ஸ்டீவன் ஜான்சன், தன்னுடைய புதிய புத்தகத்திற்கு துணையாக இணைய தளம் ஒன்றை அமைத்து இருக்கிறார். (outside.in) அவரது புத்தகத்திற்கும் அந்த தளத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது.
ஆனால், புத்தகத்தின் உள்ளடக்கத் திற்கும், இணைய தளத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார் ஜான்சன். அதாவது, புத்தகம் முன் வைக்கும் செய்தியின் தொடர்ச்சி யாக இணையதளம் உருவாக்கப் பட்டி ருக்கிறது. அதுவே தளத்தை தனிச் சிறப்புமிக்கதாக ஆக்கி இருக்கிறது.
சொல்லப்போனால், எழுத்தாளர் கள், தங்கள் புதிய புத்தகத்திற்காக இணைய தளம் அமைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் எழுத்தாளர்களின் வழக்கமான புத்தக தளங்களிலும் இருந்து ஜான்சனின் அவுட்செட். இன் தளம் மிகவும் வேறுபட்டது.
எழுத்தாளரின் சுருக்கமான சுய சரிதை, அவருடனான கேள்வி- பதில் புத்தகம் பற்றி அவரது அறி முகம், புத்தகத்திற்கான பாராட்டுக்கள் மற்றும் விமர்சனங்களுடன் அதிலி ருந்து ஒரு பகுதி-
இது தான் புத்தக தளங்களின் இலக்கணம். ஒரு விதத்தில் பார்த்தால் புத்தகத் திற்கான விளம்பரம் போல தான் அநேக தளங்கள் அமைந்தி ருக்கும். புத்தகம் மற்றும் எழுத்தாளர் பற்றிய விவரங்களை வழங்கி குறிப்பிட்ட அந்த புத்தகத்தை வாங்க தூண்டுவது தான் இவற்றின் நோக்கம்.
அதற்கேற்பவே பெரும்பாலான தளங்களில் புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும் என்ற வாசகமும் இடம் பெற்றிருக்கும். இதில் தவறு இருப்பதாகவும் சொல்வதற்கில்லை.
ஆனால் ஜான்சன் அமைத்துள்ள தளம் இவற்றிலிருந்து மாறுபட்டது என்பதே விசேஷம்.
‘பேய் வரைபடம்’ (கோஸ்ட்மேப்) என்னும் தன்னுடைய சமீபத்திய புத்தகத்திற்காக தான் ஜான்சன், ‘அவுட்சைட்.இன்’ என்னும் இந்த தளத்தை அமைத்திருக்கிறார்.
கோஸ்ட் மேப்பின் உள்ள பக்கத்தின் விவரிப்பையோ, ஜான்சனின் சுய புராணத்தையோ இந்த தளத்தில் பார்க்க முடியாது. முழுக்க முழுக்க உள்ளூர் சார்ந்த விஷயங்களை மட் டுமே இதில் காண முடியும். உள்ளூர் விவரங்களை அதற்கே உரிய பொருளில் புரிந்து கொள்வதற்கான தளம் இது என்பதை இதில் உலாவத் துவங்கியவு டனேயே புரிந்து கொண்டு விடலாம்.
தொழில்நுட்பம் சார்ந்த விஷயங் களை எழுதி வருபவர்களில் முக்கிய மான ஒருவர் என்று வர்ணிக்கப் படும் ஸ்டீவன் ஜான்சனின் ஐந்தாவது புத்தகம் ‘கோஸ்ட்மேப்’. 1854-ல் லண்டன் நகரில் காலரா நோய் பரவிய நிகழ்வை அலசி ஆராயும் புத்தகம் இது. காலரா நோயின் பாதிப்பை ஒருவர் புத்தகத்திற்கான பொருளாக தேர்வு செய்ததே ஆச்சர்யமான விஷயம் தான்.
அதிலும் தொழில்நுட்ப உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஜான்சன் இதனை தேர்வு செய்தது இன்னமும் ஆச்சர்யத்தை தரக்கூடியது. ஆனால் புத்தகத்தின் துணை தலைப்பே இந்த ஆச்சர்யத்திற்கான விளக்கத்தை அளித்து விடுகிறது. ‘இது எப்படி அறிவியலை, நகரங்களை நவீன உலகை மாற்றிய மைத்தது என்று புத்தகத்தின் தலைப் பான ‘கோஸ்ட் மேப்’புடன் ஒட்டிக் கொண்டிருக் கும் இந்த வாசகம் புத்தகத்தின் உள்ள பக்கத்தை கோடிட்டு காட்டி விடுகிறது.
19-ம் நூற்றாண்டில் காலரா நோய் எத்தனை பீதியை ஏற்படுத்தியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. லண்டன்வாசிகளை காலரா கிலியில் ஆழ்த்திக் கொண்டிருந்த நிலையில், லண்டன் மருத்துவர் மற்றும் அவரது நண்பர் கையில் வரைபடத்தை வைத்துக் கொண்டு இந்த நோயின் தோற்றுவாயை கண்டுபிடித்து அது மேலும் பரவாமல்தடுத்து நிறுத்தினர். அந்த கதையை தான் ஜான்சன் சொல்லியிருக்கிறார்.
நோயின் பாதிப்பு உச்சத்தில் இருந்த காலத்தில் அது எங்கிருந்து எப்படி பரவுகிறது என்று தெரியாமல் நிலவிய குழப்பத்தின் பின்னணியில் லண்டன் மருத்துவர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையை மிக அழகாக ஜான்சன் விவரிக்கிறார்.
இந்த தேடலில் முக்கிய பங்கு வகித்தது வரைபடம்தான். நோய் பாதித்த இடங்களை வரைபடத் தின் மீது பொருத்தி, அதன் பாதையில் பயணம் செய்து கடைசியாக ஜன சந்தடி மிக்க குடிநீர் குழாயில் இருந்து நோய் கிருமிகள் புறப்பட்டது கண்டறியப் பட்டது.
வரைபடம் சார்ந்த தகவல் கள் நம்மு டைய புரிதலுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்பதை புத்தகத்தின் இறுதியில் புரிந்து கொள்ளலாம். இந்த புத்தகம் எழுதும் போது, ஜான்சனுக்கு இதற்கு துணையாக ஒரு இணையதளம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை.
இத்தனைக்கும் ஏற் கனவே தன்னுடைய இரண்டு புத்த கங்களுக்காக அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. கோஸ்ட்மேப் புத்தகத்திற்காக தனியே இணைய தளத்தை ஏற்படுத்து வது என்பது, ஸ்டீவன் ஜான்சன் திட்டமிடாமல் தற்செயலாக உதித்த எண்ணம்.
இத்தனைக்கும் ஏற்கனவே தன்னு டைய இரண்டு புத்தகங்களுக்காக ஜான்சன் இணைய தளத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
‘எமர்ஜன்ஸ்’ புத்தகம் எழுதிய போது அவர் ‘பிலாஸ்டிக் டாட்காம்’ தளத்தை அமைத்தார். ‘இன்டர்பேஸ் கல்சர்’ எழுதிய போது, ஃபீட் தளத்தை உரு வாக்கினர். இரண்டு தளங்களிடையே மிகவும் வித்தியாசமானவைதான்.
இரண்டுமே புத்தகத்துடன் நேரடி யாக தொடர்பு உடையவை அல்ல. பிளாஸ்டிக் டாட்காம் இணையவாசி களுக்கான விவாத தளமாக துவங்கப் பட்டது.
இன்று இன்டெர்நெட்டில் பெரிதாக பேசப்படும் இணையவாசிகளின் பங்கெடுப்பிற்கு
முன்னோடி தளம் இது. இத்தகைய கருத்தாக்கம் பிரபல மாகாத கால கட்டத்திலேயே ஜான்சன் இந்த தளத்தை துவக்கியது தான் சிறப்பு.
ஃபீட் டாட் காம் இணையஇதழ், கோஸ்ட் மேப் புத்தகத்தை எழுத தொடங்கிய போது இது போன்ற தளத்திற்கான எண்ணம் இல்லா விட்டாலும், புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கும் போது ஜான்சன் மனதில் இதற்கென ஒரு தளம் தேவை என்ற எண்ணம் உண்டானது.
கோஸ்ட்மேப் புத்தகத்திற்கு துணை யாக அவுட்சைடு இன் இணைய தளத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்டீவன் ஜான்சன் மனதில் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. வரைபடமும், பூகோள விவரங்களும் புத்தகத்தின் மையமாக இருந்தன என்பதும் இப்போது இன்டெர்நெட் யுகத்தின் வரைபடம் சார்ந்த பூகோள விவரங்களுக்கு முன் எப்போதுமில் லாத முக்கியத்துவம் பெற்றிருப்பதும் தான் அதோடு, உள்ளூர் சார்ந்த விஷயங்களுக் கான முக்கியத்து வமும், இன்டெர்நெட் உலகில் அதிகரித்திருப்பது, கோஸ் மேப் விவரித்த உள்ளடக் கத்துடன் பொருந்தும் வகையில் இருந்தது.
தேடலில் ஆகட்டும் செய்திகளில் ஆகட்டும் உள்ளூர் வாசனைக்கு தனி மதிப்பு ஏற்பட்டி ருப்பதை ஜான்சன் உணர்ந்தே இருந்தார். இன்டெர்நெட்டில் எல்லைகள் இல்லா உலகம், உள்ளூர் விஷயங்க ளின் தேவையை ஒன்றுமில்லாமல் செய்து வரும் என்று கருதப்பட்டதற்கு மாறாக பல விதங்களில் உள்ளூர் சங்கதிகள் கோலோச்ச தொடங்கியி ருப்பதையும் அவர் அறிந்தே இருந்தார்.
பிலாக் தளங்களை எடுத்துக் கொண்டாலும் உள்ளூர் நிகழ்வுகள் பற்றி பதிவு செய்யும் தளங்கள் அதிகம் இருக்கின்றன. செயற்கைகோள் மூலம் இருப்பிடம் அறியும் சேவையின் உதவியோடு குறிப்பிட்ட இடம் சார்ந்த தகவல்களையும் சேவைகளும் ஒருங்கிணைப்பது சுலபமாகி உள்ளது.
இந்த போக்கை மேலும் ஊக்கப் படுத்த விரும்பிய ஜான்சன், உள்ளூர் செய்தி களை பெறுவதில் உள்ள குறையையும் போக்க விரும்பினார். எந்த ஊராக இருந்தாலும் உள்ளூர் பற்றிய விவ ரங்களுக்கு பஞ்சம் இல்லை. என்றா லும், அவை ஆங் காங்கே சிதறிக்கிடப்பது பிரச் சனையாக தோன்றியது.
எங்கே இருக்கிறது என தேடி அலையும் தேவை இல்லாமல், ஒரே இடத் தில் உள்ளூர் விஷ யங்கள் அனைத்தையும் பெற முடிவது சிறப்பாக இருக்கும் என நினைத்த ஜான்சன் அதற்கான இடமாக அவுட் சைட். இன் தளத்தை அமைத்தார்.
இணையவாசிகளால் இணைய வாசிகளே உருவாக்கும் ரகத்தை சேர்ந்த இந்த தளத்தில் நகரின் குறிப்பிட்ட இடம் (அ) பின்கோடு எண்ணை டைப் செய்தால் போதும் அந்த இடம் தொடர்பான அனைத்து விஷயங்களும் வந்து நிற்கும். உள்ளூர் செய்தியில் தொடங்கி, நகரத்து நிகழ்ச் சிகள், தியேட்டரில் ஓடும் படங்கள், ஓட்டல் பற்றிய விமர்சன குறிப்பு, ரியல் எஸ்டேட் தகவல்கள் என சகலவித மான விஷயங்களும் வந்துவிழும்.
நகரத்தின் நாடித்துடிப்பை அங்கு நடக்கும் உரையாடலை, அதன் மனிதர்களின் உள்ளுணர்வை எடுத் துக்காட்டக் கூடிய வகையில் அந்த விஷயங்கள் அமைந்திருக்கும்.
மிக அழகாக கூகுல் வரைபடத்தின் மீது சம்பந்தப்பட்ட விவரங்கள் தோன் றும்.
நம்தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட பகுதியை பெரிதுபடுத்தி கூடுதல் விவரங்களை பெறலாம். இணையவாசிகள் தங்கள் பங்குக்கு உள்ளூர் விவரங்களையும் இங்கே இடம் பெற வைக்கலாம். தங்களு டைய பிளாக் தளம் (அ) தாங்கள் படித்து ரசித்த உள்ளூர் பிளாக் தளத்தை பரிந்துரைக்கலாம். உள்ளூர் செய்தி (அ) நிகழ்வு பற்றிய தகவலை இடம் பெற வைக்கலாம். சுருக்கமாகச் சொன் னால், உங்கள் நகரை உலா வந்த உணர்வை இந்த தளத்தில் பெற முடியும்.
ஒரு நகருடன் மேலும் நெருக்கம் கொள்ள அதனை சிறப்பாக அறிந்து கொள்ள இந்த தளம் சிறந்த வழி. முதல் கட்டமாக நியூயார்க் உள்ளிட்ட சில அமெரிக்க நகரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அடுத்த கட்டமாக ஐரோப்பா மற்றும் உலக நகரங்கள் இடம் பெற உள்ளன
————-
link;
www.outside.in