யூடியூப் நிபுணர்-1

தேர்தல் நேரத்தில், வாக்காளர்கள் தங்களை பற்றி என்ன நினைக் கின்றனர் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வேட்பாளர்களுக்கு இருப்பது இயற்கையானதுதான்! ஆனால், ஒரு தனிப்பட்ட வாக்காளர் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என வேட்பாளர்கள் அதிலும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்றால் வியப்பானது தானே!
.
அதே போல் தேர்தல் நேரம் என்றால் கொஞ்சம் இறங்கி வந்து, வாக்காளர்களின் வீடு தேடி வருவதும் கூட இயல்பானதுதான். ஆனால் வேட்பாளர்கள் தனிப்பட்ட ஒருவரின் அறையை தேடி வந்து அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக இருக்கின்றனர் என்பது அதைவிட வியப்பானது தானே!

அமெரிக்காவின் “ஜேம்ஸ் கோட்டகி’ தான் இப்படி வேட்பாளர்கள் மத்தியில் தனி மதிப்பு பெற்றவராக இருப்பவர். உடனே ஜேம்ஸ் கோட்டகி, 60 வயதுக்கு மேல் மதிக்கத்தக்கவராக தோற்றம் தருபவராகவும், அவர் பிரபலமான அரசியல் விமர்சகர் (அ) ஆலோசகராக இருப்பார் என்றும் நினைக்கத் தோன்றும்! இதுவும் இயல்பானது என்றாலும், உண்மை அதுவல்ல! காரணம் ஜேம்ஸ் கோட்டகி வயதானவரும் அல்ல, அரசியல் ஆலோசகரும் அல்ல. அவர் 23 வயதே ஆன அமெரிக்க வாலிபர்.

எப்படி பார்த்தாலும் சராசரி வாலிபர் என்றாலும், மற்ற எந்த வாலிபருக்கும் இல்லாத மதிப்பும், செல்வாக்கும் கோட்டகிக்கு கிடைத்திருக்கிறது. கோட்டகி சொல்வதை கேட்கவும், அவர் கேட்டதற்கு பதில் சொல்லவும் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் பலர் தயாராக இருக்கின்றனர். இதுவரை இரண்டு வேட்பாளர்கள் அவரது கல்லூரி அறைக்கே வந்து பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டிகளை அமெரிக்கர்களும், அந்நாட்டு மீடியாவும் ஆர்வத்தோடு கவனித்து வருகின்றன.

உலக புகழ் பெற்ற பொருளாதார பத்திரிகையான “எக்கனாமிஸ்ட்’, அவரை உலகின் இளம் அரசியல் நிபுணர் என்று வர்ணித்துள்ளது. எப்படி கோட்டாகிக்கு இப்படி ஒரு செல்வாக்கு வந்தது? அரசியல் மீதான ஆர்வம் கோட்டகியின் பலமாக இருக்கிறது என்றாலும், அவரது அரசியல் செல்வாக்கை புரிந்து கொள்ள அது போதுமானதல்ல.

என்னதான் அரசியலில் ஆர்வமும், ஈடுபாடும் இருந்தாலும் இளைஞர்கள் தொண்டன் என்னும் அந்தஸ்தை மட்டும் தானே பெற முடியும். அப்படி இருக்க, கோட்டகிக்கு மட்டும் இப்படி ஒரு நட்சத்திர அந்தஸ்து வர காரணம் என்ன?

எல்லாம் யூடியூப் செய்த மாயம் என்று இதற்கு பதில் சொல்லி விடலாம். ஆம் வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பை தனது அரசியல் பார்வையை முன்வைக்க கோட்டகி பயன்படுத்திக் கொண்ட விதமே அவரை அரசியல் விமர்சகர் அந்தஸ்திற்கு உயர்த்தியது.

இளமைக்கே உரிய துடிப்புடனும், உற்சாகத்துடனும், கேலியும் கிண்டலும் கலந்த குரலில் யூடியூப்பில் அவர் எழுப்பிய குரலே வேட்பாளர்களை திரும்பி பார்க்க வைத்தது. அதன் பிறகு அவர் யூடியூப் சார்ந்த அரசியல் நிபுணராக உருவாகி விட்டார்.

2007 ஜனவரி மாதத்தில், அவர் யூடியூப்பில் பதிவேற்றிய வீடியோ காட்சியிலிருந்து இந்த பயணம் துவங்கியது. யூடியூப் மூலம் வீடியோ காட்சிகளை பரிமாறிக் கொள்வது சுலபமாகவும், பிரபலமாகவும் இருப்பதால், ஒவ்வொரு துறையை சேர்ந்தவர்களும், யூடியூப் வீடியோவை பயன்படுத்திக் கொள்ள துவங்கிய நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களும் “யூடியூப்’ களத்தில் குதித்தனர்.

2004ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இன்டெர்நெட் முக்கிய ஆயுதமாக விளங்கியதால், அமெரிக்க அரசியல்வாதிகள் 2008 தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இன்டெர்நெட் ஆயுதத்தை பயன்படுத்திக் கொள்வதில் பின் தங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

“யூடியூப்’ மூலம் எண்ணற்ற வீடியோ கோப்புகள் லட்சக்கணக்கான இணையவாசிகளை கவர்ந்து கொண்டிருந்த நிலையில் தாங்களும் யூடியூப்பில் தோன்றுவது சிறப்பாக இருக்கும் என்றே தேர்தல் களத்தில் இருந்த பல வேட்பாளர்கள் நினைத்தனர்.

முதலில் ஹிலாரி கிளிண்டன், பரெக் ஓபமா போன்ற ஜனநாயக கட்சி பிரமுகர்கள், யூடியூப்பில் தோன்றும் வீடியோ கோப்புகளை பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொண்டனர். பத்திரிகைகள் இதனை புதுமையான முயற்சி என்று வர்ணித்து யூடியூப் பிரச்சார முயற்சி பற்றி பக்கம் பக்கமாக எழுதவே, மற்ற வேட்பாளர்களும் விழித்துக் கொண்டனர். விளைவு மேலும் பல வேட்பாளர்கள் யூடியூப்பில் தோன்றி வாக்காளர்களை கவர முயன்றனர்.

யூடியூப் லட்சக்கணக்கில் வாக்கு களை பெற்றுத் தருகிறதோ, இல்லையோ யூடியூப்பில் பயன் படுத்திக் கொள்ள தவறினால், போட்டியாளர்கள் முந்திக் கொண்டு விடுவார்கள் என்பதை உணர்ந்த அவர்களுக்கு தூண்டுகோலாக அமைந்தது. அது மட்டும் அல்லாமல், அரசியல் என்றாலே பாராமுகம் காட்டும் இளம் வாக்காளர்களை கவர யூடியூப் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது.

அதனால் ஹிலாரியில் தொடங்கி, பெரும்பாலான வேட்பாளர்கள் யூடியூப்பிற்கு படையெடுத்தனர். யூடியூப் பிரச்சார வீடியோ படங்களை அலசி ஆராய்வதில் பத்திரிகைகளும், செய்தி தளங்களும் ஈடுபட்டாலும், இவற்றின் மத்தியில் கோட்டகியின் குரலுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது. அவரது குரல் எடுபட்ட விதத்தை நாளை பார்ப்போம்….

———–

குறிப்பு;
யு யுஸ் தேர்தலுக்கு முன் எழுதியது)

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *