இப்படியும் ஒரு தேடியந்திரம்-2

மனித மாமிச தேடியந்திரம்’ என்று சொல்லும் போதே நெருடலை ஏற்படுத்தலாம். இந்த நிகழ்வே நெருடலானது என்பதே விஷயம். பொது இடத்தில் தரும அடி போடுவது போல இன்டெர்நெட் உலகில் தவறுசெய்ததாக கருதப்படுபவர் மீது எல்லோரும் பாயும் நிகழ்வாகவே இது அமைகிறது.
.
சீன பூகம்பத்திற்கு பிறகு மட்டும் 5 பேர் இப்படி மனித மாமிச தேடியந்திர தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர். பள்ளி மாணவர்கள் சிலர் பூகம்பத்தால் பள்ளிக் கட்டிடம் இடிந்து தரை மட்டமாகி இருந்தால் பள்ளிக்கு விடுமுறை கிடைத்திருக்குமே என்று பேசி அந்தக் காட்சியை பதிவு செய்து இன்டெர்நெட்டில் பதிவேற்றினர். அவ்வளவுதான், பல இணைய வாசிகள் ஆவேசமடைந்து அந்த மாணவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து, இன்டெர் நெட்டில் வெளியிட்டு அவர்களை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு இழிவுபடுத்தி விட்டனர். அதோடு, இமெயில் மூலமும் தாக்குதல் தொடுத்தனர். விளைவு அடுத்த சில நாட்களிலேயே அந்த மாணவர்கள் வேறு ஒரு வீடியோவை தயார் செய்து, “”நாங்கள் நாட்டை மிகவும் நேசிக்கிறோம், எங்கள் தவறை சுட்டிக்காட்டி யவர்களுக்கு மிக்க நன்றி” எனக் கூறி, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

இதே போல ஹாங்காங் நகரைச் சேர்ந்த மாணவி தன்னுடைய வலைப்பதிவில் பூகம்பம் பாதிக்கப் பட்டவர்கள் மீது பரிவு இல்லை என்று எழுதியதை அடுத்து, கடும் கண்டனத் திற்கு ஆளானார். அந்த கண்டனக் கணைகள் இன்டெர்நெட் முழுவதும் எதிரொலித்தன. இதன் பயனாக அந்த மாணவி பள்ளி தலைமை ஆசிரியரால் எச்சரிக்கப்பட்டார். கடைசியில் அவர் வலைப்பதிவு தளத்தை மூட வேண்டியிருந்தது.

ஆக சீனாவில் இன்டெர்நெட்டில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளி யிட்டால் சக இணையவாசிகளின் கோபத்தினை சந்தித்தாக வேண்டும். இன்டெர்நெட் தரும் சுதந்திரத்தை பயன்படுத்திக் கொண்டு எந்த கருத்தை வேண்டு மானாலும் வெளிப்படுத்தலாம் என்பதே உலக நடைமுறையாக இருக்கும் போது சீனாவில் மட்டும் இணையவாசிகள் மாட்டிக்கொண்டு விழிக்க நேர்கிறது.

வலைப்பதிவு மூலமே (அ) வீடியோ படத்தின் வாயிலாகவோ தவறாக ஒரு கருத்தை தெரிவித்தால், இணைய வாசிகளின் கூட்டு தாக்குதலுக்கு இலக்காக வேண்டியது தான்! குறிப்பிட்ட அந்த நபர் தொடர்பான அந்தரங்க தகவல்களை எப்பாடு பட்டாவது திரட்டி, பகிரங்கப் படுத்தி அவமானப் படுத்தி விடுகின்றனர். சில நேரங்களில் இணையவாசி களால் வசைபாடப்பட்டு, கொலை மிரட்டல் விடுக்கப்படுவதும் உண்டு!

2006ம் ஆண்டு முதன் முதலில் இந்தப்போக்கு தலைதூக்கியதாக கருதப்படுகிறது.
வாங்ஜீ என்னும் இளம்பெண் தான் செல்லமாக வளர்த்த பூனைக் குட்டியை காலில் போட்டு மிதிப்பது போன்ற காட்சியை கேமிராவில் பதிவு செய்து அந்த வீடியோவை இன்டெர்நெட் மூலம் பகிர்ந்த கொண்டார். மண வாழ்க்கையில் தோல்வி அடைந்த அந்த பெண் தனது விரக்திக்கு இப்படி வடிகால் தேடிக் கொண்டார். ஆனால் இந்த கொடூர காட்சியை பார்த்த விலங்கின ஆர்வலர்கள் கொதித்துப் போய் விட்டனர்.

பொதுவாக இதுபோன்ற வீடியோவை வெளியிடுபவர்கள் தங்கள் அடை யாளத்தை மறைத்துக் கொண்டு கண்ணாமூச்சு காட்டு வார்கள். உண்மையில் தாங்கள் யார் என்பதை ரகசியமாக வைத்துக் கொள்ள முடிவதே பலரை மனம் போன விதமாக நடந்து கொள்ள வைக்கிறது. ஆனால் இந்த வீடியோவைப் பார்த்த உடனே இணையவாசிகள் தேடுதல் வேட்டையில் இறங்கி, அவரைப் பற்றிய தகவல்களை திரட்டி பகிரங்கப்படுத்திவிட்டனர். அதன் பிறகு இன்டெர்நெட் எங்கும் அவருக்கு எதிரான ஆவேச குரல்கள் ஒலிக்கவே

அந்தப்பெண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். விரக்தியின் உச்சியில் இப்படி செயல்பட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
இதன் பிறகு “சைனாபவுண்டர்’ என்னும் வலைப்பதிவாளர் இணைய வாசிகளின் கோபத்திற்கு இலக்கானார்.

ஹாங்காங் நகரில் வசித்து வந்த பிரிட்டிஷ்காரரான இவர், சீனாவில் தான் சந்தித்த பெண்களுடன் உறவு கொண்டவிதம் பற்றி வெளிப் படையாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வந்தார். இந்த பதிவுகளில் அவர் சீன பெண்கள் பற்றி மோசமான விதமாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சீன இணையவாசிகள் மீண்டும் பொங்கி எழுந்துவிட்டனர். அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததோடு “சைனா பவுண்டர்’ என்னும் புனைப் பெயர் பின்னே மறைந்திருக்கும் நபரின் அடையாளத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர். விளைவு, அந்த நபர் வலைப்பதிவை நிறுத்திக் கொண்டார்.

இதன் பிறகு பலமுறை இப்படி இணையவாசிகள் தவறு செய்த வர்களை தட்டிக்கேட்கும் விதமாக செயல்படத் தொடங்கிவிட்டனர். பொது கோபத்திற்கு ஆளாகும் நபர்களின் அந்தரங்க விவரங்களை திரட்ட இணையவாசிகள் தேடலில் ஈடுபடுவது பிரபலமாகி இந்த போக்கு “மனித சதைக்கான தேடல்’ என குறிப்பிடப்பட்டது. இதுவே ஆங்கிலத்தில் மனித மாமிச தேடியந்திரம் என பொருள் படும் வகையில் மொழி பெயர்க்கப் பட்டது.

இணையவாசிகளின் இந்தப் போக்கு சைபர் விழிப்புணர்வு என்றும் குறிப்பிடப்படுகிறது. சீனாவுக்கு மட்டுமே உரித்தான இணைய நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது.
சீனாவில் குற்றங்களை தண்டிப் பதில் அரசு தரப்பிலான மெத்த னத்தால் அதிருப்தி அடைந்துள்ள சராசரி சீனர்கள் இப்படி சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதா கவும் விளக்கம் தரப்படுகிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *