நாட்டாமை தீர்ப்பை ‘கேட்டு’ சொல்லு

sesterஇந்த பதிவிற்கும் நாட்டாமைக்கும் நேர‌டி தொடர்பு இல்லை. ஆனால்,நாம் பார்க்கப்போகும் இணையதளத்தின் அருமையை புரிந்துக்கொள்ள நாட்டாமை உதாரணம் உதவுக்கூடும்.

ஹெர்டிக்ட் என்பது அந்த தளத்தின் பெயர். இண்டெர்நெட்டில் முடக்கப்பட்டுள்ள தளங்களின் பட்டியலை திரட்டித்தருகிறது இந்த தளம். இதில் விஷேசம் என்ன‌வென்றால் இந்த பட்டியலை தயாரிப்பது இணையவாசிகள் தான். ஆம் இணையவாசிகளின் பங்களிப்போடு தான் தளம் உருவாகி வருகிறது.

ஆக இண்டெர்நெட்டின் மீது உங்களுக்கு பற்று இருந்தால்,அதிலும் குறிப்பாக இண்டெர்நெட்டின் சுதந்திரத்தின் மீது நேசம் இருந்தால் இதில் உங்களது பங்களிப்பை செலுத்தலாம்.
இது மிகவும் சுலபமானது தான். குறிப்பிட்ட ஏதாவது தளம் தணிக்ககைக்கு இலாக்காகி முடக்கப்பட்டிருந்தால் அந்த தகவலை இங்கு சமர்பிக்கலாம்.

நீங்கள் தினந்தோறும் பார்வையிடும் கூகுல், போன்ற தளங்களையெல்லாம் விட்டு விடுங்கள். அவற்றில் எந்த பிரச்சனையும் இல்லை.

சர்சைக்குரிய தளங்கள் மற்றும் பிரச்சனைக்குரிய தளங்கள் என்று கருதப்படும் தளங்கள் தணிக்கைக்கு உள்ளாகின்றன. அதிலும் குறிப்பாக ச‌ர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடுகளில் அரசுக்கு எதிரான தளங்கள் ம‌ற்றும் உண்மையை பேசும் தளங்கள் முடக்கப்பட்டு விடுகின்றன. கம்யூனிச நாடான சீனா இநத பட்டியலில் முன்னிலை வகிக்கிற‌து.
எகிப்து உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும் இதே நிலை தான்.

இத்தகைய த‌ணிக்கை நடவடிக்கைகளை கண்காணித்து இண்டெர்நெட் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளும் உள்ளன.

இதே நோக்கத்தோடு தான் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் இருக்கும் இண்டெர்நெட் மற்றும் சமுகத்திற்கான பெர்க்மன் மையம் ஹெர்டிக்ட் இனையதளத்தை அமைத்துள்ளது.

ஒரு தளம் முடக்கப்பட்டிருக்கிறது, அல்லது பார்க்கமுடியாமல் இருக்கிறது என்பதி இணையவாசிகளை த‌விர யார் அறிவார். அதனால் தான் இந்த தளம் முடக்கப்பட்ட தளம் பற்றிய தகவலை சம‌ர்பிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறது.

ஒரு இணையதளம் முடக்கப்ப‌ட்டால் உடனடியாக நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரிப்பீர்கள் அல்லவா , அதே தகவலை உலகோடு பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது

இப்படி இணையவாசிகள் அளிக்கும் த‌கவல்களை கொண்டு உருவாக்கப்படுவதால் இணைய தணிக்கை பற்றிய விவரங்களில் ஒரு உடனடித்தன்மை இருக்கும். அதாவது தணிக்கை நிகழும் போதே இந்த தளத்தில் அது பிரதிபலிக்கும்.

இணையவாசிகள் பங்களிப்பை குறிக்கும் வகையில் ஹெர்டிக்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஹெர்ட் + வ‌ர்டிக்ட் என்று பொருள்.ஹெர்ட் என்றால் ஆங்கிலத்தில் மந்தை என பொருள். வெர்டிக்ட் என்றால் தீர்ப்பு என அர்த்தம். இணையவாசிகள் சேர்ந்து உருவாக்குவதால் இரண்டும் இணைந்து ஹெர்டிக்ட் ஆனது. இண்டெர்நெட் தணிக்கை குறித்த தீர்ப்பை அளிப்பது இணையவாசிகளே என்று பொருள்.

நீங்கள் அறிந்திருக்கலாம் . இப்போது இணைய உலகில் இணையவாசிகளின் கூட்டு முயற்சியின் பயனாக உருவாகும் செயல்கள் பிரபலமாக இருக்கிறது.கிரவுட்சோர்சிங் என்று இந்த உத்தி சொல்லப்பபடுகிறது. அந்த வகையில் இண்டெர்நெட் தணிக்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் இணையவாசிகளின் உதவியை நாடுவதே ஹெர்டிக்டின் நோக்கம்.

இனி நாட்டாமைக்கு வருவோம். நாட்டாமையை தீர்ப்பை மாற்றச்சொல்வது சரத் படத்தால் பிரபலமாக இருக்கிறது. உண்மையில் நாம் செய்ய வேண்டியது நாட்டாமை தீர்ப்பை தான் பட்டும் வழங்காமல் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு

அதனடிப்படையில் தீர்ப்பு தருவதே சரியாக இருக்கும் . இணையவாசிகளின் பங்களிப்பை இண்டெர்நெட் பிரதானமாக்கி வரும்போது நீதிக்கும் அது பொருந்த வேண்டும் தானே.

இதன் அடுத்த கட்டமாக ஆங்கிலம் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் நடைபெறும் தணிக்கை குறித்த தகவல்கள் திர‌ட்டப்பட உள்ள‌து. இதற்கு தான் உண்மையில் அனைவரது பங்களிப்பும் அவசியம் .

ஹெர்டிக்ட் முயற்சி பற்று ஒரு கூடுதல் தகவல். இணைய தணிக்கை எதிர்த்து உருவாக்கப்பட்ட ஒபன் நெட் திட்டத்தின் அடுத்தமுயற்சி இது.

———

link;
http://www.herdict.org/web/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “நாட்டாமை தீர்ப்பை ‘கேட்டு’ சொல்லு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *