மல்லிகா சராபாயின் இணையதளம்

m-allikaமல்லிகா சராபாய் மக்கள‌வை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.பிஜேபி தலைவர் அத்வானியை எதிர்த்து அவர் துணிந்து களமிறங்கியுள்ளார்.

மல்லிகா தேர்தல் பிரசாரத்திற்காக இணையதளம் ஒன்றை அமைத்திருக்கிறார்.இந்த தளத்தின் மூலம் தேர்த‌லில் போட்டியிடுவது ஏன் என்னும் கேள்விக்கு அவர் தெளிவான விளக்கமும் அளித்துள்ளார்.

புதிய பாணியிலான அரசியாலுக்காக த‌ன்னோடு இணையுமாறு அழைப்புவிடுக்கும் மல்லிகா , குடிமக்களை மையமாக கொண்ட ஜனநாயகத்தை வளர்த்தெடுப்பது இதன் மூலம் சாத்தியமாகும் என்கிறார்.

தனிமனிதர்களின் மனசாட்சி அர‌சியலில் கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்று கூறும் அவர் குஜராத் ஏற்றுக்கொள்ள பழகிவிட்ட மவுனத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்கிறார்.

குஜராத் கலவரங்களையே அவர் இப்படி குறிப்பிடுகிறார்.

மல்லிகா புகழ் பெற்ற நடன கலைஞர். போராளி. ப‌ன்முக ஆற்றல் கொண்டவர். குஜராத் கலவரங்கள் குறித்து துணிச்சலாக வெளிப்படையாக குரல் கொடுத்தவர். புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சராபாயியின் மகள். படங்களில் நடித்துள்ளார்.வள‌ர்ச்சி திட்டங்களில் ஏடுபட்டுள்ளார். மக்களுக்காக்வே வாழும் கலைஞர்.

மக்களோடு தொடர்புகொள்பவர் என்றே அவ்ர் தன்னைப்பற்றி கூறுகிறார்.

நேர்மையையும் தூய்மையையும் முக்கிய அம்சங்களாக முன்வைக்கும் மல்லிகா தனது தேர்தல் நிதி மற்றும் தேர்தல் செலவுகள் குறித்த தகவல்களையும் தளத்தில் வெளியிட்டு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

பிளிக்கர், ஃபேஸ்புக், யூடியூப் போன்றவற்றை அவர் தனது பிரசாரத்திற்காக பயன்படுத்தி வருகிறார்.

—–

link;
http://mallikasarabhai.in/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “மல்லிகா சராபாயின் இணையதளம்

  1. பகிர்விற்கு நன்றி சிம்மன்.

    Reply
    1. cybersimman

      thank u very much

      Reply
  2. Pingback: சரத்பாபுவை வெற்றிபெறச்செய்ய உதவுங்கள் « Cybersimman’s Blog

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *