அறியாமல் செய்த ஷாப்பிங் என்று தான் அதனை சொல்ல வேண்டும்.
நியூசிலாந்து நாட்டைச்சேர்ந்த 3 வயது சிறுமி இண்டெர்நெட் மூலம் மண் அள்ளும் இயந்திரத்தை வாங்கியிருக்கிறார். 3 வயது சிறுமியால் எப்படி இண்டெர்நெட்டை பயன்படுத்தி தனக்கு தேவையானதை ஆர்டர் செய்ய முடிந்த்து என்னும் சந்தேகம் ஏற்படலாம்.
எல்லாம் ஒரே ஒரு கிளிக்கால் வந்த விணை தான்.
கம்ப்யூட்டர் இருக்கும் வீடுகளில் குழந்தைகளுக்கு கீபோர்டை கண்டுவிட்டால் ஒரே கொண்டாட்டம் ஏற்பட்டுவிடும் அல்லவா.கீபோர்டை தட்டுவதிலும் மவுசை நகர்த்துவதிலும் மழலைகளுக்கு அப்படியொரு ஆனந்தம்.
சில நேரங்களில் கம்ப்யூட்டரை அப்ப்டியே விட்டுச்சென்றால் மழலைகள் கீபோர்டில் புகுந்து விளையாடி விடும்.
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சாரா குவின்லின் என்னும் பெண்மணியும் சமீபத்தில் இப்படி இண்டெர்நெட்டை பயன்படுத்திக்கொண்டிருந்தார். தனது ஆசை மகளுக்காக பொம்மைகளை வாங்க ஏல தளம் ஒன்றை அவர் பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.
அதன் பிறகு அவர் அப்படியே தூங்கச்சென்றுவிட்டார்.இண்டெர்நெட் இணைப்பையும் அவர் துண்டிக்க மறந்துவிட்டார்.
அவர் தூங்கிக்கொண்டிருந்த போது அவரது 3 வயது குழந்தை கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கிளிக் செய்து விளையாடத்துவங்கியது.
இப்படி குழந்தை அடுத்தடுத்து கிளிக் செய்ததன் விளைவாக ஏலத்தில் பொருள் வாங்கியாதாக பதிவாகிவிட்டது. அதிலும் குழந்தை வாங்கியது பொம்மை கூட அல்ல மண் அள்ளும் இயந்திரம்.
ஏல நிறுவனத்திடமிருந்து இமெயில் வந்த போது அதனை பார்த்து சாரா திடுக்கிட்டப்போய்விட்டார். பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை அவர் யூகித்துக்கொண்டு நிறுவனத்திறகு விளக்கம் அனுப்பு வைத்தார். இதனைஅடுத்து அந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது.
எது எப்படியோ குழந்தைகள் இருக்கும் வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குறைந்தபட்சம் இண்டெர்நெட் இணைப்பை துண்டிப்பதிலாவது கவனமாக இருக்க வேண்டும்.

0 Comments on “3 வயது சிறுமியின் ஆன்லைன் ஷாப்பிங்”
உழவன்
சூடான இடுகை தூமையின் வயது (3 வயது )