காஸ்ட்ரோவுக்கு ஒரு தேடியந்திரம்

castroகியூபாவை பொறுத்தவரை நிலையான உண்மை என்று ஒன்று கிடையாது. நீங்கள் எந்த இடத்தில் இருந்து பார்க்கிறீர்கள் என்பதை பொருத்து கியூபா தொடர்பான விஷயங்களுக்கு, வேறு விதமான அர்த்தமும், புரியதலும் உண்டாகும்.
.
கம்யூனிசத்தின் கடைசி புகலிடம் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட கியூபா (இன்று வெனிசுலா,பிரேசில் என்று பல நாடுகள் சோஷலிச பாதைக்கு மாறி விட்டன.) அதன் காரணமாக கம்யூனிச ஆதரவாளர் களுக்கும், அதன் எதிர்ப்பாளர் களுக்கும் வெவ்வேறு விதமாக காட்சி அளித்து கொண்டிருந்தது.

அமெரிக்க முகாமை சேர்ந்தவர்கள் கியூபாவின் உண்மை நிலையை மறைத்து விட்டு, அதன் நல்ல விஷயங்களையெல்லாம் பொய் பிரச்சாரம் என்று சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்தநிலை இன்னும் தொடர்கிறது.

அதே நேரத்தில் அமெரிக்க எதிர்ப்பாளர்களோ, கியூபாவில் சமத்துவம் தழைத்தோங்குவதாகவும், பிடல் காஸ்ட்ரோ அரசு, மக்களுக்கான சமூக கடமையை செவ்வனே செய்து வருவதாகவும் நம்புகின்றனர். அடிப்படை சுகாதாரம், ஆரம்ப கல்வி, பேரிடர் பாதுகாப்பு ஆகியவற்றில் வேறு எந்த நாட்டையும் விட கியூபா சிறந்த முறையில் செயல்பட்டு உலகுக்கே முன்னுதாரணமாக திகழ்வதை மறுப்பதற்கில்லை.

ஆனால் அமெரிக்காவோ, இந்த மக்கள் நல திட்டங்களையெல்லாம் விட, அங்கு ஜனநாயகம் இல்லாத தையும், கருத்து சுதந்திரம் பறிக்கப் பட்டு, பேச்சுரிமை படாதபாடு பட்டு கொண்டிருப்பதாகவும் தான் பேசி வருகிறது. எல்லா விஷயங்களிலுமே இந்த இருவேறு முகாம்களின் தாக்கத்தை பார்க்க முடியும்.

கியூபாவில் இருந்து வெளியான‌ இன்டெர்நெட் தொடர்பான செய்தியிலும் இதே நிலை பிரதிபலிப்பதை பார்க்கலாம். கியூபா தனக்கென தேடியந்திரம் ஒன்றை உருவாக்கி அறிமுகம் செய்த செய்தி அது.

எனினும் இது கூகுலை போல பரந்து விரிந்த தேடியந்திரம் அல்ல, கியூபாவுக்கு மட்டுமான தேடியந்திரம். உண்மையில் இந்த தேடியந்திரத்துக்கு இன்டெர்நெட்டில் உள்ள தகவல்களை தேட முடியாது. கியூபா சார்ந்த இணைய தளங்களில் உள்ள தகவல்களை மட்டுமே தேடுவதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தேடியந்திரத்தின் மற்றொரு சிறப்பம்சம், கியூபா புரட்சிக்கு வித்திட்ட பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய அனைத்து உரை களையும், தேடி பார்க்கும் வசதியை கொண்டிருப்பது தான். 1959-ல் கியூ பாவில் கம்யூனிச புரட்சி மலர்ந்த நாள் தொட்டு, காஸ் ட்ரோ ஆற்றிய உரைகளில் தேவையான எந்த பகுதியையும் தேடிப் பார்க்கும் வசதி இந்த தேடியந் திரத்தில் உண்டு.

காஸ்ட்ரோ அபிமானிகளுக்கு இதைவிட நல்ல செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது.
ஆனால் மேற்கத்திய மீடியாவோ இந்த செய்தியை வேறு விதமான அர்த்தத்தில் வெளியிட்டிருக்கிறது.

கியூபா தனக்கென தனியே தேடியந்திரத்தை வடிமைத்திருக்கிறது என்று கூறிவிட்டு, உலகிலேயே இன்டெர்நெட் பயன்பாடு மிகவும் பின்தங்கியிருக்கும் நாடுகளில் கியூபாவும் ஒன்று என்று துவங்கி, கியூபாவில் இல்லாத விஷயங்களை பற்றி தொடர்ந்து குறிப்பிடப் பட்டுள்ளது.

கியூபாவில் போதிய இன்டெர்நெட் இணைப்புகள் இல்லை என்றும், அங்கு இன்டெர்நெட்டை பயன் படுத்த வேண்டும் என்றால், அரசு கம்ப்யூட்டரையே நாட வேண்டும் என்றெல்லாம் எழுத பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கியூபாவில் இ-மெயில் அனுப்புவது கூட எல்லோருக்கும் இயலாத சாகசம் என்றும், அதற்காக பாஸ்வோர்ட் களையெல்லாம் கள்ளச்சந்தையில் விற்பதாகவும் செய்தி கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

அந்த அளவுக்கு கியூபாவில் இன்டெர்நெட் வசதி இல்லாமல் இருப்பதாகவும், கருத்து சுதந்தர மின்மையின் மற்றொரு அடையாளம் இது என்றும் பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக கியூபாவில் இன்டெர் நெட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியவில்லை.

இன்டெர்நெட்டின் ஆதார வலைப்பின்னலில் இணைய முடியாமல் கியூபா இயன்றவரை, தனியே இன்டெர்நெட்டை உருவாக்கி செயல்பட்டு வருகிறது.

தற்போது வெனிசுலா உதவியோடு இன்டெர்நெட் வசதியை மேலும் மேம்படுத்தும் முயற்சியில் கியூபா இறங்கியுள்ளது. அந்த வகையில் அந்நாட்டுக்கான தனி தேடியந்திரம் நல்ல செய்திதான்.

———-

link;
http://www.2×3.cu/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “காஸ்ட்ரோவுக்கு ஒரு தேடியந்திரம்

  1. lightink

    அருமையான கட்டுரை தெளிவாக கியூபா பற்றி கூறியிருக்கிறீர்கள்.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *