ஒரு புத்தகத்தை படிக்க சிறந்த வழி அந்த புத்தகம் பற்றி வலைப்பதிவு செய்யத்தொடங்குவது தான்.
அதிலும் மற்றவர்களும் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்ப பட்டால் வாசிப்பு அனுபவத்தை வலைப்பதிவு செய்வதை தவிற சிறந்த வழி வேறில்லை.குறிப்பிட்ட அந்த புத்தகம் நீண்ட நாட்களாக படிக்க நினைத்த புத்தகம் என்றால் வலைபதிவு செய்வது அதனை படித்து முடிக்க பேருதவியாக இருக்கும்.
இதற்கான சிறந்த உதாரணமாக ஜான் விட்பீல்ட்டின் டார்வின் புத்தக வலைப்பதிவு முயற்ச்சியை குறிப்பிடலாம்.அறிவியல் விஷயங்கள் பற்றி எழுதி வரும் விட்பீல்டு, டார்வினின் ஆகச்சிறந்த படைப்பான ஆரிஜின் ஆப் ஸ்பிஷியஸ் புத்தகத்தை படிக்கத்தொடங்கியதும் அந்த அனுபவத்தை அத்தியாயம் அத்தியாயமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொன்டார்.
டார்வினின் இந்த புத்தகத்தை படிக்க இதைவிட பொருத்தமான நேரம் இருக்க முடியாது.
உயிரியல் உலகில் பெரும் மற்றத்தை கொண்டு வந்த இப்புத்தகம் வெளியாகி 150 ஆண்டுகள் ஆகிறது.மேலும் டார்வினின் 200 வது ஆண்டு விழா கொன்டாடப்படும் ஆண்டாகவும் இது அமைகிறது. இந்த இரட்டை நிகழ்வுகளை கொன்டாடும் வகையில் டார்வினையும் உயிரியல் உலகிற்க்கான அவரது பங்களிப்பு குறித்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. டார்வினின் பிறந்த பூமியான பிரிட்டனில் நாடு தழுவிய அளவில் விழாக்களூக்கு எற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
எங்கும் டார்வின் பற்றியே பேச்சாக இருப்பதால் இயல்பாகவே ஆரிஜின் ஆப் ஸ்பிஷியஸ் புத்தகத்தை மீண்டும் படிக்கும் பலருக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.இது வரை அப்புத்தகத்தை தொடாதவர்கள் கூட இந்த சந்தர்ப்பத்திலாவது இப்புத்தகத்தை படித்துவிட விரும்புகின்ற்னர்.
உயிரியல் துறை நிபுனராக இருந்த போதிலும் விட்பீல்டும் இதுவரை இப்புத்தகத்தை முழுவதுமாக படித்ததில்லை என்கிறார்.
ஒருவிததில் இது அநீதி தான். உயிரியல் துறை நபரே டார்வினின் முக்கியமான நூலை படிக்காவிட்டால் எப்படி? விட்பீல்டு இதற்கு சுவார்ஸ்யமான பதிலை தருகிறார்.
அதைவிட நேர்மையானது. முதலில் டார்வினின் புத்தகத்தை படிக்காமல் இருப்பது குறித்து தனக்கு பெருமை இல்லை என்று கூறிவிடுகிறார்.அதோடு டார்வினை படிக்காமல் இருப்பதற்கு ஆர்வம் இல்லாமல் இல்லை ஆனால் உயிரியல் துறையில் இப்போது டார்வினின் புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் கூறுகிறார். காரண்ம் டார்வின் உயிரியலின் துவக்க காலத்தில் தன்னுடைய கோட்பாடுகளை உருவாக்கினார். உயிரியல் துறையில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் மரபணு தொழில்நுட்பம் ,கணிதவியல் அலசல் முறை ஆகியவை அவருக்கு கிட்டவில்லை.மேலும் அவர் பயன்படுத்திய விலங்குகளின் கருத்தரிப்பு போன்ற உத்திகள் இப்போது காலாவதியாகிவிட்டன.அறிவியலின் ம்ற்ற துறைகளை விட உயிரியல் தன்னுடைய கடந்த கால கோட்பாடுகளை உதறித்தள்ளி விடுகிறது.இயற்பியலின் அடிப்படை விதிகளும் கனித சமன்பாடுகளும் இன்னமும் தொடரவே செய்கின்றன. ஆனால் உயிரியலில் கோட்பாடுகளைவிட(டார்வினின் பரிணாம் கொள்கை மட்டும் விதிவிலக்கு) தகவல்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தகவல்களோ மாறும் தன்மை கொண்டவை.எல்லவர்றையும் விட டார்வினின் கொள்கை அடிப்ப்டையில் மிகவும் எளிமையானது. அதனை புரிந்து கொள்ள ஆரிஜின் ஆப் ஸ்பிஷியஸ் முழு புத்தகத்தை படித்தாக வேன்டும் என்ற தெவையில்லை.
இப்படி புத்தகத்தை படிக்காதற்கான காரணத்தை விளக்கிவிட்டு அதற்காக டார்வினை படிக்காமல் இருப்பது நல்லது என்று சொல்லிவிட முடியாது எனகூறும் விட்பீல்டு , புத்தகத்தின் 150 வது ஆண்டு விழாவைவிட இதனை படிக்க பொருத்தாமான நேரம் எது என்று கேட்கிறார்.
இந்த உற்சாகத்தோடு தான் அவர் டார்வினை படிக்கத்தொடங்கினார். டார்வினை நாம் மட்டும் படிப்பதைவிட மற்றவர்களும் சேர்ந்து படிக்கட்டும் என்ற நல்லெணணத்தில் படிக்க படிக்க அதை வலைப்பதிவும் செய்யத்தொடங்கினார்.
பிளாகிங் த ஆரிஜின் என்ற பெயரில் அமைந்த இந்த வலைப்பதிவை சீட் ஆன்லைன் இதழ் ஸ்பான்சர் செய்தது. வலைப்பதிவின் நோக்கம் இர்ண்டுவிதமானது என அவர் குறிப்பிட்டிருந்தார். ஒன்று 150 ஆன்டுக்கு பிறகு டார்வினின் தத்துவம் எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கின்றன என பார்ப்ப்பது. மற்றொன்று, டார்வின் புத்தகம் முதன்முதலில் வெளியான போது என்ன மனநிலை இருந்திருக்கும் என் உணர்ந்து பார்ப்பது.
இரண்டும் முரணானவை என்றாலும் கூட சுவாரசியமானவை தான்.
———–
(புத்தகத்தை அவர் வலைப்பதிவு செய்த விதத்தை தொடர்ந்து பார்ப்போம்….)

0 Comments on “டார்வினுக்காக ஒரு வலைப்பதிவு -1”
lightink
pls visit my page http://www.lightink.wordpress.com
http://lightink.wordpress.com/2009/02/12/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-200/
cybersimman
i have allready read your article on darwin . its realyy good. keep it up
lightink
Thank U
Welcome
விடுதலை
உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள்
cybersimman
thanks. please read further and give your comment