நீங்கள் அமைக்க வேண்டிய இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு தனி துணிச்சல் வேண்டும் அல்லவா? ஸ்வீடனைச் சேர்ந்த கம்ப்யூட்டர் கில்லாடிகள் சிலருக்கு இந்த துணிச்சல் வந்திருக்கிறது.
.
அவர்கள் ஆஸ்கர் அமைப்பை நோக்கி இப்படி கூறியிருப்பதோடு அல்லாமல் ஆஸ்கர் விருதுகளுக்கான இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காண்பிப்பதற்காக முழு வீச்சிலான இணையதளத்தையும் அமைத்திருக்கின்றனர்.
ஆஸ்கர் டோரன்ஸ் டாட் காம் அந்த தளத்தின் முகவரி. ஆஸ்கர் விருது களை வழங்கும் திரைப்பட அமைப் பின் சார்பில் ஆஸ்கர் விருதுகளுக் கென்று அதிகாரப்பூர்வ மான இணைய தளம் இருக்கிறது. ஆஸ்கர் விருது பற்றிய அனைத்து விவரங்களையும் தரக்கூடியதாக மிகச்சிறந்த இணைய தளமாகவும் அது அமைந்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல், ஆஸ்கர் தொடர்பாக அதிகாரப்பூர்வமில்லாத இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. அவையெல்லாமே ஆஸ்கர் பற்றி அருமையாக தகவல்களை தந்து கொண்டிருப்பவை. இவற்றோடு திரைப்பட ரசிகர்கள் நடத்தும் ஆஸ்கர் தொடர்பான பிலாக் தளங்களும் திகட்டத் திகட்ட தகவல்களை வழங்கிக்கொண்டிருக்கின்றன.
ஆஸ்கர் செய்திகள் மட்டுமல்லாமல், எந்த படம் அல்லது எந்த நட்சத்திரம் விருது வாங்க வாய்ப்பு இருக்கிறது என்னும் அலசலும், இந்த தளங்களின் மூலம் நடைபெற்று வருகின்றன.
இப்படியிருக்க, உலக அளவில் புகழ் பெற்ற ஆஸ்கர் அமைப்பை பார்த்து உங்களுக்கு இணைய தளத்தை நடத்த தெரியவில்லை.
நாங்கள் அமைத்திருக்கும் இணைய தளத்தைப் பாருங்கள் என்று சொல்லப் பட்டால், எப்படியிருக்கும்? ஆனாலும் ஆஸ்கர் டோரன்ஸ் தளத்தை அமைத்திருப்பவர்கள் பக்கம் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை ஆஸ்கர் போன்ற அமைப்புகள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் அவர்களுடைய ஆதங்கமும் புரிகிறது.
அடிப்படையில் அந்த தளம் மிகவும் எளிமையானது. ஆனால் வலிமையா னது. வீடியோ கோப்பு பகிர்வு தொழில் நுட்பத்தின் விஸ்வரூபத்தால் திரைப் படங்களைப் பார்ப்பது எத்தனை சுலபமாகியிருக் கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல் படும் வகையில் இந்த தளம் உருவாக்கப் பட்டுள்ளது.
எதைக்கண்டு ஆஸ்கர் அமைப்பு மற்றும் அதனை இயக்கும் ஹாலிவுட் மிரண்டு போயிருக் கிறதோ. உண்மை யில் அதனை தங்களோடு சேர்த்துக் கொண்டு செயல்பட வேண் டும் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த தளம்.
வீடியோ பகிர்வு உத்தி யில் சிகரமாக கருதப்படும் டோரன்ட் மூலம் திரைப் படங்களை சுலபமாக டவுன்லோடு செய்து பார்க்க முடிகிறது. இந்த உத்தி செயல்படும் விதம் மிகவும் அழகானது. ஒரே இடத்தி லிருந்து வீடியோவை டவுன் லோடு செய்யாமல் எங்கெல்லாம் அதன் துண்டுகள் கிடைக்கி றதோ அங்கிருந்தெல் லாம் உருவி ஒன்று சேர்த்து கொடுத்து விடுகிறது.
இதன் காரணமாக எத்தனை பேர் அதே கோப்பை டவுன்லோடு செய்கி றார்களோ அந்த அளவுக்கு டவுன் லோடு ஆவது விரைவாக இருக்கும். திரைப்பட ரசிகர்களைப் பொறுத்த வரை இது மாபெரும் வரப்பிரசாதம். ஆனால் ஹாலிவுட்டோ இது திருட் டுத்தனமாக படங்களைப் பார்க்கவே உதவும் என்று கருதி, இதற்கு அணை போட முயற்சித்துக் கொண்டி ருக்கிறது.
இந்த எண்ணம் தவறானது. உண்மையில் திரையுலகம் இந்த உத்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காரண மாக எதிர்காலம் டவுன்லோடு யுகமாகத்தான் அமையப் போகிறது என்று கூறப்படுவதை யெல்லாம் ஹாலிவுட் காதில் வாங்கிக்கொள்ள வில்லை.
இந்நிலையில் இந்த செய்தியை குறிப்பால் உணர்த்தும் வகையில் ஆஸ்கர் டோரன்ஸ் தளம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த தளத்தில் இவ்வாண்டு ஆஸ்கர் விருதுகளுக்காக அனைத்து பிரிவுகளிலும் பரிந்து ரைக்கப்பட்டுள்ள திரைப்படங்களின் பட்டியல் மற்றும் அந்தந்த படங்கள் பற்றிய அறிமுக குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு படத்தின் அருகேயும் அதனை டவுன் லோடு செய்து பார்ப்பதற்கான இணைப்பும் இருக்கிறது. ஆக, படங் களை பற்றி அறிந்துகொண்டு அதனை பார்த்துவிட்டு பின்னர் இங்கிருந்தே வாக்களிக்கவும் செய்யலாம்.
டோரன்ட் அடிப்படையில் இயங்கும் பல்வேறு சேகைளிலிருந்து படங்க ளைப் பார்ப்பதற்கான வசதி இருக்கிறது. ஆஸ்கர் அதிகாரப்பூர்வ இணைய தளம் இத்தகைய வசதியை செய்து கொடுத்திருந்தால், ஆஸ்கர் உறுப்பினர் கள் மற்றும் ரசிகர்கள் விருதுக்குரிய படங்களைப் பார்த்து வாக்களிப்பதற்கு சுலபமாக அமைந்திருக்கும் என்று ஆஸ்கர் டோரன்ஸ் சொல்கிறது.
சிலருக்கு சுயமாகவும் புரியாது, சொன்னாலும் புரியாது. காதைப் பிடித்து திருகி சொன்னால்தான் புத்தி யில் ஏறும் என்பது போன்ற வாசகத் தோடு ஆஸ்கர் நிர்வாகத்திற்காக இந்த தளம் அமைக்கப் பட்டுள்ளது.
—————
(இந்த தளம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போது , அடுத்த ஆண்டு பார்க்கலாம் என்கிறது.)
==========
www.oscartorrents.com