இருந்த இடத்திலிருந்தே உலகம் சுற்றிப்பார்க்க ஆசையாக இருக்கிறதா,அதற்கு சுலபமான வழி இருக்கிறது. வெப்கேம்ஸ் ட்ராவல் என்று ஒரு தளம் இருக்கிறது. இந்த தளத்திற்கு சென்றீர்கள் என்றால் உலகம் முழுவதும் உள்ள வெப்கேமிரா காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
கிட்டத்தட்ட 9 ஆயரத்துக்கும் மேற்பட்ட வேப்கேமிராக்கள் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளன. இவை பல்வேறு நாடுகளின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளவை. எல்லாமே சுற்றுலா இடங்களில் பொருத்தப்பட்டவை.
உங்க்ளுக்கு எந்த நாடு ,எந்த இடம் பிடித்திருக்கிறதோ அங்கு கிளிக் செய்து வெப்கேம் காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.
இணையவாசிகளின் வசதிக்காக பிரபலாமாக விளங்கும் வெப்கேம் காட்சிகள், சமிபத்திய காட்சிகள் ,அதிகம் பார்க்கப்பட்ட காட்சிகள் என பல்வேறு தலைப்புகளில் வெப்கேம்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
அவற்றை கண்டு ரசிப்பதோடு நீங்கள் அறிந்த வெப்கேமையும் இதில் இணைக்கலாம்.
இப்போது கூகுல் மேப்ஸ் இணைய தளத்திலும் இந்த தளம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே கூகுல் வரைபடத்தில் ஏதாவது இடத்தை பார்த்த பின் அந்த இடத்திற்கான வேப்கேமையும் கிளிக் செய்து பார்க்க முடியும்.
மேலே சொன்ன தளம் உலகலாவியது என்றால் இந்தியாவுக்காக என்று இப்படி ஒரு தளம் இருக்கிறது.பாரத்கேம் என்னும் அந்த தளத்தில் இந்தியாவில் உள்ள வெப்கேம் காட்சிகளை காணலாம்.
————–
link;
http://www.webcams.travel/
———–
link1;
http://www.bharatcam.com/

0 Comments on “கூகுலில் தெரியும் வெப்கேம் காட்சிகள்”
Pingback: உங்கள் வெப்கேமை பாதுகப்பது எப்படி? | Cybersimman's Blog