ஒரு வலைப்பதிவு இத்தனை செறிவானதாக இருக்க முடியுமா என்னும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது ஜுபார்ன்ஸ் வலைப்பதிவு.
விலங்கு பிரியர்கள் இந்த வலைப்பதிவை பார்க்க நேர்ந்தால் நிச்சயம் சொக்கிப்போய்விடுவார்கள்.
அப்படி என்ன இதில் விஷேசம் என்று கேட்கிறீர்ளா?
உலகெங்கும் உள்ள விலங்கியல் பூங்காக்களில் புதிதாக அவதரிக்கும் விலங்குகள் வருகயை புகைப்படத்துடன் இந்த பதிவு உலகிற்கு அறிவிக்கிறது.அதாவது பூங்கா விலங்குகள் குட்டி போடும்போது அது பற்றிய செய்தியை இப்பதிவு வெளியிடுகிறது.
பொதுவாகவே விலங்கியல் பூங்காக்களில் பிறக்கும் குட்டிகள் பற்றிய செய்தியை அறிந்து கொள்வதில் மக்களுக்கு ஒரு வித ஆர்வம் இருக்கும் அல்லவா? உள்ளூர் பூங்காக்களில் பிறக்கும் குட்டிகள் பற்றிய செய்திகளை உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதும் வாடிக்கை தானே.
சில நேரங்களில் வெளிநாட்டு பூங்காக்களில் பிறக்கும் குட்டிகள் பற்றியும் கூட செய்திகள் வருவதுண்டுதானே.
இப்படியிருக்க ஒரே இடத்தில் இத்தகைய செய்திகளையெல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்.
ஜுபர்ன்ஸ் வலைப்பதிவு இதனை தான் செய்கிறது.
சர்வதேச விலங்கியல் பூங்காக்களில் புதிதாக விலங்குகள் பிறக்கும் போது இப்பதிவு உடனடியாக அதனை புகைப்படத்தோடு பதிவு செய்கிறது.அந்த குட்டி பிறந்த விதம், அது எப்படி வளரும் போன்ற சுவையான தகவல்களும் இடம்பெருகின்றன.
உண்மையில் ஒரு சில விலங்குகளின் படங்கள் சொக்க வைக்கின்றன.
விலங்குகள் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆர்வத்தை இது தூன்டுகிறது.
உலகில் உள்ள முன்ன்ணி விலங்கியல் பூங்காக்களின் பட்டியலும் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதனை கிளிக் செய்தால் அங்கு பிறந்த குட்டகளை பார்க்கலாம். அந்த பூங்காக்களின் இணைய தளங்க்ளுக்கும் செல்லலாம்.
—————
link;
www.zooborns.com

0 Comments on “விலங்குகளுக்கு ஒரு வலைப்பதிவு”
Surya
Great work.
Wishes.
ganapathi
Appadia?
Mudingna poai parpoom.