யூடியூப் அற்பதமானது தான். விதவிதமான வீடியோ காட்சிகளை யூடியூப்பில் நம் விருப்பம் போல பார்த்து ரசிக்கலாம். யூடியூப்பில் ஹிட்டாகும் வீடியோக்களோடு நம்மைப்போன்ற ரசிகர்கள் பதிவேற்றியுள்ள காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம்.
நமது ரசனைக்கேற்ற காட்சிகளை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் உண்டு. நாம் ரசிக்கும் காட்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். கருத்துக்களை தெரிவிக்கலாம். உண்மையில் இப்படி காட்சிகளையும் அதனடிப்படையில் கருத்துக்களை பகிந்து கொள்வதும் தான் யூடியூப்பின் பலம்.
இதன் மூலம் புதிய வீடியோ கோப்புகளை கண்டறிய முடியும்.புதிய நண்பர்களையும் தெடிக்கொள்ள முடியும்.
எல்லாம் சரிதான். ஆனால் ஒரு சிலர் இவற்றை தேவையில்லாத இடையூறாக கருதலாம்.யூடியூப் முகப்பு பக்கமே கூட அவர்களுக்கு சிக்கலானதாக குழப்பமானதாக தோன்றலாம். காட்சிகளை மட்டும் பார்த்து ரசிக்க முடிந்தால் எப்படி இருக்கும் என அவர்கள் ஏங்கலாம்.
இத்தகைய ரசிகர்களுக்காகவே , கியுடியூப் என்னும் சேவை இருக்கிறது.இது இறைச்சல் இல்லாமல் யூடியூப் காட்சிகளை பார்த்து ரசிக்க உதவுகிறது.
கியுடியூப் தளத்தில் இருந்து இதற்கான டூல்பாரை பதிவிறக்கம் செய்து கொண்டால் கருத்துக்கள் . பின்னுட்டங்கள் போன்றவை இல்லாமல் அமைதியாக காட்சிகளை மட்டும் ரசிக்கலாம்.
இதை படிக்கும் போதே அடடா, செய்திகளுக்கும் இதே போன்ற வசதி இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றுகிறதா? .
பெரும்பாலான இனைய பக்கங்களில் செய்திகளுக்கு அருகே விளம்பரங்கள் , கிரபிக்ஸ்கள், இதர இணைப்புகள்,போன்றவை இடம்பெற்று வெறுப்பை ஏற்படுத்தலாம். இந்த தொல்லைகள் எல்லாம் இல்லாமல் தேவையான செய்தியை மட்டும் படிக்க முடிந்தால் எப்படி இருக்கும் ?
கவலையே வேண்டாம் அத்ற்கும் ஒரு இணைய தளம் இருக்கிறது.
ரீடபிலிட்டி என்னும் அந்த தளத்தில் நாம் படிக்க விரும்பும் இணைய பக்கத்தை தெரிவித்தால் நாம் விரும்பும் பகுதியை மட்டும் படிக்க முடியும்.
வாசகர்களுக்கான சரியான சேவை இது.
———–
link1;
http://quietube.com/
———

0 Comments on “அமைதியான யூடியூப்”
Logu
மிக பயனுள்ள பதிவு,,,
நன்றி..
kuppan_yahoo
why difficult method . We can mute the volume and see the youtube video. Thats what most of the employyes do in the office while watching youtube.