கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுவது போல ஜப்பானிய பெண்மணி ஒருவர் தான் அனுப்பிய எஸ் எம் எஸ் செய்திகளை தொகுத்து புத்தகமாக வெளியிட இருக்கிறார்.
தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தவோ அல்லது புகழை விரும்பியோ அவர் இதனை செய்யவில்லை.சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தாங்க முடியாத இழப்பில் இருந்து மீள்வதற்காக மேற்கொண்ட அவர் அனுப்பிய எஸ் எம் எஸ் செய்திகளே இப்போது புத்தக வடிவமெடுக்க உள்ளது.
உண்மையில் அவரது கதை நெகிழ்ச்சியானது. நவீன தொழில்நுட்பமான எஸ் எம் எஸ் வசதியின் இன்னொரு பரிமாணத்தை உணர்த்தக்கூடியது.
டோஷிகா ஃபுகாடா என்னும் அந்த 65 வயது பெண்மணி தனது மறைந்த கணவருக்கு அணுப்பி வைத்த செய்திகளே புத்தகத்தில் இடம் பெற உள்ளது.இறந்து போனவருக்கு எஸ் எம் எஸ் அனுப்ப முடியும் என்று கேட்கலாம்.
இறந்து போனவருக்கு எஸ் எம் எஸ் அனுப்ப முடியாது தான்,ஆனால் இறந்து போனவரின் செல்போனுக்கு எஸ் எம் எஸ் அனுப்ப முடியும் அல்லவா? அதைதான் ஃபுகாடா செய்திருக்கிறார்.
ஒசாகா நகரை சேர்ந்த அவரது கணவர் கடந்த ஆண்டு இறந்து போனார்.ஆஸ்பெஸ்டாஸ் பாதிப்பால் ஏற்பட்ட நோயின் பாதிப்பு அவரது உயிர் பிரிய காரணமாக அமைந்தது.பணியிடத்தில் ஆஸ்பெஸ்டாஸ் நிறந்த சூழலில் வேலை பார்த்த்தால் அவர் பாதிக்கப்பட்டார்.இதற்காக நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.
ஆனால் ஃபுகாடாவோ கணவரின் பிரிவை தாங்கிகொள்ள முடுயாமல் தவித்தார்.சேர்ந்து வாழ்ந்த காலத்தில் இருவரும் மிகவும் அன்யோன்யமாக இருந்தனர்.ஒய்வு பெற்ற பிறகு இருவருமாக வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.எல்லாவற்றையும் விதி பாழாக்கிவிட்டது.
கனவரின் பிரிவுத்துயர் வாட்டி வதைத்த நிலையில் ஃபுகாடா ஒரு ஆறுதலுக்காக தனது கணவரின் செல்போனுக்கு எஸ் எம் எஸ் செய்திகளை
அனுப்பத்தொடங்கினார்.
இது அவருக்கு கனவர் தன்னோடே இருப்பது போன்ற உணர்வை கொடுத்தது.எஸ் எம் எஸ் செய்திகளிலேயே தனது துயரத்தையும் அவர் கணவரோடு பகிர்ந்து கொண்டார்.
நீங்கள் அருகே இருப்பது போன்ற எண்ணம் இல்லவிட்டல் என்னல் வாழவே முடியாது என்று ஒரு செய்தியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.உங்களை பாதித்த நோயை நினைத்தால் என் இதயம் வலிக்கிறது.ஆனால் நான் இறந்தாலும் கவலையில்லை காரணம் அப்போது உங்களை வந்தடைந்து விடுவேன் என மற்றோரு செய்தியில் தனது சோகத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இரவுகளில் தூங்க முடியாமல் தவித்த போது இத்தகைய பரிமாறேறமே ஆறுதலை அளித்தது.நாள்தோறும் செய்திகளை அனுப்பி வந்தவர் கணவரின் செல்போனை தொடர்ந்து சார்ஜ் செய்யவும் மறக்கவில்லை.
ஆனால் 50 செய்திகளுக்கு மேல் அனுப்பிய பிறகு பழைய செய்திகள் அழிந்துவிட்டால் என்ன செய்வது என்னஉம் அச்சம் உண்டானது.இதனை தவிர்ப்பதற்காக அவர் பழைய செய்திகளை குறித்து வைத்துக்கொண்டார். கூடவே தனது கணவர் தொடர்பான நினைவுகளையும் குறிப்பெடுத்துக்கொண்டார்.
இவையே தற்போது புத்தக வடிவம் பெற உள்ளன. இந்த புத்தகம் ஆஸ்பெஸ்டாஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கி இதற்கான சிகச்சை கண்டறீயப்பட உதவ வேண்டும் என அவர் விரும்புகிறார்.

0 Comments on “இறந்தவருக்கு அனுப்பிய ‘எஸ் எம் எஸ்’ கள்”
விஷ்ணு
//ஆஸ்பெஸ்டாஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கி இதற்கான சிகச்சை கண்டறீயப்பட உதவ வேண்டும் என அவர் விரும்புகிறார்.//
காதலின் பயனால் மற்றுமொறு நன்மை.
kumar
ithai pol nan niryaperai parthu iukenn
cybersimman
is it. if so .you can share it here