தொழில்நுட்ப பயன்பாடு பற்றி யோசிக்கும் போது கி.ரா.பற்றி நினைவுக்கு வர வாய்ப்பில்லை. ஆனால் இன்டெர்நெட் பள்ளி பற்றி படிக்கும்போது கி.ரா.வை நினைத்துப் பார்க்க தோன்றுகிறது.
கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் கி.ராஜ நாராயணன், பள்ளி அனுபவம் பற்றி குறிப்பிடும் போது “மழைக்கு மட்டுமே பள்ளியில் ஒதுங்கியிருக்கிறேன், அப்போதும் மழையையே பார்த்து கொண்டி ருந்தேன்’ என்று கூறியிருக்கிறார்.
கி.ரா.வுக்கு பள்ளிப் படிப்பில் அப்படியொரு ஆர்வம். ஆனால் மனிதன் படிக்காத மேதை என்பதை அவரது புத்தகங்கள் சொல்லும்.
பள்ளியை வெறுப்பவர்கள் கி.ரா.வை மேற்சொன்ன வாக்கியத் திற்காக அவரை தலையில் வைத்து கொண்டாடலாம். இப்போது விஷயம் அதுவல்ல. 80 வயதை கடந்திருக்கும் கி.ரா. தனது பால்யகால அனுபவத்தை மீறி பள்ளிக்கு சென்று படிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பள்ளிகளை அதன் இறுக்கமான சூழ்நிலைக்கும், கட்டுப்பாட்டுக்கும் வெறுத்து ஒதுக்கினாலும் இயல்பான பயிலும் சூழ்நிலை வாய்த்தால் கி.ரா. நிச்சயம் பாடம் படிக்க விரும்புவார். அல்லது குறைந்தபட்சம் அமெரிக்காவில் அறிமுகமாகியிருக்கும் இன்டெர் நெட் பள்ளி பற்றி கேள்விப்பட்டால் நிச்சயம் வரவேற்கவே செய்வார்.
இன்டெர்நெட் யுகத்தில் வகுப்பறை களில் கம்ப்யூட்டர் களும், லேப்டாப்களும் வரத் தொடங்கியிருக்கும் காலம் இது.
கரும்பலகைகளுக்கு விடை கொடுத்து விட்டு பிளாக் தளம் மற்றும் பாடுகாஸ்டிங் மூலம் பாடம் நடத்தும் 22ம் நூற்றாண்டில் வழிகள் இப்போது அறிமுகமாக தொடங்கி இருக்கிறது.
பாரம்பரிய வகுப்பறைகளை இன்டெர்நெட் மாற்றி விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இன்டெர்நெட் மூலமே கல்வி பயிலும் ஆன்லைன் வகுப்புகளும் பிரபலமாகி இருக்கின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் போர்ட்லேண்டு நகரை சேர்ந்த இன்சைட் ஸ்கூல்ஸ் (இந்த பெயருக்காகவே கி.ரா. இப் பள்ளியை பாராட்டுவார். அதாவது கருத்தூன்றி கற்றல் என்று பொருள்படும் வகையில் இந்த பள்ளிக்கு பெயரிடப் பட்டுள்ளது) எனும் நிறுவனம் இந்த இன்டெர் நெட் பள்ளிகளை தொடங்கி உள்ளது. இந்தியாவை போலவே அமெரிக்காவிலும் படிப்பை பாதியில் நிறுத்துவதும், தொடராமல் போவதும் சகஜமாக இருக்கிறது. நம்மூரில் வறுமையும், வாய்ப்பின்மையும் கூடவே அரசின் அலட்சியத்தாலும் இது நேர்கிறது என்றால், அமெரிக்காவில் வேறு பல காரணங்களால் மாணவர்கள் படிப்பை தொடராமல் விட்டு விடுகின்றனர்.
புள்ளி விவர கணக்குப்படி அந் நாட்டில் உயர்கல்வியை தொடரா மல் முழுக்கு போடுபவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
படிப்பை கைவிடுபவர்கள் ஆர்வ மின்மையால் இந்த முடிவை மேற் கொள்வதில்லை. சுயமாக சம்பாதிக் கவும், தங்களது குடும்பத்தை காப்பாற்றவும் இன்னும் சில நேரங்களில் குழந்தை பெற்று கொள்ளவும் பள்ளிக்கு போவதை நிறுத்திக் கொள்கின்றனர்.
இதை தவிர பள்ளி சூழ்நிலை நமக்கு சரிபட்டு வராது
என்று நினைப்பவர்களும்
படிப்பை தொடராமல் விட்டு விடுவதுண்டு.
இத்தகைய மாணவர்கள் தொடர்ந்து கல்வி பெற வசதியாக “இன்சைட் ஸ்கூல்ஸ்’ எனும் பெயரில் இன்டெர்நெட் பள்ளிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் விருப்பம் போல கல்வி பயிலலாம்.
பள்ளி சூழ்நிலையை விரும்பாத வர்களும், தனிப்பட்ட அல்லது மருத்துவ காரணங்களுக்காக பள்ளிக்கு வர முடியாதவர்களும் இந்த பள்ளியில் பயிலலாம். கடந்த ஆண்டு துவக்கப்பட்ட இந்த பள்ளி யில் 200 மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதாம்.
ஆனால் அதை விட மும்மடங்கு அதிகமான மாணவர்கள் சேர்ந்திருக் கின்றனர். இதனையடுத்து வரும் ஆண்டு இந்த பள்ளியின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.
அமெரிக்காவின் மேலும் பல மாநிலங்களுக்கு இந்த பள்ளி விரிவுபடுத்தப்பட உள்ளது.
“மை ஸ்பேஸ்’ யுகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தர இன்டெர்நெட் பள்ளி பொருத்த மானது என்று சொல்கிறார் இந்த பள்ளிகளை தொடங்கியுள்ள நிறுவனத்தின் தலைவர் கீத் வோல்ரிச்.
இந்த பள்ளி எப்படி செயல் படுகிறது என்பது பற்றி மேலும் விவரம் அறிய விரும்புபவர்கள் “இன்சைட் ஸ்கூல்ஸ்’ இணைய தளத்திற்கு சென்று பார்க்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் நம் நாட்டிலும் இத்தகைய பள்ளியை அமைத்து கிராமப்புற மாணவர்களுக்கு
கல்வி அறிவு ஊட்ட முன்
வரலாம்.
——————

0 Comments on “இன்டெர்நெட் பள்ளி”
iyarkai
யூத் விகடன் வாழ்த்துகள்
englishkaran
வாழ்த்துக்கள்
cybersimman
thanks