பள்ளி,கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற பிறகு பழைய பாட புத்தகங்களை ஜுனியர் மாணவர்களுக்கு விற்பது போல பாட குறிப்புகளையும் பகிர்ந்துக்கொள்ள முடியும் தெரியுமா? இதற்காக என்றே இருக்கும் இணையதளம் தான் கிரேட்குரு.
பாட புத்தகங்கள், அவற்றுக்கான உரைகளை விட வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது சேகரிக்கும் குறிப்புகளுக்கு உள்ள மதிப்பும் பயன்பாடும் தனிதான். நல்ல மானவர்கள் இந்த குறிப்புகளின் அருமையை நன்கு உணர்ந்திருப்பார்கள்.
அதே போல நல்ல மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகும் போது குறிப்புகள் எடுக்காமல் படிக்க மாட்டார்கள். பாடங்களை உல்வாங்கிக்கொள்ள குறிப்புகள் நிச்சயம் பேருதவியாக இருக்கும்.
குறிப்புகளுக்கு இரண்டு விஷயங்கள் முக்கியம்.வகுப்பில் நன்றாக கவனிக்கவேண்டும். படிக்கும் போது விஷயங்களை நன்கு கிரகித்துக்கொள்ள வேண்டும்.
நிற்க படிப்பை முடித்தப்பிறகு இந்த குறிப்புகள் பயனற்று தானே போகும். அவ்வாறு வீணாக வேண்டியதில்லை. குறிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம் பரஸ்பரம் பயன் பெறலாம் என்னும் நோக்கத்தோடு அமைக்கப்பட்டுள்ளது கிரேட் குரு இணைய தளம்.
இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்ட பிறகு மாணவர்கள் தங்களிடம் உள்ள பாட குறிப்புகளை இங்கே பதிவேற்றலாம். பாடப்பிரிவின் தலைப்பை குறிப்பிட்டு , வகுப்பில் எடுக்கப்பட்டதா, தேர்வுக்கு தயாரிக்கப்பட்டதா , என்பதையும் குறிப்பிடலாம்.
இதுன் இண்டெர்நெட் யுகம் அல்லவா எனவே குறிப்புகளும் கோப்புகளாகவும் பிடிஎப் கோப்புகளாகவும் இடம் பெற்றுள்ளன.
ஜுனியர் மாணவர்கள் இந்த குறிப்புகளை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். முன்கூட்டியே தயாராக விரும்பும் மாணவர்கள் வகுப்பு துவங்கும் முன்னே இந்த குறிப்புகளை வாங்கி தயாராகலாம்.
வகுப்பு குறிப்புகளை பகிர்வதன் மூலம் ஜுனியர்களுக்கு குருவாகலாம் என்று மிந்த தளம் குறிப்பிடுகிறது.
பகிர்ந்து கொள்பவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அதிக புள்ளிகளுக்கு பரிசும் உண்டு. நன்றாக குறிப்பெடுத்தவர் என்ற பட்டமும் கிடைக்கலாம். மதிப்பீடும் உண்டு.
பகிர முன்வரும் மாணவர்களுக்கு உள்ளபடியே சுவார்ஸ்யமான வைஷயங்கள் உள்ளன. மாணவர்கள் தங்களுக்கான பக்கத்தை உருவாக்கிக்கொண்டு, படித்த கல்லூரி, குறிப்பின் தன்மை போன்ற விவரங்களையும் குறிப்பிடலாம். அவர்களுக்கான மதிப்பெண்கள், மதீப்பீடு போன்ற விரங்களும் இட்ம்பெற்றிருக்கும்.
இதே போல குறிப்புகளை தெட வரும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரியை கூட தேர்வு செய்து தேடலாம்.பட வகைகளை சொல்லியும் தேடலாம். தங்களுக்கு தேவைப்படும் குறிப்புகளையும் வேண்டுகோளாக சமர்பிக்கலாம்.
அமெரிக்க மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது இந்த தளம். பிரிட்டன் மாணவர்களுக்கான பகுதியும் உள்ளது.
மாணவர்கள மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தளம் ஆசிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது காபியடித்தலுக்கு வழி வகுக்கும் என்ற அச்சமே காரணம். ஆனால் தளத்தை உருவாக்கியவர்களோ அது தங்கள் நோக்கம் அல்ல என்கின்றனர். காபியடிக்க இவற்றை பயன்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
———–