இது காமிரா போன்களின் காலம்! அதனால்தான் சாப்பிட்டவுடன் கிளிக் செய்யவும் என்கின்றனர். இல்லை, சாப்பிட்டவுடன் கூட இல்லை, சாப்பிடும் முன்பே கிளிக் செய்துவிட வேண்டும். அதாவது சாப்பாட்டை கிளிக் செய்து அந்த புகைப்படத்தை அனுப்பிவையுங்கள் என்கின்றனர். இரண்டுமே சுலபமானதுதான்.
கையில் சாதாரண காமிரா செல்போன் இருந்தால் மேஜைமீது இருக்கும் உணவை கிளிக் செய்துவிடலாம். செல்போன் மூலமே அந்த படத்தை அனுப்பி வைத்துவிடலாம்.
யாருக்கு அனுப்ப வேண்டும்?
எதற்காக அனுப்ப வேண்டும்?
ஊட்டச்சத்து நிபுணர்களுக்கு, என்று முதல் கேள்விக்கு பதில் சொன்னால் இரண்டாவது கேள்விக்கான பதிலை எளிதாக புரிந்து கொண்டுவிடலாம். நீங்கள் அனுப்பும் படத்தை பார்த்துவிட்டு, ஊட்டச்சத்து நிபுணர், அதன் கலோரி அளவை கணக்கிட்டு உங்கள் உடல்நலத்திற்கு ஏற்ற உணவு தானா? என்பதை அலசிப்பார்த்து, பதில் அனுப்புவார். அந்த பதிலில், உணவு பழக்கத்தில் மாற்றம் தேவையா என்னும் ஆலோசனையும் அடங்கி இருக்கும்.
ஜப்பானில் பொது சுகாதாரத் துறை மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த உணவு கண்காணிப்பு சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. டோக்கியோவைச் சேர்ந்த தனியார் ரசாயன மற்றும் மருத்துவ உபகரண தயாரிப்பு நிறுவனம், இந்த கண்காணிப்பு சேவையை உருவாக்கி கொடுத்துள்ளது.
உடல் இளைப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக உடல் இளைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்காக இந்த சேவை பேருதவியாக இருக்கும். அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள் போன்றவர்கள் விஷயத்தில் ஆசையால் (அ) ஆர்வத்தை அடக்க முடியாமல் சாப்பிட்ட உணவு வகை (அ) அறியாமல் சாப்பிட்டுவிட்ட உணவு பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த தவறை தெரிந்து கொள்ள இதற்கு பரிகாரம் தேடிக்கொள்ள புகைப்படம் மூலம் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகள் தேடி வரும். இமெயில் மூலம் உணவு படத்தை அனுப்பி வைக்கலாம். சம்பந்தப்பட்ட இணையதளத்தை அணுகியும் புகைப்படத்தை சமர்ப்பிக்கலாம். ஊட்டச்சத்து பழக்க வழக்கம் தொடர் பான பயனுள்ள குறிப்பு களையும் இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஜப்பானில் உடல் பருமன் மெல்ல ஒரு பிரச்சனையாக உருவாகி வருவதால், இப்படி உணவு பழக்கத்தை கண்காணிப்பது அவசிய மாகிறது. அதோடு காமிரா போன்களின் பெருக்கம், உணவு பற்றிய தகவல் களை காட்சிரீதியாக தெரிவிக்கும் வசதியையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது.
இந்த சேவையில் உள்ள ஒரே சங்கடம் ஆலோசனை பெற மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதே! ஜப்பான் பொது சுகாதாரத் துறை சோதனை முறையில் இந்த சேவையை வெள்ளோட்டம் விட்டிருக்கிறது.
இதே போன்று, ஆனால் இதைவிட சுவையான சேவையை “மைஃபுட் போன் நியூட்ரிஷன்’ என்னும் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இதுவும் உணவுப்பழக்கத்தை செல் போன் வழியே கண்காணிக்கும் சேவைதான். ஆனால் கொஞ்சம் சுவாரசியமானது. பங்கேற்பாளர்களை கவர்ந்து விடக் கூடியது.
“மைஃபுட் போன்’ என்னும் பெயரிலான இந்த சேவையை பயன்படுத்திக் கொண்டு சாப்பாட்டு மேஜையில் இருந்து, உணவை கிளிக் செய்து அனுப்பிவிட்டு காத்திருந்தால் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய டயட் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். ஊட்டச்சத்து நிபுணர் தனிப்பட்ட முறையில் உங்களிடம் பேசுவது போல இந்த ஆலோசனை காட்சியை வீடியோவாக பார்க்கலாம். அது மட்டுமா, உணவு பழக்கத்தை டைரி நிகழ்வாக குறிப்பிட்டு, மற்ற உறுப்பினர்களோடும் பகிர்ந்து கொள்ள முடியும். இவ்விதம் உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். நீங்களும் மற்றவர்கள் சொல்வதை கேட்டு பயன்பெறலாம். இன்னும் ஒருபடி மேலே போய் சக உறுப்பினர்களுள் ஒத்த கருத்துள்ளவரை தேர்வு செய்து அவருடன் தனிப்பட்ட முறையில் உணவு குறிப்புகளை பகிர்ந்து கொண்டு சாப்பிடும் முறையை சரியாக்கி கொள்ளலாம்.
மதிப்பெண் இல்லாமல் தேர்வு எழுதி என்னபயன்? ஆக, உங்கள் உணவு பழக்கத்தின் பயனையும் இந்த தளம் மூலம் அவ்வப்போது அறிக்கையாக பெற்றுக் கொள்ளலாம்.
அதனால்தான் உங்கள் உணவு பழக்கத்தை கண்காணித்து, அதனை மாற்றிக் கொண்டு ஊக்கம் பெறுங்கள் என அந்த தளம் அழைப்பு விடுக்கிறது.
சரியான உணவு பழக்கத்தின் முக்கியத்துவத்தை பலரும் உணர்ந்திருந்தாலும், சோம்பல் மற்றும் இன்னும் பிற காரணங்களால் அதனை கடைப்பிடிக்க தவறி விடுகிறார்கள்.
அதற்கான வாய்ப்பே இல்லாமல் உற்சாகமாக உடல் இளைக்க இதோ வழி என்கிறது “மைஃபுட் போன்’!
—————–

1 Comments on “இளைப்பதற்கு இனிய வழி”
Surya
Useful Info.
Thanx.