எஸ்.எம்.எஸ். எல்லோருக்கும் தெரியும். எஸ்.எம்.எஸ்.சோடு ஒரு சி சேர்த்துக் கொண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? எஸ்.எம்.எஸ்.சி. என்று சொன்னால் பலருக்கு தெரியாது.
இதற்கு ஷாட் மெசேஜிங் சர்வீஸ் சென்டர் என்று பொருள். நாமறிந்த எஸ்.எம்.எஸ்.க்கு முன்னோடி இந்த சென்டர்தான்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எஸ்.எம்.எஸ்.சி. அறிமுகமானது. ஆக்சியான் எனும் நிறுவனம் இந்த சேவையை அறிமுகம் செய்தது.
அதன் பிறகு டிசம்பர் 3ந் தேதி பிரிட்டனை சேர்ந்த நீல் பாப்வர்த் என்பவர், தனது நண்பர்களுக்கு இந்த சேவையை பயன்படுத்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்தார்.
வோடோபோன் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், சக ஊழியர் களுக்கு இந்த செய்தியை அனுப்பினார். எஸ்.எம்.எஸ். சேவை பிறந்தது அன்றுதான்.
உலகில் அனுப்பி வைக்கப்பட்ட முதல் எஸ்.எம்.எஸ்.சாக அது கருதப்படுகிறது. அதன் பிறகு நோக்கியா நிறுவனத்தை சேர்ந்த ரிக்கு பிக்கோனன் என்பவர் செல்போனிலிருந்து எஸ்.எம்.எஸ். செய்தி ஒன்றை அனுப்பி வைத்தார்.
செல்போன் மூலம் அனுப்பப்பட்ட முதல் எஸ்.எம்.எஸ். செய்தி அது. எனினும் அந்த காலத்தில் எஸ்.எம்.எஸ். அத்தனை பிரபலமாக வில்லை என்பதோடு பலரும் அறியாத சேவையாகவே இருந்தது.
இதற்கு மூலக்காரணம் எஸ்.எம்.எஸ். அறிமுகமான காலத்தில் அது செல்போன் வாடிக்கையாளர் களுக் கான சேவையாக கருதப்படாமல் செல்போன் ஊழியர்கள் தங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான வசதியாகவும் நிறுவன சேவை பற்றி வாடிக்கை யாளர்களுக்கு அறிவிக்கும் சாதன மாகவும் மட்டுமே பயன்பட்டது.
மேலும் ஆரம்ப காலத்தில் செல்போன் சேவை பரந்த மனம் கொண்டதாக இல்லை. அதாவது செல்போன்கள் ஒரு நிறுவன நெட்வொர்க் இடையே மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. வேறு செல்போன் சேவையை பயன்படுத்துபவர்களோடு எஸ்.எம்.எஸ். பரிமாற்றம் செய்து கொள்ள முடியாது.
இந்த கட்டுப்பாடு காரணமாக துவக்க காலத்தில் எஸ்.எம்.எஸ். சேவை பயன் மிகுந்ததாக கருதப்படவில்லை. எனவே அது பிரபலமாகவும் இல்லை. ஆனால் 1999ம் ஆண்டுக்கு பிறகு எந்த செல்போன் சேவை நிறுவனத் தோடும், எஸ்.எம்.எஸ். பரிமாற்றம் செய்யலாம் எனும் நிலை வந்த பிறகு எஸ்.எம்.எஸ். பரவலாக பயன் படுத்தப்பட தொடங்கியது. அதோடு இந்த காலகட்டத்தில் செல்போனின் பிரதான வாடிக்கையாளர்களுக்கான இளைஞர்கள் எஸ்.எம்.எஸ்.சை விரும்பி பயன்படுத்த தொடங்கினர். இதன் காரணமாக எஸ்.எம்.எஸ். மற்ற செல்போன் சேவையை எல்லாம் பின்னுக்கு தள்ளி பிரபலமாகி விட்டது.
2000க்கு பிறகு எஸ்.எம்.எஸ். சேவை என்பது எங்கேயோ சென்று விட்டது. இன்று எஸ்.எம்.எஸ். சார்ந்தே பல மேம்படுத்தப்பட்ட சேவைகள் அறிமுகமாகி இருக்கின்றன.
எஸ்.எம்.எஸ். கருத்து பரிமாற்றத் திற்கான வாகனமாகவும், நெருக்கடி யான நேரங்களில் உயிர் காக்கும் கருவியாகவும் உருவெடுத் திருக்கிறது.
இந்த 15 ஆண்டுகளில் எஸ்.எம்.எஸ். விஸ்வரூபம் எடுத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில், எஸ்.எம்.எஸ்.சின் நாட்கள் எண்ணப்படுகிறது என்று சொன்னால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.
ஆனால் நிபுணர்கள் எஸ்.எம்.எஸ். சின் காலம் முடிவுக்கு வர போவதாக சொல்கிறார்கள். அது எப்படி நிகழும் என்று நீங்கள் கேட்கலாம். எஸ்.எம்.எஸ்.சை விட மற்றொரு சேவை பிரபலமாக போவதால்தான் இந்த நிலை என்கின்றனர்.
அதாவது செல்போன் மூலம் இமெயில் அனுப்பும் வசதி மிகவும் பரவலாகி விடும் வாய்ப்பு இருப்பதால் எஸ்.எம்.எஸ்.க்கு தேவை யில்லாமல் போய் விடும் என்று சொல்கின்றனர்.
இப்போதைக்கு செல்போன் இமெயில் சேவை என்பது அதி நவீன செல்போன் சாதனங்களை வைத் திருப்பவர்கள் மட்டுமே பயன் படுத்தக் கூடியதாக இருக்கிறது. ஆனால் இந்த நிலை மாறும் என்கின்றனர்.
செல்போன் இமெயில் சேவை சர்வசகஜமாக ஆகும் காலம் விரைவில் வரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அப்படியொரு நிலை ஏற்பட்டால் எஸ்.எம்.எஸ்.சை நாடுவோரின் எண்ணிக்கை தானாக குறைந்து போய் விடும்.
காரணம் எஸ்.எம்.எஸ்.க்கு என்று ஒரு வரம்பு இருக்கிறது. அதிகபட்சம் 160 எழுத்துக்களே எஸ்.எம்.எஸ்.சில் அனுப்ப முடியும். இந்த வரையறையே எஸ்.எம்.எஸ்.சின் தனிச்சிறப்பாக இருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் இமெயிலில் இந்த கட்டுப்பாடு கிடையாது என்பதோடு அது எஸ்.எம்.எஸ். போல் அல்லாமல் இலவசமாகவே கிடைக்கும் என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளத் தக்கது.

0 Comments on “எஸ்.எம்.எஸ். காலம் முடிகிறது”
முரளிகண்ணன்
அருமையான உபயோகமான தகவல்கள் நண்பரே.
சென்ற வார விகடன் வரவேற்பரைக்கு வாழ்த்துக்கள்
cybersimman
thanks
sasisekar
Mobile operators will promote and make affordable for voice messaging (VMS)instead of (SMS)text and keep the business alive.
surya
அப்படி நிலைமை வந்தால் … ??
இன்னும் மெயில் பார்க்கலை பாஸ்ன்னு சொல்லி தப்பிக்க முடியாதே..??
நன்றி..