தேடல் முடிவுகளை பெற உதவும் கூகுல் தேடியந்திரம், கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் புராதான கால நகரம் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது.
கூகுல் மூலம் சாத்தியமாகும் வியப்புகளுக்கு பஞ்சமே இல்லைபோலும்.
தேடல் முடிவுகளை துள்ளியமாக பெற உதவுவதாக கூறும் கூகுல், அறிமுகம் செய்துள்ள ஆழ்கடல் தேடலுக்கான சேவை மூலம் இப்போது புராதான கால நகரம் ஒன்று கடலுக்கு அடியில் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரேக்க காலத்தில் கடலில் மூழ்கியதாக கருதப்படும் அட்லான்டிஸ் என்னும் நகரை கூகுல் ஓஷன் சாப்ட்வேர் சேவை மூலம் பொறியியல் வல்லுநர் ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார்.
வடமேற்கு ஆப்பிரிக்கா அருகே உள்ள கேனரி என்னும் தீவுக்கு பக்கத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த நகரம் புதைந்து கிடப்பதாக அவர் கூறியுள்ளார்.
செயற்கை கோள் புகைப்படங்களின் மூலம் பூமியின் மேற்பரப்பை அலசி ஆராய கைகொடுக்கும் கூகுல் எர்த் சாப்ட்வேரின் விரிவாக்கமாக கூகுல் ஓஷன் சாப்ட்வேரை கூகுல், கடந்த மாதம் அறிமுகம் செய்தது.
இந்த சாப்ட்வேர் சேவையின் மூலம் ஆழ்கடலுக்கு அடியில் உலா வர முடியும். அங்குள்ள காட்சிகளை தேடிப்பார்க்க முடியும். பலர் இந்த சேவையை பயன்படுத்தி தேடலில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தேடலில் ஈடுபட்ட பெர்னி பாம்போர்டு என்னும் பொறியியல் வல்லுநர் கேனரி தீவுகள் அருகே புராதான நகரம் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்.
சுமார் 620 மைல்கள் சுற்றுப்பரப்பில் நகரத்தை உணர்த்தக்கூடிய செவ்வகக்கோடுகளை கொண்டதாக இந்த நகரம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். கிரேக்க காலத்தில் கடலில் மூழ்கியதாக கருதப்படும் அட்லான்டிஸ் நகரமாக இது இருக்கலாம் என்று ஆய்வாலர்கள் கருதுகின்றனர். ஏதென்சை கைப்பற்ற முயன்ற போது இந்த நகரம் கடலில் மூழ்கியதாக கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த கண்டுபிடிப்பு முக்கியமானது என்றும், இது தொடர்பாக மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
=—————–
.ஏற்கனவே எழுதிய ‘கூகுல் கண்டுபிடித்த காதல் தீவு.பதிவை படிக்க….