சமையல் குறிப்பு தேடியந்திரம்

skசமையல் ராணியாகவே இருப்பவர்கள் கூட இன்று என்ன சமைப்பது என்னும் கேள்விக்கு விடை காண முடியாமல் தவிப்பதுண்டு.இல்லத்தலைவிகளை பொருத்தவரை இந்த குழப்பமும் தடுமாற்றமும் அடிக்கடி ஏற்படுவது தான்.

எப்போதும் சமைப்பதையே தினமும் சமைப்பது எப்படி என்னும் அலுப்பு காரணமாகவும் இந்த தடுமாற்றம் ஏற்படலாம். புதிதாக சமைக்க முடிந்தால் சாப்பிடுபவர்களுக்கு மட்டும் அல்ல சமைப்பவருக்கும் சந்தோஷமாகவே இருக்கும்.

இப்படி இல்லத்தலைவிகளை வாட்டும் கேள்வியான இன்று என்ன சமைப்பது என்னும் கேள்விக்கு சுலமபமாக பதிலளிக்க உருவாகி இருப்பது தான் சூப்ப்ர்குக் இணையதளம். உண்மையில் இதனை சமையல் குறிப்பு தேடியந்திரம் என்றூம் கூறலாம்.

சமையல் குறிப்புகளை அளிக்கும் இணையதளங்களும் இல்லாமல் இல்லை.
ஆனால் அவற்றில், இருந்தெல்லாம் இந்த தளம் முற்றிலும் வேறுபட்டது.இல்ல‌த்த‌லைவிகளின் எதிர்பார்ப்புக்கும் தேட‌லுக்கும் நெத்திய‌டியாக‌ ப‌தில் அளித்து அவ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னையை தீர்க்கிற‌து இந்த‌ தள‌‌ம்.

அதிலும் என்ன விஷேசம் என்றால் வீட்டில் இருக்கும் பொருட்களுக்கு ஏற்ற சமையல் குறிப்பை இது முன் வைக்கிறது.

இந்த தளத்தில் தேடத்துவங்கும் போதே முதலில் வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை குறிப்பிட வேண்டும்.உடனே அந்த பொருட்களை கொண்டு சமைக்கக்கூடிய உணவு வகைகளை பட்டியலிட்டுவிடும்.

ச‌மைய‌ல் குறிப்புக‌ளில் என்ன‌ பிர‌ச்ச‌னை என்றால் ப‌ல‌ நேர‌ங்க‌ளில் , அந்த‌ உண‌வு வ‌கையை த‌யார் செய்ய‌ தேவையான‌ ஏதாவ‌து ஒரு பொருள் அல்ல‌து சில‌ பொருட்க‌ள‌ இல்லாம‌ல் இருக்கும் .என‌வே குறிப்பை ப‌டித்துவிட்டு க‌டைக்கு ஓட‌ வேண்டும் அல்ல‌து வேறு பொருத்த‌மான‌ குறிப்பை தேட‌ வெண்டும்.

சூப்ப‌ர்குக் குறிப்பாக இந்த பிரச்சனையை தான் தீர்த்து வைக்கிறது. அடிப்படையிலேயே வீட்டில் உள்ள பொருட்களுக்கு ஏற்ற வகையான குறிப்பைஅ மட்டுமே இது வழங்குகிறது.

மேலு இது தேடியந்திர வகையை சேர்ந்த்து என்பதால் ஒவ்வொரு முறை பொருட்கள் சமர்பிக்கப்படும் போதும் அவ்ற்றுக்கு ஏற்ற உணவு வகைகளை தேடுவதன் மூலம் தன்னுடைய தேடலை செழுமையாக்கி கொள்கிறது.

என்வே அதிக‌ம் தேட‌ தேட‌ அந்த அனுப‌வ‌த்தின் அடிப்ப‌டையில் இத‌ன் தேட‌ல் ஆற்ற‌ல் மேம்ப‌டும்.

—-

link;
skhttp://www.supercook.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சமையல் குறிப்பு தேடியந்திரம்

  1. நீங்க சொல்வது போல யோசிச்சு யோசிச்சு மண்ட காஞ்சுதான் போகுது.
    அருமையான தளமா இருக்கே. பகிர்வுக்கு நன்றி

    Reply
  2. மிகவும் அருமை

    Reply
  3. குப்புராஐ

    நல்ல இணைய இணைப்பு அறிமுகத்திற்கு நன்றி

    Reply
  4. Pingback: சமையல் குறிப்புகளும் இனி சமூகமயம். « Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *