கூகுலோடு சவால் விட்டு வெற்றி பெற முடியும் என நம்பிக்கொண்டிருக்கும் தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை.கூகுலை மிஞ்சுவது சாத்தியமில்லை என்று ஒதுங்கி கொண்டு தங்களுக்கென தனி பாதை காண முயலும் தேடியந்திரங்களூம் அநேகம் இருக்கின்றன.
இவற்றைத்தவிர கூகுலை அண்டிப்பிழைக்கும் தேடியந்தரங்களும் இருக்கின்றன தெரியுமா?ஒட்டுன்னியைப்போல கூகுலை சார்ந்து இயங்கும் தளங்கள் இவை.
அதாவது கூகுலின் தேடல் சக்தியை பயன்படுத்திக்கொண்டு பயனுள்ள புதிய சேவையை வழங்குகின்றன.
இப்படி கூகுலின் தேடலை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் தேடியந்திரம் ‘சிமில்கூகுல்’.
புதிய இண்டெர்நெட்டை கண்டுபிடிக்க உதவும் தேடியந்திரம் என இது தன்னை வர்ணித்துக்கொள்கிறது.இதனை கூகுல் துணைக்கொண்டு செய்வதாக தெரிவிக்கிறது.
எப்படி தெரியுமா?கூகுலில் ஒரே போன்ற பக்கங்கள் என்னும் வசதி உண்டு.அதாவது தேடல் முடிவுகள் பட்டியலிடப்படும் போது அதில் இடம்பெறும் இணையதளங்களைப்போன்ற இணையான இணையதளங்களை பார்க்க முடியும்.
கூகுலின் இந்த சேவையை மேம்படுத்தி இணையான தளங்களை பார்க்க உதவுகிறது.
சிமில்கூகுலை பயன்படுத்தும் போது நீங்கள் டைப் செய்யும் குறிச்சொற்களை கொண்டு கூகுலில் தேடி அதே போன்ற தளங்களை காட்டுகிறது. தேடல் பட்டியலின் முதல் இரண்டு முடிவுகளுக்கு இப்படி இணையான பக்கங்களை தருகிறது.
ஆய்வு நோக்கில் தெடுபவர்களுக்கு நிச்சயம் இந்த சேவை உதவும்.
———-