வீடியோ பகிர்வு இணைய தளமான யூடியூப்பில் எத்தனையோ வீடியோ கோப்புகள் திடீரென புகழ் பெற்றுள்ளன. அந்தவகையில் கோலா கரடி ஒன்றின் வீடியோ படம், தற்போது பிரபலமாகி உள்ளது.
அந்த கோலா கரடி தண்ணீர் குடிக்கும் காட்சியை யூடியூப்பில் அரங்கேற்றப்பட்டு 30 ஆயிரம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. இன்னமும் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது.
கோலாக் கரடிகள் பார்ப்பதற்கு அழகானவை. ஒருசிலருக்கு இந்த கரடிகள் டெட்டிபியர் பொம்மை களை நினைவுபடுத்தலாம். ஆனால் கோலா கரடி திடீரென யூடியூப்பில் எங்கிருந்து வந்தது. இதற்கு பின்னே கொஞ்சம் சோகமான கதை இருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பெரும் காட்டுத்தீ ஏற்பட்டு அதிகளவிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடமைகளுக்கான சேதம் ஒருபக்கம் என்றால், உயிர்ச்சேதம் மறுபக்கம். மனிதர்கள் மட்டு மல்லாமல் விலங்குகளும் இந்த தீயில் கருகி சாம்பலாகியிருக்கின்றன. ஆனால் ஒருசில விலங்குகள் அதிர்ஷ்டவசமாக தப்பிப்பிழைத் திருக்கின்றன.
இப்படி தப்பிப்பிழைத்த கோலா கரடி ஒன்றை கருகிய காட்டுப்பகுதியின் நடுவே தீயணைப்பு வீரர் டேவ் டிரி பார்த்தார். கடும் தீக்கு நடுவே அந்த கரடி தப்பிப்பிழைத்தது எப்படி என்னும் வியப்போடு, அவர் அதனையே பார்த்து கொண்டிருந்தார். அந்த கரடியோ, அவரது கையில் இருந்த பாட்டிலை பிடுங்கி தண்ணீர் குடிக்கத் தொடங்கியது.
சில நிமிடங்களில் 2 பாட்டில் தண்ணீரை அது குடித்து தீர்த்துவிட்டது. பாவம் அந்த அளவுக்கு தாகம் போலும்.
அந்த கரடியின் தீக்காயம் பட்ட கைகளை டேவ், பரிதாபத்தோடு பார்த்து கொண்டிருந்த போது அவரது நண்பரான சக தீயணைப்பு வீரர் இக்காட்சியை தன்னிடமிருந்த செல்போன் காமிராவில் படம் பிடித்தார். பின்னர் அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. இந்த காட்சியை யூடியூப்பில் அரங்கேற்றினார்.
காட்டுத் தீ ஏற்படுத்திய சேதத்தை விவரிக்கும் படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்திருந்தவர்கள் இந்த நெகிழ்ச்சியான காட்சியை பார்த்ததும் உருகிப்போய்விட்டனர்.
உடனே யூடியூப் வழக்கப்படி இதனை பார்த்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கு பரிந்துரைத்தனர். இப்படியே காட்டுத்தீ போல இந்த காட்சி பரவி, ஆயிரக்கணக் கானோரால் பார்க்கப்பட்டு, மிகவும் பிரபலமாகிவிட்டது.
அந்நாட்டின் பிரபல நாளிதழ் ஒன்று இந்த காட்சியை புகைப்படமாக வெளியிட்டு விற்பனை செய்தும் வருகிறது. இந்த விற்பனையின் மூலம் வரும் வருவாய் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட
-விலங்குகளின் நலவாழ்வுக்கு வழங்கப்பட உள்ளது.
—————-
link;
<a href=”http://http://www.youtube.com/watch?