டிஜிட்டல் காமிரா வாங்கும் எண்ணம் இருந்து எந்த காமிராவை வாங்குவது என்னும் குழப்பமும் இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய இணையதளம் ஒன்றூ இருக்கிறது.பெஸ்டின்கிளாஸ் என்பது தான் அந்த தளம்.
காமிரா வாங்க வழிகாட்ட ஏற்கனவே பல இணைய தளங்கள் இல்லாமல் இல்லை.பல்வேறு வகையான டிஜிட்டல் காமிராக்களை அவற்றின் சிறப்பம்சங்களையும் விலையையும் ஒப்பிட்டு பார்க்கும் வசதியை அளிக்கும் தளங்களும் இருக்கின்றன.
கொஞ்சமும் தயங்காமல் இந்த தளம் முற்றிலும் வேறுபட்டது என்று சொல்லலாம்.
இந்த தளம், காமிராக்களின் அம்சங்களை பட்டியலிடுவதோடு உங்களுக்கு ஏற்ற காமிரா எது என் பரிந்துரையும் செய்கிறது.
தனது காமிரா சிபாரிசு இயந்திரத்தின் மூலம் வாடிக்கையாளருக்கான சரியான காமிராவை அடையாளம் காட்டுவதாக இந்த தளம் உறுதி அளிக்கிறது.
உங்களுக்கு பாண்டோராவை தெரியும் என்றால் சிபாரிசு இயந்திரம் பற்றியும் நிச்சயம் தெரிந்திருக்கும். பாண்டோரா இசைப்பிரியர்கள் எந்த பாடல்களை கேடு ரசிக்கலாம் என பரிந்துரைக்கும் சேவை.
இது உண்மையிலேயே வித்தியாசமான சேவை.ரசிகர்களுக்கு பிடித்த பாடல்களை கொண்டு அவர்களுக்கு பிடிக்கக்கூடிய பாடல்களை பரிந்துரைப்பதே இதன் சிறப்பு.
அநேகமாக அந்த பாடல்கள் பிடித்துப்போய்விடும். ரசிகர்கள் பல நேரங்களில் இந்த சேவையால் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். தங்கள் கேட்டிருக்கவே வாய்ப்பில்லாத பல அரிய பாடல்கள் பாண்டோரா மூலம் கேட்க முடிந்ததாகவும் பலர் நெகிழ்ந்துள்ளனர்.
இதன் காரணமாகவே பலர் பாண்டோராவில் உறுப்பினராகியுள்ளனர். இந்த பாடல்களை எல்லாம் கேட்டுபாருங்கள் என பாண்டோரா அவர்களை தொடர்ந்து அசத்தி வருகிறது.
நாமாக தெர்வு செய்வதை விட பாண்டோரா தேர்வு அற்புதம் என நினைக்கும் ரசிகர்கள் உண்டு. அதெப்படி நமக்கு பிடிக்கக்கூடிய பாடலை சரியாக பரிந்துரைக்க முடிகிறது. இசை நுணுக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சாப்ட்வேரே இதற்கு காரணம். ஒவ்வொரு பாடலுக்கும் பிரத்யேகமான பல அம்சங்கள் உண்டு.
இவை கேட்கிற நமக்கே கூட தெரியாமல் இருக்கலாம். ஆனால் சங்கீத சாப்ட்வேரால் பாடல்களின் தனித்தன்மை வாய்ந்த அம்சங்களை கன்டுபிடித்துவிட முடியும்.
இதனடிப்படையில் ஒரு ரசிகருக்கு பிடித்த அம்சங்களை கொண்ட பாடல்களை தெடி பிடித்து பரிந்துரைக்கவும் செய்கிறது.
பாடல் பிடிப்பதற்கான காரனங்களை நம்மிடம் கேட்டால், நல்ல குரல், மெல்லிசை,ராகம், வரிகள், என பொதுவான காரணங்களை மட்டும்ர்ர் கூறுவோம். ஆனால் அந்த பாடாலின் ஆதாரமாக அமையக்கூடிய கருத்துக்கு புலப்படாத நுட்பங்களை கணிதவியல் சமன்பாட்டின் அடிப்படையில் ஆராய்ந்து சொல்ல சாப்ட்வேரால் முடியும். இது தான் பாண்டோராவின் அடிப்படை. இதே அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு பாடல் குறிப்பிட்ட ரசிகருக்கு பிடிக்குமா என அதனால் சொல்லிவிட முடிகிறது. பாண்டோராவின் இந்த சேவை இசை பரிந்துரை செவை என பிரபலமாக குறிப்பிடப்பட்டு ,வேறு துறைகளிலும் இதே போன்ற பரிந்துரை சேவைகள் வந்துள்ளன. புத்தக விற்பனையில் அமேசான் டாட் காம் இதே போன்ற உத்தியை பின்பற்றுகிறது.செய்தி தளங்களும் ஏறக்குறைய உத்தியை கடைபிடிக்கின்றன.இந்த செய்தியை படித்தவர்கள் இவற்றையும் படித்தனர் என்னும் தகவலும் ஒருவிதத்தில் இதே ரகம் தான். நிற்க,மேலே சொன்ன காமிரா தளம் இதே முறையில் உங்களுக்கேற்ற காமிராவை பரிந்துரைக்கிறது. இதில் உங்கள் எதிர்பார்ப்பு,காமிராவில் நீங்கள் விரும்பும் அம்சங்கள் , உங்கள் பட்ஜெட் ஆகியவற்றை சமர்பித்தால் அவற்றின் அடிப்படையில் உங்களுக்கேற்ற காமிராவை பரிந்துரைக்கும். அநேகமாக அது உங்களுக்கு ஏற்றதாகவே இருக்கும்.
காமிரா நுட்பங்கள் மற்றும் பயன்பாடு பற்றிய தகவல்களை அலசக்கூடிய சாப்ட்வேர் இதனை செய்கிறது. விலைகலையும் , அம்சங்களையும் மட்டும் ஒப்பிட்டு காமிரா வாங்கினால் போதுமா ,அது உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்க வேன்டாமா? தொழில்முறை நிபுணர்களுக்கு தேவையான அம்சங்கள் கொண்ட காமிரா வீட்டு நிகழ்ச்சிகளை படமெடுப்பவருக்கு எதற்கு? அது தான் பயனபாட்டையும் .பட்ஜெட்டையும் கேட்டு சரியான காமிராவை இந்த தளம் சொல்கிறது.
நிபுணர்களின் கருத்துக்களை கொண்டு சாப்ட்வேர் பரிந்துரையை தருகிறது. கமிரவின் பயன்பாடு, காமிரவில் எதிர்பார்க்கும் அம்சங்கலள், விலையை குறிப்பிட்டால் அழகான காமிரவை சிபரிசு செய்கிறது.முழுக்க முழுக்க ஷாப்பிங்கிறற்கான பரிந்துரை சேவையை வழங்க திட்டமிட்டுள்ளனராம். டிஜிட்டல் காமிரா ஆர்ம்பமாம்.
———

0 Comments on “நமக்கேற்ற காமிரா எது?”
selvan
அந்த வெப்சைட் உடைய முகவரி http://www.bestinclass.com. சரியா? நன்றி
cybersimman
exactly.now see the link
rajanatarajan
dpreview.com
அறிமுகம் CVR மற்றும் photography-in-tamil.blogspot.com தாதாக்கள்.
johan-paris
கமராவுக்குப் பொருந்தலாம். ஆனால் எனக்குப் பிடித்த இசை என்பது ஆச்சரியமாக இருக்கு.
எனக்கு நம் பாரம்பரிய இசையே பிடிக்கும் அதை அது தேடித் தருமா?? அதன் வசம் உண்டா??
vizhiyan
தகவலுக்கு நன்றி.
Pingback: காமிராக்களை ஒப்பிட ஒரு இணையதளம். « Cybersimman's Blog