படுத்திய இயக்கங்கள் வரை பல அமைப்புகளின் கட்சிகளாக இவற்றை காணலாம்.
சுவரொட்டி ஆய்வு அமைப்பு, இந்த சுவரொட்டிகளை அருங்காட்சியமாக வைத்து பாதுகாத்து வருவதற்கு, பல நகரங்களில் கண்காட்சியை நடத்தி வருகிறது. மேலும் தனது இணையதளத்தில், இவை இணைய கண்காட்சியாகவும் வைக்கப்பட்டிருக்கின்றன.
———-
link;
www.politicalgraphics.org