குடியை மறக்க ஒரு இணைய தளம்

1-drinkகுடியை மறக்க மூலிகை மருந்து கொடுப்பதாக நம்மூர் பேருந்துகளில் எல்லாம் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பதை பார்க்கலாம். இது எந்த அளவுக்கு பயன் தரக்கூடியது என தெரியவில்லை. ஆனால் குடிக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது எத்தனை கடினமானது என்பதை இந்த விளம்பரங்கள் உணர்த்துவதாக கொள்ளலாம்.

குடிப்பழக்கத்தை கைவிட சிறந்த வழி எது என்பது ஒருபுறம் இருக்கட்டும்,இண்டெர்நெட் மூலம் குடி பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கலாம் அல்லது விடுபட வைக்கலாம் என்பது தெரியுமா?

அமெரிக்க அரசு சார்பில் இதற்காக‌ ரீதிங்க் டிரிங்கிங் என்னும் பெயரில் ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

நிச்சயம் இந்த தளம் ஒரு பயணுள்ள முயற்சி தான்.

உங்கள் குடிப்பழக்கத்தையும் ஆரோக்கியத்தையும் மறுபரிசிலனை செய்யுங்கள்
என அழைப்பு விடுக்கும் இந்த தளம் இரண்டு விஷயங்களை செய்கிறது.ஒன்று சரியான கேள்விகளை எழுப்புகிறது. மற்றொன்று குடியில் இருந்து மீள்வதற்கான தகவல்களை வழங்குகிறது.

கேள்விகள் உள்ளபடியே குடிகாரர்களை யோசிக்க வைக்ககூடியவை.

குடிகாரர்கள் என்னும் பதம் சிலரை அதிருப்தியடைய செய்யலாம்.குடிக்காரர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு குடிப்பதில்லை என்று பலரும் கூறக்கூடும். அளவுடனே மது அருந்துவதாக அவர்கள் கூறக்கூடும்.

ஆனால் அளவோடு குடிப்பது என்றால் என்னவென்று இந்த தளம் முதல் கேல்வியை எழுப்புகிறது.இதற்கான ஏற்றுக்கொள்ள‌ப்பட்ட அளவுகளை பதிலாக தருவதோடு பலவகையான மதுவில் உள்ள சாரயத்தின் அளவும் குறிப்பிடப்படுகிறது.எளிமையான தகவல்கள் தான் என்றாலும் யோசிக்க வைக்கக்கூடியவை. குடி பற்றி எத்தனை தவறான கருத்த்க்களையும் ,அறியாமையும் கொண்டிருக்கிறோம் என சிந்திக்க‌ வைப்பவை.

இந்த கேள்வியை கடந்தால் வழக்கமாக அருந்தப்படும் மதுவில் கலந்திருக்கும் சாரயத்தின் அளவு தெரியுமா என்னும் கேள்வி கேட்கப்பட்டு அதற்கான பதில் அளிக்கப்படுகிறது. அடுத்த கேள்வி தள்ளாடாத நிலை என்று கருதப்படும் அளவின் மாயை தகர்க்கக்கூடியது.

குடியால் நன்மை உண்டா,குறைவாக குடிப்பது என்றால் என்ன போன்ற கேள்விகளின் வழியே இது சாத்தியமாகிறது.

நான்காவது கேள்வி தற்போது கட்டுப்பாட்டோடு குடித்து வந்தாலும் ,குடிக்கு அடிமையாகும் வாய்ப்பு இருப்பது தெரியுமா என்று அச்சுறுத்துகிறது.வரும் முன் காப்போம் என்று சொல்வதைப்போல குடிக்கு அடிமையாவத‌ற்கான அறிகுறிகள் குறித்த அடுக்கடுக்கான கேள்விகள் மூலம் அந்த நிலைக்கு செல்லும் முன்னே சுத்ஹரித்துக்கொள்ள உதவுகிறது.

அடுத்த கேள்வி மற்ற அமெரிக்கர்களின் குடி பழக்கத்தோடு ஒப்பிட்டு நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என் அறிய உதவுகிறது. ஒரு விதத்தில் இதுவும்
விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

இந்த கேள்விகளில் உலா வந்து கொண்டிருக்கும் போதே குடிப்பழக்கம் குறித்த தீர்மானமான என்ணங்கள் ஆட்டம் கண்டுவிடலாம். ஒன்று நிச்சயம் நான் குடிப்பேன் ஆனால் அடிமையாக மாட்டேன் என்று எந்த கொம்பனாலும் கூறுமுடியாது என்பதை இந்த பகுதி உணர்த்துகிறது.

அடுத்த கட்டம் குடி பழக்கத்திலிருந்து விடுபடுவத‌ற்கான உபாயங்களை எடுத்துச்சொல்கிறது.

குடிப்பதை விட்டுவிடுவது உங்கள் கையில் தான் இருக்கிறது என்னும் குறிப்போடு துவங்கும் இந்த பகுதி குடிப்பதால் விளையக்கூடிய பாதிப்புகளை பட்டியலிட்டி விட்டு குடியை மறப்பதற்கான வழிகளை சொல்கிறது. யார் யாருக்கு எந்த வழிமுறைகள பொருத்தமாக இருக்கும் என்றும் சொல்லப்பசுகிறது.

தனிநபர்களுக்கு மட்டுமல்ல சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் இந்த தளம் கைகொடுக்கும். இதில் உள்ள தகவல்களை அச்சு வடிவில் பிரதியெடுத்தும் பயன்படுத்தலாம்.

————–

link;
http://rethinkingdrinking.niaaa.nih.gov/default.asp

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

4 Comments on “குடியை மறக்க ஒரு இணைய தளம்

  1. super information thankkyou cyberimman

    Reply
  2. நம்ம ஊருக்கு என்ன வந்தாலும் ஒண்ணும் நடக்காது..??

    5 கிலோமீட்டருக்கு 7 கடைகள் இருந்தா.. ??

    விளங்குமாய்யா..??

    தகவலுக்கு நன்றி.

    Reply
    1. cybersimman

      marupadiyum thanks

      Reply
  3. Bala

    Valuable information specically for youths …..

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *