பேங்க் ஆப் அமெரிக்கா தெரியும்.பேங்க் ஆப் ஒபாமா தெரியுமா?
ஒபாமா பெயரில் ஆர்ம்பிக்கப்பட்டுள்ள புதிய வங்கி இது.ஆனால் நிஜ வங்கி இல்லை . இண்டெர்நெட் வங்கி.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இந்த வங்கிக்கும் நேரடி தொடர்பு கிடையாது. உண்மையில் அவரது திட்டத்திற்கு எதிரான இணைய விமர்சனம் இது.
அமெரிக்க பொருளாதாரம் ஆடிப்போனதும் அதை மீட்க மாபெரும் கடனுதவி திட்டம் அறிவைக்கப்பட்டிருப்பதும் உங்களுக்கு தெரிந்த்திருக்கலாம். அதிபராக புஷ் இருந்த காலத்தில் அறிவைக்கப்பட்ட இந்த திட்டத்தை ஒபாமா முன்னெடுத்துச்சென்றுள்ளார்.
திவாலாகும் நிலையில் உள்ள நிறுவனங்களை மீட்க இந்த திட்டம் பயன்படுத்தப்படும். இந்த திட்டம் அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்கள் வரிப்பணத்தை இப்படி வாரியிறைக்கலாமா என்னும் விமர்சனமும் எழுந்துள்ளது.நிர்வாகிகளின் பொறுப்பற்றத்தனத்திற்கு மக்களின் வரிப்பணம் ஏன் வீணடிக்கப்பட வேண்டும் என்றுப் கேட்கப்படுகிறது.
உண்மையில் இப்படி கடன் உதவு அளிப்பதால் பொருளாதாரத்தை மீட்க முடியாது என சொல்பவர்களும் இருக்கின்றனர்.
அமெரிக்க சமூகத்தில் இது பரவலான விவாதத்தை உருவாக்கியுள்ளது. விவாதத்தையும் விமர்சனத்தையும் மீறி ஒபாமா அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இந்ததிட்டத்தை அதரிப்பவர்களும் இருக்கின்ற்னர் என்பது வேறு விஷயம்.
நிற்க இந்த திட்டம் தவறானது என நம்புவர்கள் தங்கள் எதிர்ப்பை எப்படி தெரிவிப்பது. இப்படி யோசித்துப்பார்த்த நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒபாமா திட்டத்தை பகடி செய்வதற்காக என்று ஒரு இணைய தளத்தை அமைத்தனர்.
அந்த தளத்தின் பெயர் தான் பேங்க் ஆப் ஒபாமா. அதாவது ஒபாமா வங்கி.
இந்த வங்கியில் காசு போடவோ, காசு எடுக்கவோ முடியாது.ஆனால்
ஒபாமா கடனுதவி வழங்குவது போல இந்த தளத்திலிருந்து அமெரிக்கர்கள் த்ங்கள் நண்பர்களுக்கு கடனுத்விக்கான காசோலையை அனுப்பி வைக்கலாம்.
ஒபாமா வங்கியில் இந்த காசோலையை மாற்றிக்கொள்ளலாமாம்.
ஆனால் கையில் காசு கிடைக்காது.சும்மா ஒரு அடையாளம். அவ்வளவு தான்.
ஒபாமா திட்டத்தை நகைச்சுவை உணர்வோடு விமர்சிப்பதற்காக இந்த தளத்தை அமைத்துள்ளனர்.
எதிர்ப்பு உணர்வை எப்படியாவது காட்ட வேண்டமா?”
—————-

0 Comments on “ஒபாமா வங்கி தெரியுமா?”
surya
Xlent…