ஐபிஎம் நிறுவனம் அதன் ஆய்வு பணிகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் கம்ப்யூட்டரோடு அறியப்பட்ட இந்நிறுவனம், பிசி யுகத்தில் அந்த பெருமையை
இழந்து விட்டாலும், தன்னுடைய ஆய்வு முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப உலகில் தன்னுடைய இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கிறது.
ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஐபிஎம் உலக மாற்றக் கூடிய 5 தொழில்நுட்பங்கள் பற்றி தன்னுடைய இணைய தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
உடனடி மொழி பெயர்ப்பு சாப்ட்வேர், 3டி இன்டெர்நெட், மனதை அறியும் போன்கள் என மிகவும் சுவாரஸ்யமான விஷயங் களை இந்த கட்டுரை விவரிக்கிறது. இதில் முதலில் வருவது எங்கிருந் தாலும் சிகிச்சை பெறக் கூடிய வசதியாகும்.
வயர்லெஸ் தொழில்நுட்பம் மேம்பட்டு வருவதும், புகைப்படம் சார்ந்த தகவல்களை இன்டெர்நெட் மூலம் அனுப்பி வைப்பதும், மருத்துவ வசதியை பரவலாக்க உதவி செய்திருக்கிறது.
வருங்காலத்தில் இந்த சேவை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று ஐபிஎம் கருதுகிறது.
இருந்த இடத்தில் இருந்தே மருத்துவர்கள் எங்கோ இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வயர்லெஸ் சார்ந்த தொழில்நுட்பம் கைகொடுக்க உள்ளது.
அமெரிக்கர்கள் நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி செல்வதாலும், ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்கள் மருத்துவ வசதி இல்லாத பகுதிகளில் வசிப்பதாலும்,
வயர்லெஸ் மூலம் மருத்துவ வசதி வழங்கும் சேவை முக்கியத்துவம் பெறுகிறது.
நீரிழிவு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி கண்காணிப்பு அவசியம் என்னும் நிலையில், வயர்லெஸ் மூலம் அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணிக்க
முடியும்.
அதே போல மருந்தின் செயல்பாடு மற்றும் பாதிப்பு ஆகிய விவரங் களையும் மருத்துவர்கள் தெரிந்து கொள்ள முடியும். கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகளின் நிலை பற்றிய விவரங்கள் மற்றும் எக்ஸ்ரே படங்களை வயர்லெஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை பற்றி மருத்துவ நிபுணர்களோடு கலந்தாலோசிக்க முடியும்.
ரத்த அழுத்தம், நாடி துடிப்பை பரிசோதிப்பது போன்ற செயல்களையும் மருத்துவர்கள் இருந்த இடத்தில் இருந்தே மேற்கொள்ள முடியும்.
மருத்துவத்துறையில் இது மகத்தான மாற்றங்களை கொண்டுவரும் என்றால், உடனடி மொழிபெயர்ப்பு சாப்ட்வேர், வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மற்றவர்களோடு சுலபமாக பேச உதவி செய்யும்.
தற்போது மொழி பெயர்ப்பு சாப்ட்வேர் புழக்கத்தில் இருந்தாலும், வருங்காலத்தில் இவற்றின் வேகம் மற்றும் செயல்திறன் பன்மடங்கு அதிகரித்து உடனுக்குடன் மொழி பெயர்க்கும் ஆற்றல் உண்டாகும் என்று கருதப்படுகிறது.
இதே போல இன்டெர்நெட் அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்டெர்நெட் முப்பரிமாண தன்மை கொண்ட 3டி இன்டெர்நெட்டாக பரிணமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இன்டெர்நெட்டில் தனி உலகத்தை உண்டாக்கியிருக்கும் செகன்ட்லைப் போன்ற வீடியோ கேம்கள் இந்த முப்பரிமாண இன்டெர்நெட்டுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது.
உடைகளை இன்டெர்நெட்டி லேயே அணிந்து பார்ப்பது போன்ற வசதிகள் முப்பரிமாண இன்டெர்நெட்டில் சாத்தியமாகலாம்.
இதே போல தண்ணீர் விநியோகத் திலும் புதுமையான வழிகள் கண்டறியப்பட உள்ளன.
இன்டெர்நெட்டை பயன்படுத்தி, தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் மிகவும் மேம்பட்ட விநியோக முறைகள் உருவாக்கப்பட உள்ளன.
நேனோ தொழில்நுட்பம் உள்ளிட்ட அதிநவீன முறைகளை பயன்படுத்தி இவை உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஐபிஎம் குறிப்பிடும் மற்றொரு அதிசய தொழில்நுட்பம் மனதை அறியும் சக்தி கொண்ட போன்கள் ஆகும்.
ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் போன்கள் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் சக்தி கொண்டதாக இருக்கிறது.
இதன் அடுத்தகட்டமாக இருப் பிடத்தை உணர்ந்து, அதற்கேற்ப சேவைகளை இயக்கிக்கொள்ளும் ஆற்றல் கொண்ட போன்கள் உருவாகலாம்.
உதாரணமாக ரெயில்வே நிலையம் அல்லது மாநாடு அறை போன்ற பலர் கூடியுள்ள இடங்களில் நுழையும் போது செல்போன் அதனை தானாக உணர்ந்து கொண்டு, வாய்ஸ்மெயில் சேவையை இயக்கலாம்.
அதே போல நள்ளிரவு தாமதமாக வீட்டிற்கு திரும்பினால் செல்போன் அதனை உணர்ந்து கொண்டு
பசியாற பிட்சாவுக்கு ஆர்டர் கொடுக்கலாம். இந்த தொழில்நுட்பங்களை பற்றியெல்லாம் ஐபிஎம் கட்டுரை விரிவாக
பேசுகிறது.
—————-

0 Comments on “வருகிறது 3டி இன்டெர்நெட்”
vijayasarathyr
தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு வருவதை பார்த்தால் இதெல்லாம் சாத்தியமாகவே தோன்றுகிறது.
முக்கியமாக கைபேசியில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வசதிகள் கூடிய வரைவில் வரலாம்.
இதற்கு தொழில்நுட்பத்தை விட மக்களின் தேவைகளும், கைபேசி தயாரித்து விற்பவர்களின் வியாபார யுக்தியும் முக்கிய காரணங்க்ளாக இருக்கும்.
கேட்கும் போது எனக்கே ஆவலை தூண்டுகிறது.
blogpaandi
நல்ல அறிவுப்பூர்வமான தகவல். நன்றி.
பழையன கழிதலும் புதியன் புகுதலும் கால வகையினானே
-தொல்காப்பியம்
RAGHU
thank u for ur good works