ஒரு யுகம் முடிவுக்கு வருகிறது என்பார்களே அது போலதான் இன்டெர்நெட் வரலாற்றிலும் ஒரு யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஜியோசிட்டிஸ் சேவையை இந்த ஆண்டோடு நிறுத்திக்கொள்ளப் போவதாக அதன் உரிமையாளரான யாஹு அறிவித்துள்ளது.
இப்போதைய இணையவாசிகளுக்கு ஜியோசிட்டிஸ் என்ற பெயரே கூட அந்நியமாகத் தோன்றலாம். ஆனால் இன்டெர்நெட்டின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு ஜியோசிட்டிஸ் நிறுத்தப்படுகிறது என்பதை கேட்டவுடன் நிச்சயம் வருத்தமும் வேதனையும் ஏற்படும்.
ஒரு விதத்தில் பார்த்தால் ஜியோசிட்டிஸ் காலாவதியான சேவைதான். வெப் 2.0 என்று சொல்லப்படும் இரண்டாம் அலை இணைய தளங்களின் காலத்தில் 1995ல் தொடங்கப்பட்ட இலவச இணையதள சேவையான ஜியோசிட்டிசுக்கி அதிக தேவை இல்லை.
இருப்பினும் இல்லாமல் போகும் இன்னொரு சேவை என்று இதனை அலட்சியப்படுத்தி விட முடியாது. அது மட்டும் அல்ல, இன்று இன்டெர்நெட்டில் கண்டு வரும் புரட்சிக்கு வித்திட்டது. ஜியோசிட்டிஸ் தான் என்ற வகையில் அதனை நன்றியோடு நினைத்துப் பார்த்து ஏங்காமல் இருக்க முடியாது.
டிவிட்டருக்கு முன்னால் ஃபேஸ் புக்கிற்கு முன்பாக மைஸ்பேசுக்கும் முன்னரே இவ்வளவு ஏன் பிரன்ட்ஸ்டர் உதயமாகும் முன்பே இணையவாசிக்கு என்று உருவான சேவை ஜியோசிட்டிஸ்.
அப்படியென்ன பெரிதாக செய்து விட்டது ஜியோசிட்டிஸ் என்று கேட்கலாம். சொந்தமான இணையதளம் அமைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் எல்லாம் இலவசமாக இணையதளம் வைத்துக்கொள்ள வழி செய்ததே ஜியோசிட்டிசின் சிறப்பு.
நினைத்த மாத்திரத்தில் வலைப்பதிவை தொடங்கி கருத்துக்கான பகிர்ந்து கொள்வது சுலபமாக இருக்கும் நிலையில் இலவச இணையதள சேவை என்பது சாதாரணமாகத் தோன்றலாம்.
ஆனால் ஜியோசிட்டிஸ் பிறந்த காலத்தை மனதில் கொண்டு பார்த்தால் அதன் முக்கியத்துவம் புரியும். 1995ல் ஜியோசிட்டிஸ் உதயமானது. தற்போதைய வடிவில் வலையாக (www) இன்டெர்நெட் 1993ல் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளில் இணைய தளங்கள் (அ) வலை தளங்கள் என்பதே புதுமையாக கருதப்பட்டு வந்த நேரத்தில் இலவசமாக இணையதளம் அமைத்துக் கொள்ளுங்கள் என ஜியோசிட்டிஸ் உதயமாகி வியக்க வைத்தது.
வலைவாசலான யாஹு மூலம் இன்டெர்நெட்டின் புகழும், பயன்பாடும் விரியத் தொடங்கிய பிறகு இணையதளங்கள் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டது. இணைய உலகில் தங்களுக்கென ஒரு முகவரி என்னும் விருப்பமும் பலருக்கு உண்டானது. வர்த்தக நிறுவனங்களும் தனி நபர்களும் சொந்தமாக இணைய தளங்களை அமைத்துக்கொண்டனர்.
ஆனால் சொந்தமாக இணையதளம் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடவில்லை. இணையதளம் அமைக்க பணமும், தொழில்நுட்ப அறிவும் அவசியமாக இருந்தது. தொழில்நுட்ப பரிட்சயம் இல்லாதவர்கள் இணைய வடிவமைப்பாளர்களின் உதவியை நாட வேண்டியிருந்தது.
இந்த சூழலில் தான் ஜியோசிட்டிஸ் அறிமுகமானது. யார் வேண்டுமானாலும் சொந்தமாக இணையதளத்தை அமைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்து இணைய உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆயிரக்கணக்கானோர் ஜியோசிட்டிஸ் மூலம் சொந்த இணையதளம் பெற்று சைபர்வெளியில் குடியேறினர். ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தகவல்களை அவர்களின் இணையதளங்களில் இடம்பெற வைத்தனர். முதல் சில மாதங்களிலேயே ஜியோசிட்டிஸ் மூலம் தொடங்கப்பட்ட இலவச தளங்கள் பல்லாயிரத்தை தாண்டியது.
டேவிட் போனட் மற்றும் ஜான் ரெஸ்னர் ஆகியோர் தான் ஜியோசிட்டிசை நிறுவியவர்கள். பெவர்லி ஹில்ஸ் இன்டெர்நெட் என்னும் பெயரிலேயே இந்த சேவையை துவக்கினர்.
நிஜ வாழ்க்கைக்கு நிகரான ஒரு உலகை சைபர் வெளியில் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. இணையவாசிகள் கருத்துக்களை வெளிப்படுத்தி பரஸ்பரம் நட்பை வளர்த்துக்கொண்டு ஒரு சமூகத்தை ஏற்படுத்திக்கொள்ள சாத்தியமாக வேண்டும் என்றும் நினைத்தனர்.
இவற்றுக்கு மையமாக இணையதளங்கள் அமையும் என நம்பினர். இதற்காக ஆறு பிரிவுகளில் நகரங்களை ஏற்படுத்தினர். சிலிக்கான் வேலி, ஹாலிவுட் போன்ற பெயர்கள் சூட்டப்பட்டன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட ஆர்வத்திற்கு அடையாளமாக திகழ்ந்தன.
சிலிக்கான் வேலி தொழில்நுட்பம் சார்ந்த தளங்களுக்கான இருப்பிடமாக விளங்கியது. ஹாலிவுட் சினிமா மற்றும் பொழுதுபோக்கு தளங்களுக்கான இருப்பிடமாக இருந்தது. இப்படி நகரம் சார்ந்த இணைய சமூகங்களை உருவாக்கும் கருத்தாக்கம் பிரபலமாகி பெர்லிஹில்ஸ் இன்டெர்நெட் சேவையின் பெயர் ஜியோசிட்டிஸ் என மாற்றப்பட்டது.
1990களின் பிற்பகுதியில் இன்டெர்நெட் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டபோது, ஜியோசிட்டிசும் பிரம்மாண்டமாக வளர்ந்தது. இலவச தளங்களை அளித்து அவற்றில் விளம்பரங்களை இடம்பெறச் செய்து வரவாய் ஈட்டும் முறையை பின்பற்றிய ஜியோசிட்டிஸ் ஒரு கட்டத்தில் யாஹுவுக்கு போட்டியாக திகழக்கூடிய வலைவாசலாகவும் உருவானது.
டாட்காம் அலை வீசிய 1998ல் யாஹு நிறுவனமே ஜியோசிட்டிசை 350 கோடி டாலர்களுக்கு கையகப்படுத்திக்கொண்டது.
ஜியோசிட்டிஸ் யாஹுவின் அங்கமான பிறகு பலவித சர்ச்சைகளுகு“கு ஆளானதே தவிர, எதிர்பார்த்த வளர்ச்சி பெறவில்லை.
ஜியோசிட்டிஸ் உறுப்பினர்கள் பலர் யாஹுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விலகியதோடு, யாஹு உறுப்பினர்களின் உள்ளடக்கம் தனக்கே சொந்தம் என காப்புரிமை வலை விரித்த போது பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அதன்பிறகு ஜியோசிட்டிஸ் புகழ் மெல்ல தேய்ந்து மறக்கப்படும் நிலையும் உண்டானது. 2006ம் ஆண்டில் கூட, ஜியோசிட்டிசுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்ற போதிலும், வலைப்பதிவு மற்றும் வலைப்பின்னல் தளங்களின் எழுச்சிக்குப்பிறகு ஜியோசிட்டிசின் முக்கியத்துவம் மங்கிவிட்டது.
நினைத்த மாத்திரத்தில் வலைப்பதிவை தொடங்கலாம் என்னும் நிலையில், வடிவமைப்பு கட்டுப்பாடு கொண்ட இலவச தள சேவையில் யாருக்கு ஆர்வம் இருக்கும்.
ஜியோசிட்டிஸ் தரக்கூடியதை விட பல மடங்கு வசதிகளையும் சேவைகளையும் வலைப்பின்னல் தளங்கள் வாரி வழங்குகின்றனவே.
அதிலும் குறிப்பாக பயனாளிகள் பங்கேற்பிற்கு வாய்ப்பு தரும் இரண்டாம் வலை தளங்களின் வருகைக்கு பின் ஜியோசிட்டிஸ் கற்கால சங்கதியாகிவிட்டது.
எனவே தன்னளவில் முன்னணி இடத்தை தக்க வைத்துக்கொள்ள தடுமாறிக் கொண்டிருக்கும் யாஹு இதனை கைவிட முடிவு செய்திருப்பது ஒன்றும் வியப்பில்லைதான்! இந்த ஆண்டு இறுதியோடு ஜியோசிட்டிஸ் சேவை விலக்கிக்கொள்ளப்பட இருப்பதை நினைத்து வருந்த வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால் இணையதள வசதியை இணையவாசிகளிடம் கொண்டு வந்து சேர்த்ததற்காக ஜியோசிட்டிசை நன்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டும். இணையசேவைகள் இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற கருத்தாக்கம் வலுப்பெறுவதற்கான முன்னோடி தளங்களில் இதுவும் ஒன்று என்பதை மறந்து விடக்கூடாது.
ஜியோசிட்டிஸ் உதயமாகாமல் இருந்தது.
இலவச இணையதள சேவையும் அறிமுகமாகாமல் இன்டெர்நெட்டில் எல்லாமே கட்டணமயமாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் யோசித்துப்பாருங்கள். இணையதளம் அமைப்பது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியமாகும் நிலை உண்டாகி இருக்கலாம்.
ஜியோசிட்டிஸ் இல்லாவிட்டால் வேறு ஏதோ ஒரு தளம் இந்த இலவச சேவையை வழங்கியிருக்க கூடும்தான்.
அதோடு, வலை விரியத் தொடங்கிய காலத்தில் இன்டெர்நெட் இணைப்பை கூட இலவசமாக வழங்க பல நிறுவனங்கள் முன்வந்தன. அவற்றின் ஒரு பகுதியாகவே இணையதள உருவாக்கத்தை இலவசமாகவும் திகழ்ந்தது.
இதன் தொடர்ச்சியாகவே இன்று பங்கேற்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தொழில் நுட்பமாக இன்டெர்நெட் ஜனநாயகமாகி இருக்கிறது. இந்த மாற்றத்தில் முக்கிய பங்காற்றிய தளம் என்ற வகையில் ஜியோசிஸ்சுக்கு பிரியாவிடை வழங்கலாம். இதே பாதிப்பில் உருவான டிரைபாட் மற்றும் ஆஞ்சில்பயர்ஆகிய தளங்களையும் நினைத்துப் பார்க்கலாம்.
————–
குறிப்பு; ஜியோசிட்டிஸ் சேவையை பயன்படுத்திய அனுபவம் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம்.
—-

0 Comments on “ஜியோசிட்டிஸ்;முடிவுக்கு வந்த இணைய யுகம்”
முனைவர்.இரா.குணசீலன்
பயனுள்ள இடுகை…
கோவி.கண்ணன்
//இந்த மாற்றத்தில் முக்கிய பங்காற்றிய தளம் என்ற வகையில் ஜியோசிஸ்சுக்கு பிரியாவிடை வழங்கலாம்.//
Geo City… let Rest in Peace !
Karthik
நான் என்னுடைய ஜாவாஸ்கிரிப்ட் பைல்களை Geocities தான் வைத்திருக்கிறேன். ஏற்கனவே கூகிளும் தனது Google Pages எனும் சேவையை நிறுத்தியுள்ளது.
Subash
ஜியோசிட்டீஸ்தான் எனது முதல் இணையப்பக்கத்தை வைக்க உதவியது.
தமிழ் கம்பியுட்டர் இதழ் மூலம்தான் இதைப்பற்றி அறிந்தேன்.
மூடப்போகிறார்களென்பது கொஞ்சம் மாதிரித்தான் இருக்கிறது.
கிரி
நான் இந்த சேவையை தான் முதலில் பயன்படுத்தினேன். இதில் தளத்தை வடிவமைக்க சைட் பில்டர் எல்லாம் இருக்கும், சோ நாமலே டிசைன் பண்ணலாம், ரொம்ப நல்லா இருந்தது…
அப்புறம் நீங்க சொன்னது போல ப்ளாகர் எல்லாம் வந்த பிறகு அதன் மீதான ஈர்ப்பு போய் விட்டது
manindia
I miss that. My first web page was done in the geocities in 1995.
Manindia
வெங்கட்ராமன்
கல்லூரியில் படிக்கும் போது geocities ல் பக்கங்களை ஆரம்பித்து நண்பர்களுக்கெல்லாம் முகவரி கொடுத்தது நியாபகம் வருகிறது.
புதிய விஷயங்கள் வரும் போது பழைய விஷயங்கள் வழிவிடுவது முறைதானே?
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
Minhaj
My very first website: http://www.geocities.com/winxp3d
Good bye Geo :/