பிளிக்கரில் ஒரு காதல் கோட்டை

fotoரோஸி ஹார்டி மற்றும் ஆரான் நேஸ் ஜோடியை புது யுக காதலர்கள் என்றும் சொல்லலாம். இண்டெர்நெட் யுகத்து காதலர்கள் என்றும் சொல்லலாம். ஃபிளிக்கர் காதலர்கள், புகைப்பட காதலர்கள், போட்டோஷாப் காதலர்கள் என்றெல்லாமும் அவர்களை வர்ணிக்கலாம். எப்படியோ அந்த காதல் ஜோடி சரித்திர காதல் ஜோடி பட்டியலில் இடம்பெறக்கூடியது தான்.

அவர்களுடையது அமர காதல் இல்லை என்றாலும் காதலை பரிமாறிக்கொள்ள சுவாரஸ்யமான‌ ஹைடெக் வழியை பின்பற்றியதற்காகவே இந்த ஜோடியின் காதலை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதாவ‌து த‌ங்க‌ளுக்கிடையிலான‌ தொலைவை மீறி காத‌ல் ப‌ய‌ண‌த்தை மேற்கொள்ள‌ இவ‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ வ‌ழி உண்மையிலேயே விஷேச‌மான‌து.புகைப்ப‌ட‌ ப‌கிர்வு த‌ள‌மான ஃபிளிக்க‌ர் மூல‌ம் அற‌ங்கேறிய‌ காத‌ல் க‌தை இது.

க‌ட‌ல் க‌ட‌ந்த‌ காதல் என்பார்க‌ளே அது போல‌ இவ‌ர்க‌ளின் காத‌ல் அட்லாண்டிக்கை க‌ட‌ந்து வெற்றி பெற்றுள்ள‌து. ஆம் ஆரான் நேஸ் அமெரிக்காவில் உள்ள‌ வ‌ட‌க்கு க‌ரோலினாவில் வ‌சிப்ப‌வ‌ர்.அவ்ர் காத‌ல் கொண்ட‌ ரோஸீ ஹார்டியோ இங்கிலாந்தின் டெர்பிஷ‌ய‌ரில் வ‌சிப்ப‌வ‌ர்.

வேறு வேறு நாட்டில் வ‌சிக்கும் இவ‌ர்க‌ளிடையே காத‌ல் அரும்பிய‌து ஃபிளிக்க‌ர் மூல‌மாக‌த்தான்.

புகைப்ப‌ட‌ங்க‌ளை ப‌கிர‌வும் புகைப்ப‌ட‌ங்க‌ள் ப‌கிர்வதன் மூல‌ம் க‌ருத்து ப‌ரிமாற்ற‌த்தில் ஈடுப‌ட்டு ந‌ட்பை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌வும் உத‌வும் த‌ள‌மாக‌ ஃபிளிக்க‌ர் அறிய‌ப்ப‌டுகிற‌து. புகைப்ப‌ட‌க்க‌லையில் நாட்ட‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளுக்கு ஃபிளிக்க‌ர் மீது த‌னி மோக‌மே இருக்கும்.

இத்த‌கைய‌ ஃபிளிக்க‌ர் பிரிய‌ர்க‌ளுக்காக‌ அந்த‌ த‌ள‌ம் க‌ட‌ந்த‌ ஆண்டு ஃபிளிக்க‌ர் 365 டேஸ் என்னும் திட்ட‌த்தை அறிவித்த‌து. வருடத்தின் 365 நாட்களும் தின‌மும் ஒரு புகைப‌ட‌த்தை ப‌கிர்ந்து கொள்ள‌ வேண்டும் என்ப‌து தான் இந்த‌ திட்ட‌த்தின் மைய‌க்க‌ருத்து. அந்த‌ ப‌ட‌ங‌கள் அவ‌ர்க‌ளுடைய‌ ப‌ட‌ங்க‌ளாக‌வே இருக்க‌ வேண்டும்.

இந்த‌ திட்ட‌த்தில் அமெரிக்காவில் இருந்த‌ ஆரான் நேசும் ப‌ங்கேற்றார். இங்க‌லாந்தில் இருந்த‌ ரோஸி ஹார்டியும் ப‌ங்கேற்றார்.

அப்போது ஒரு நாள் நேஸ் ச‌க‌ ஃபிளிக்க‌ர்வாசிக‌ள் ச‌ம‌ர்பித்த‌ புகைப‌ட‌ங்க‌ளை பார்த்துக்கொண்டிருந்தார்.குறிப்பிட்ட‌ ஒரு ப‌ட‌ம் அவ‌ர‌து ப‌ட‌ப் போல‌வே அமைந்திருந்த்தால் அத‌னை ர‌சித்துப்பார்த்துவிட்டு புகைப்ப‌ட‌த்தி சொந்த‌க்கார‌ருக்கு ஒரு வாழ்த்துச்செய்துயையும் அனுப்பி வைத்தார்.

அவர் ரசித்த புகைப்படத்திற்கு சொந்தக்காரரான ரோஸி ஹார்டி இந்த குறிப்பை பார்த்து தானும் பதிலுக்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தார். இந்த பரிமாற்றம் தொடரவே அது மெல்ல காதலாக மாறியது.

மனது மனதும் ஒத்துப்போய் விட்டது. ஆனால் இடையே தூரம் ஒரு தடையாக இருந்தது.நேஸ் அமெரிக்காவில் இருந்தார். அவர் காதலித்த ரோஸியோ அட்லாண்டிக் கடலை கடந்து இங்கிலாந்தில் வசிப்பவர்.ஆரம்பத்தில் புகைப்பட பரிமாற்றம் மூலமும், இமெயில் மற்றும் ஸ்கைப் இண்டெர்நெட் போன் சேவை வழியாகவும் அவர்களின் காதல் வளர்ந்தது.

இருப்பினும் நேரில் பார்த்துக்கொள்ள முடியாத எண்ணம் வாட்டியது. உடனே பயணம் மேற்கொண்டு மற்றவர் நாட்டுக்குச்செல்வது இருவருக்குமே சாத்தியம் இல்லாமல் இருந்தது.அதோடு பெற்றோர்களின் சம்மத்ததையும் பெறவேண்டியிருந்தது.

இந்த நிலையில் தான் போட்டோஷாப் நிபுணரான நேஸ்,ரோஸியின் புகைப்படம் ஒன்றில் மிக பொருத்தமாக தன்னுடைய புகைப்படத்தை இடம்பெற வைத்து இருவரும் ஒன்றாக தோன்றுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். போட்டோஷாப் நுணுக்கம் காரணமாக அந்த படம் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்டது போலவே அமைந்தது.

சந்தித்துக்கொள்ளாமல் இருக்கும் உணர்வை போக்கி அந்த படம் ஒருவித நெருக்கத்தை கொடுத்தது. இதனையடுத்து இருவரும் இதே முறையில் சந்திதுக்கொள்ள துவங்கினர்.

ரோஸ் தன்னுடைய அழகான படத்தை எடுத்து அனுப்புவார் , நேஸ் அதில் தன்னுடைய படம் ஒன்றை சரியான இடத்தில் சேர்த்துவிடுவார்.பின்னர் அந்த படத்தை அழகுபடுத்துவதில் இருவரும் சேர்ந்து ஈடுபடுவார்கள்..புகைபடத்திற்காக எந்த கலர் ஆடைகளை அணிவது எப்படி போஸ்ட் தருவது போன்ற விஷய்ங்கள் குறித்தும் பேசி முடிவு செய்து கொண்டனர்

கடற்கரைக்கும் , சினிமாவுக்கும் சேர்ந்து போவது போல ஃபிளிக்கரில் போட்டொஷாப் மூலம் செயல்பட்டது அவ்ர்களுக்குள் இணக்கத்தை உண்டாக்கியது.

இந்த படங்கள் இடையே இருந்த தொலைவை இல்லாமல் செய்தது போல உண்ர்ந்தோம் என்றும் நாங்கள் ஒன்றாக இருப்பது போன்ற உணர்வைத்தந்த ஒரு உலகை உருவாக்கிகொண்டோம் என்றும் ரோஸி இந்த அனுபவம் பற்றி உற்சாகமாக கூறுகிறார்.

அன்பை தெரிவிக்க தங்களுக்கு கிடைத்த வழியாக இதை நினைத்தாகவும், ஒவ்வொரு முறை இந்த புகைப்படங்களை பார்த்தபோதெல்லாம் காதலன் நேசின் மூச்சுக்காற்றை உணர முடிந்த்தாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்..

link;
www.flickr.com/aknacer and www.flickr.com/rosie_hardy.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பிளிக்கரில் ஒரு காதல் கோட்டை

  1. எங்க இருந்து தான் இந்த மாதிரி செய்திகளை பிடிக்கறீர்களோ!

    நல்ல வேளை படத்த மாற்றி கொடுத்து தில்லாலங்கடி வேலை பண்ணாம இருந்தாங்க! 🙂

    Reply
  2. raj

    எப்படி இப்படி எழுதுறிங்க.

    Reply
    1. cybersimman

      thak u for the complemet

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *