ஜன்னல் வழியே வீட்டுக்குள் நுழைவது சரியாக இருக்குமா? இதையே வேறு விதத்தில் கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் செல்ல கதவைத் தவிர மேம்பட்ட வழி இல்லையா?
.
இன்னும் சரியாக இந்த கேள்வியை கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் வருவதற்கான வழியாக அமைந்திருக்கும் கதவு அமைப்பில் குறைகள் உண்டா?அப்படியாயின் அதனை களைய முடியுமா?
இந்த கேள்விகள் அபத்தமாக, விதண்டாவாதமாக தோன்றலாம். நிச்சயம் அப்படியில்லை. தற்போதுள்ள வழியைக் காட்டிலும் மேம்பட்ட ஒரு வழி இருக்கிறதா? என்பதை பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. மறு சிந்தனை இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் வழியையும் கூட மேம் படுத்தி மேலும் சிறப்பானதாக்கலாம்.
அதன் மூலம் நம்முடைய வாழ்க்கையையே கூட மேம்படுத்திக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் உலகம் தரும் சிந்தனை இது. தொழில்நுட்ப நிபுணர்களில் தீர்க்க தரிசிகள் பட்டியலில் இடம்பெறக்கூடியவர்கள் கம்ப்யூட்டருக்கும், நமக்குமான வழியை இன்னும் சிறந்ததாக ஆக்க முடியுமா என ஓயாமல் சிந்தித்து வருகின்றனர்.
தற்போது கம்ப்யூட்டரோடு தொடர்புகொள்ள நாம் பயன்படுத்தும் அமைப்பு, இடைமுகம் அதாவது இன்டர்பேஸ் என்று அழைக்கப் படுகிறது. ஐகான்கள் மற்றும் மவுஸ் கிளிக்குகள் இதில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கர்சரை பிடித்தபடி மேலும் கீழும் இழுப்பதன் மூலமோ பக்க வாட்டில் நகர்த்துவதன் மூலமோ கம்ப்யூட்டரை நம்மால் இயக்க முடிகிறது.
இணையதளங்களில் உலாவும் போதும், இதே இலக்கணம்தான் கை கொடுக்கிறது. ஆனால் கம்ப்யூட்ட ரோடு தொடர்புகொள்ள இதுமட்டும் தான் சிறந்த வழியா? என்று நிபுணர்கள் யோசித்து வருகின்றனர்.
இந்த முறையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை களையக் கூடிய ஆகச்சிறந்த வழி ஒன்றை உருவாக்கும் ஆய்விலும் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த சிந்தனை ஏற்புடையதாக இருந்தால், பிளேயஸ் (playce) தளமும் உங்களை வெகுவாக கவரும்.
அலிபாபா குகையைப்போன்றது இந்த தளம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
உள்ளடக்கத்தில் உன்னதமானது என்று சொல்வதற் கில்லை. ஆனால் இந்த தளத்தில் நுழைந்து அதில் உள்ள தகவல்களை தேடிப்போவது மிகவும் சுவையான அனுபவம்.
மாமுலான தளத்தைப்போல இதில் எடுத்த எடுப்பிலேயே முகப்பு பக்கத்தில் அதில் உள்ள விவரங்கள் அறிமுகமாகிவிடாது. மாறாக, முகப்பு பக்கத்தில் எளிமையான வீடியோ கேம் ஒன்று நம்மை வரவேற்கும்.
நான்கு வடிவம் கொண்ட அந்த கேமில் எதாவது ஒன்றை தேர்வு செய்து விளையாடத் துவங்க வேண்டும். அதன்பிறகு கேமில் ஒவ்வொரு கட்டமாக முன்னேற முன்னேற தளத்தில் உள்ள விவரங்கள் அடுத்தடுத்து வெளிவரத்துவங்கும்.
தடைகளைத் தாண்டி முன்னேறிச் செல்வது போன்ற விளையாட்டு அல்லது எதிராளிகளை அழித்து வெற்றிபெறும் விளையாட்டில் பங்கேற்றபடி இருந்தால் ஒவ்வொரு கட்டத்திலும் தளத்தில் உள்ள விவரங்கள் திரையில் தோன்றிக்கொண்டே இருக்கும்.
புகழ்பெற்ற வீடியோ கேம் வடிவமைப்பாளரான ஸ்டீபன் வால்ஸ் என்னும் இளைஞர் இந்த இணைய தளத்தை வடிவமைத்திருக்கிறார். கம்ப்யூட்டரை பயன்படுத்த தற்போதுள்ள இடை முகம் போதுமானதுதானா என்னும் சிந்தனை யைப்போலவே இணையதளங்களில் உலாவ இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் வடிவமைப்பு ஏற்றதுதானா என்னும் கேள்வியை எழுப்புவதற்காக இந்த இணையதளத்தை அவர் வடிவமைத்திருக்கிறார். ஒரு சோதனை முயற்சி என்று இதனைக்கொள்ளலாம்.
இன்டெர்நெட் தொழில்நுட்ப யுகத்தின் குழந்தையாக இருக்கலாம். ஆனால் அதில் தளங்களை உருவாக்க நாம் கற்காலத்து வடிவமைப்பு முறைகளைத்தான் கையாண்டு கொண்டிருக்கிறோம்.
அதனை மாற்றி இன்டெர்நெட்டுக்கு ஏற்றதொரு உலாவும் முறையை கண்டு பிடித்து அதற்கேற்ப தளங்களை வடிவமைத்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பார்க்கும் நோக்கத்தோடு அமைக்கப்பட்டுள்ள தளம் இது.
இன்று இன்டெர்நெட்டில் உலாவ பயன்படுத்தப்படும் ஐகான்கள் திரையை கீழிறக்கிப்பார்ப்பது போன்ற பல உத்திகள் வீடியோ கேம் உலகில்தான் முதலில் உதித்ததாக பால்ஸ் கருதுகிறார்.
எனவே வீடியோ கேம் வடிவில் ஒரு தளத்தை வடிவமைத்துப்பார்ப்பது அடுத்த கட்டத்துக்கு அழைத்துச்செல்லும் என்று நம்புகிறார்.
—————–
link;
http://spw.playbe.com/

0 Comments on “இணையதளங்களுக்கு புதிய பாதை”
anbumani
கம்யூட்டரே கதி என்று இருப்பவர்களுக்கு வேண்டுமானால் இந்த வழி பயன்படும்.
Surya
நல்ல பதிவு.
தளம் நன்றாக இருக்கிறது.
ஆனால் விளையாட அவவளவு பொறுமை இல்லை.