ஒரு இணைய தளமும்,ஆயிரம் வார்த்தைகளும்

1000words
உலகில் மறக்க முடியாத எத்தனையோ புகைப்படங்கள் இருக்கின்றன. உலகை மாற்றி அமைத்த புகைப்படங்களும் எத்தனையோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் பார்த்து மகிழவும் எத்தனையோ தளங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் வித்தியாசமான தளம் என்று ஆயிரம் வார்த்தைகள் தளத்தை குறிப்பிடலாம். (1000 words) மறக்க முடியாத புகைப் படங்கள் உங்கள் வாழ்க்கையிலும் இருக்கலாம் எனும் நம்பிக்கையில் உருவாக்கப்பட்டுள்ள தளம் இது.
.
ஆகவே இந்த தளத்தில் உள்ளத்தை உலுக்கிவிடக் கூடிய புகைப்படங் களை பார்க்க முடிவதோடு, உங்களை கவர்ந்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கும் அநேக தளங்கள் இருக்கின்றன. பிரபலமான ஃபிலிக்கர் தளம் இந்த பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. புகைப் படங்களை பகிர்ந்து கொள்வதன் மூலமே புதிய உறவுகளை ஏற்படுத்தி கொள்ள வழிசெய்யும் தளமாக இது அறியப்படுகிறது.

இந்தவகை தளங்களில் இருந்தும், ஆயிரம் வார்த்தைகள் தளம் மிகவும் மாறுபட்டது.
காரணம் இந்த தளம், புகைப் படங்களை பகிர்ந்துகொள்ளும் தளம் மட்டும் அல்ல, அதற்கும் மேலானது. புகைப்படம் பகிர்ந்து கொள்ளும் தளங்களில், அதில் உள்ள ஒழுங்கு முறைகளை மீறி, ஏகப்பட்ட புகைப் படங்கள் ஒட்டப்பட்டதுபோல ஒரு உணர்வை தரும்.

புகைப்படங்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ், வெவ்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப் பட்டிருந்தாலும், அவற்றின் எண்ணிக்கை காரணமாகவே ஒரு வித அலுப்பு ஏற்பட்டு, எதை பார்ப்பது, எதற்காக பார்ப்பது என்று தெரியாத குழப்பம் ஏற்படலாம். இந்த இடத்தில்தான் ஆயிரம் வார்த்தைகள் தளம் வேறுபடுகிறது.

இந்த தளத்தில் சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்கள் ஏன் முக்கியமானது என்பதற்கு படத்தை
எடுத்தவர் மட்டும் அல்ல, சமர்ப்பித்தவரும், நீண்ட குறிப்பை எழுதி இணைக்கும் வசதி கொடுக்கப் பட்டுள்ளது.

இந்த அறிமுக குறிப்பே புகைப் படங்களை விசேஷமான தாக்கி தளத் தையும் வேறுபடுத்தி காட்டுகிறது. புகைப்படங்களின் தாக்கம் பற்றி குறிப்பிடும் போது ஒரு படமானது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்று குறிப்பிடுவது வழக்கம். கணக்கற்ற முறையில் எழுத்து மேற் கோள் காட்டப்பட்டிருக் கும் இந்தவாசகத்தை அப்படியே பின்பற்றும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இணையவாசிகள் தங்களை கவர்ந்த புகைப்படங்களை இங்கே இடம் பெற வைத்து, அதனோடு புகைப்படத்தின் தனித்துவத்தை விளக்கும் வகையில், நீண்ட குறிப்பை சமர்ப்பிக்கலாம். ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் அந்த குறிப்பு இருக்க வேண்டும்.
புகைப்படத்தை பார்த்து மகிழ்வதோடு, அதன் முக்கியத்துவம் பற்றி படிக்க முடிவது தனி அனுபவத்தை தரவல்லது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட்சின் என்பவர் இந்த தளத்தை கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். முதலில் தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்துக்காகத்தான் இந்த தளத்தை அவர் அமைத்தார். பின்னர் மற்ற இணையவாசிகளும் பயன்பெற கூடியவகையில் இந்த தளத்தை விரிவுபடுத்தி இருக்கிறார்.

புகைப்படத்தின் மதிப்பை உணர்த்தும் வரிகளை எழுதுவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்களது படங்களையும், கதை களையும் பகிர்ந்து கொள்வதற்கு இந்த தளம் பேருதவியாக இருப்பதாக அவர் கருதுகிறார். தினந்தோறும் ஒரு புகைப்பட கட்டுரையேனும் தவறாமல் இடம் பெற்று விடுவதாக அவர் மகிழ்ச்சியோடு சொல்கிறார்.

புகைப்படங்களை விரும்பு கிறவர்கள் மற்றும் கதைகளை நேசிப்பவர்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளம் 1000 words.net. இதே போல 1000 words.com என்று ஒரு தளமும் இருக்கிறது. இதுவும் புகைப்படங்கள் தொடர்பான தளம் தான். புதுமண தம்பதிகளின் அழகிய படங்களை பார்ப்பதற்கு இந்த தளத்திற்கு விஜயம் செய்யலாம்
————-
link;
1000words.net
————

www.1000words.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஒரு இணைய தளமும்,ஆயிரம் வார்த்தைகளும்

  1. அறிமுகத்திற்கு நன்றி!

    Reply
  2. எங்க இருந்துங்க இந்த மாதிரி பிடிக்கறீங்க!

    உங்கள் பதிவுகள் அனைத்து சூப்பர் ..நல்ல சுவாராசியமா எழுதறீங்க.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *