எஸ்.எம்.எஸ். வசதியை இப்படி யெல்லாம் கூட பயன்படுத்த முடியுமா என்று வியப்பை ஏற்படுத்தும் புதுமை யான சேவைகளின் வரிசையில் இப்போது டிஷர்ட் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பும் சேவை அறிமுகமாகி இருக்கிறது.
இந்த சேவையின் துணையோடு ஒருவர் தான் அணிந்திருக்கும் டிஷர்ட் வாயிலாகவே எஸ்.எம்.எஸ். செய்தியை அனுப்பி வைக்க முடியும்.
செல்போன் யுகத்தில் எஸ்.எம்.எஸ். வசதி விதவிதமான வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எஸ்.எம்.எஸ். செய்திகள் மார்க்கெட் டிங் சாதனமாகவும், அதே நேரத்தில் போராட்டக்காரர்களின் ஆயுதமாகவும் கூட அமைந்திருக் கின்றன.
எஸ்.எம்.எஸ். வசதியை செல் போனுடன் பொருத்தி பார்க்க வேண்டுமென்றாலும் அத்தோடு நிற்க வேண்டிய அவசியமில்லை. விளம்பர பலகை போன்றவற்றை தொடர்பு கொள்ளும்போது எஸ்.எம்.எஸ். செய்தியை பெறும் வசதியும் அறிமுகமாகி இருக்கின்றன.
அந்த வகையில் இப்போது டிஷர்ட்டி லிருந்து எஸ்.எம்.எஸ். செய்திகளை பெறும் வசதி அறிமுகமாகி இருக்கி றது. புகழ் பெற்ற ரியாக்டி எனும் நிறுவனம் இந்த சேவையை அறிமுகம் செய்திருக்கிறது.
டிஷர்ட்டுகள் ஒரு விதத்தில் நவீன கல்வெட்டுக்களை போன்றது. அல்லது நடமாடும் தகவல் பலகையை போன்றது.
டிஷர்ட்டில் வாசகங்களை எழுதி வைக்கும் பழக்கத்தை வைத்து கொண்டு அணிபவரின் மன நிலையை அல்லது அணுகுமுறையை டிஷர்ட் டில் வாசகங்களின் மூலம் வெளிப் படுத்தலாம்.
பெரும்பாலும் இளைஞர்கள் புதுமையான மற்றும் வித்தியாசமான அணுகுமுறையை வெளிப்படுத்தவே டிஷர்ட் வாசகங்களை பயன்படுத்தி வருகின்றனர். டிஷர்ட் வாசகங்களின் பின்னே ஒளிந்திருக்கும் படைப் பாற்றல் பற்றி தனியே ஒரு ஆய்வே நடத்தலாம்.
டிஷர்ட் வாசகங்களை இன்னும் ஒருபடி மேலே எடுத்துச் சென்று பல்வேறு நோக்கங்களை நிறை வேற்றிக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதனைத்தான் ரியாக்டி செய்கிறது.
இந்த சேவையின் மூலம் நீங்கள் அணிந்து கொள்ளும் டிஷர்ட்டி லிருந்தே விரும்புபவர்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்பி வைக்க முடியும்.
டிஷர்ட் எப்படி எஸ்.எம்.எஸ். செய்தியை அனுப்பும் என்று உங்க ளுக்கு சந்தேகம் எழலாம். அந்த ஆற்றலை நீங்கள் அணிந்திருக்கும் டிஷர்ட்டுக்கு ஏற்படுத்த, ரியாக்டி இணையதளத்திற்கு சென்று உங்க ளுக்கான ஒரு கீவேர்டை தேர்வு செய்து அதனை அந்த தளத்திலும், உங்கள் டிஷர்ட்டிலும் குறிப்பிட வேண்டும்.
அதன் பிறகு நீங்கள் மற்றவர் களோடு பகிர்ந்து கொள்ள விரும்பும் வாசகத்தை இடம் பெற வைக்க வேண்டும்.
ரியாக்டி இணையதளமே நீங்கள் அனுப்பும் டிஷர்ட்டில் இந்த கீவேர்டை பொறித்து தபால் மூலம் பெற்றுக் கொள்ள செய்கிறது.
இப்போது நீங்கள் சந்திக்கும் நபர் அல்லது உங்களை பார்க்கும் மனிதர் யாராவது அந்த கீவேர்டை பார்த்து விட்டு அந்த எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி வைத்தால் ரியாக்டி இணையதளம் அவரது செல்போனுக்கு நீங்கள் தெரிவித்த வாசகத்தை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கும்.
அந்த வாசகம், ஒரு பொன் மொழியாக இருக்கலாம். உங்கள் நிறுவனத்திற் கான விளம்பரமாக இருக்கலாம். அல்லது நீங்கள் ஆதரிக்கும் அரசியல் கட்சிக்கான வாசகமாக இருக்கலாம். குறிப்பிட்ட இயக்கத்திற்கான ஆதரவு செய்தியாகவும் இருக்கலாம்.
தனி நபர்கள் முதற்கொண்டு பெரிய நிறுவனங்கள் வரை இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். நிறுவ னங்கள் இதனை மிகவும்
சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நிறுவனத்தின் விளம்பர வாசகத்தை பெறக் கூடிய கீவேர்டு அடங்கிய டிஷர்ட்டை ஊழியர்கள் அனைவரும் அணிய வைத்தால் அதுவே மிகச் சிறந்த விளம்பரமாகி விடும்.
இதே போல போராட்ட இயக்கங் களை சேர்ந்தவர்களும் இந்த எஸ்.எம்.எஸ். டிஷர்ட்டை பயன் படுத்திக் கொள்ளலாம்.
இதே போல ஷைனோ எனும் இத்தாலிய டிஷர்ட் நிறுவனமும் எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியை தனது இணையதளத்தின் மூலம் வழங்கி வருகிறது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன்ஸ் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, ஜீன்ஸ் பேண்ட்டிலேயே சிறிய திரையை பதித்து அதன் மீது எஸ்.எம்.எஸ். செய்திகள் ஒளிபரப்பாகும் வசதியை யும் வழங்கி வருகிறது.
————-
link;
www.reactee.com

0 Comments on “எஸ்.எம்.எஸ் அனுப்பும் டிஷர்ட்”
Chea
Engha poi mudiyumo intha valarchi
cybersimman
dont worry. techla ithallam sagjam
surya
ரூம் போட்டு யோசிப்பாங்களோ..??
cybersimman
eppadi yosikkaranga parunga
mokkil
kizhinjathu po