கூகுலுக்காக பெயர் மாற்றம்

gகூகுலில் முன்னுரிமை பெறுவதற்காக என்ன வேண்டுமானால் செய்யலாம். அப்படியுருக்க பெயரை மாற்றக்காள்ளக்கூடாதா என்ன? அது தான் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த நகரம் ஒன்று தனது பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறது.

பல் வேறு காரணங்களுக்காக நகரங்களின் பெயர் மாற்றப்படுவதுண்டு. சென்னை,மும்பை,கொல்கத்தா, என நமக்கு பெயர் மாற்றத்தில் அதிக அனுபவம் உண்டு.

ஆனால் கூகுலுக்காக பெயரை மாற்றிக்கொள்ளும் முதல் நகரம் பிரான்சின் ‘ஈயூ’வாகத்தான் இருக்கும்.

‘ஈயூ’ வடக்கு பிரான்சில் இருக்கிறது.சிறிய நகரம் தான். ஆனால் பார்த்து ரசிக்கக்கூடிய பல அழகிய இடங்களை கொண்டது. குறிப்பாக இங்குள்ள தோட்டங்கள் விஷேசமானவை. ஒருவிதத்தில் நகரின் வருவாயும் சுற்றுலாவையே சார்ந்திருக்கிறது.

இந்நகரின் மேயருக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. சர்வதெச பயணிகளை அதிக அளவில் கவர‌ வேண்டும் என்பதும் அவரது திட்ட்ம்.

இங்கு தான் பெயர் பிரச்சனை வருகிறது. இந்த இண்டெர்நெட் யுகத்தில் வலை மூலம் தானே சுற்றுலா பயணிகள் புதிய இடங்களை தெரிந்துகொண்டு வருகின்றனர். நெட் மூலம் பார்க்கவேண்டிய இடங்களை தெரிந்து கொள்வதோடு ஆன்லைன் மூலமே பயண திட்டத்தையும் வகுத்த்க்கொள்கின்றனர்.

ஈயூ, என்பது யூரோப்பிய ஒன்றியம் போன்ற பிரபலமான அமைப்புகளின் சுருக்கமான அடையாளமாக இருப்பதால் கூகுலில் தேடும்போது இவையே முதல் இடத்தில் வருகின்றன. நகரின் பெயர் தேடல் பட்டயலில் பின்னுக்குத்த்ள்ளப்பட்டு விடுகின்றது.

இதனால் இண்டெர்நெட் மூலம் வரக்கூடிய பயணிகள் வராமல் போய்விடுகின்றனர்.

கூகுலில் இடம் கிடைக்காமல் போவதால் ஏற்படும் இந்த இழப்பை நினைத்து கவலைப்பட்ட நகர மேயர் மேரி குவோயர் இதற்கு தீர்வு என்ன என்று யோசித்திகொண்டிருந்தார். அப்போத் தான் கூகுலுக்காக பெயரை மாற்றிகொண்டால் என்ன என்று யோசித்தார்.

கூகுல் கண்டுக்கொள்ள்க்கூடிய பெயரை வைத்துக்கொண்டால் தேடலில் பின்த்ங்கிவிடும் வாய்ப்பு இருக்காது என்றும் அவர் நம்பினார். தேடியந்திங்களுக்கன விளம்பர உத்திகளைவிட இது சிற‌ந்த்து என் அவர் நம்பினார்.

இதன்படி நகரின் பெயரை வில்லெ டி ஈயூ என மாற்ற்ன் செய்ய முடிவு செய்துள்ளார்.

இண்டெர்நெட்டை பொறுத்தவரை நம்மை அப்டேட் செய்துகொள்ளாவிட்டால் அவ்வளவு தான் என்று அவர் கூறூகிறார்.

ஆக கூகுலுக்காக இந்தநகரின் பெயர் மாற் உள்ளது.

நிற்க , நம்மூரைப்போல அங்ஙே பெயர் மாற்றுவது அத்தனை சுலபம் இல்லை. முதலில் பெயர் மாற்றம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கு ஆதரவு கிடைக்க வேண்டும் . அதன் பிற்கு இந்த மாற்றத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடைக்க 5 ஆன்டுகள் ஆகுமாம். எப்படி இருக்கிறது பாருங்கள்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *