பைபிள் வரைபடம்

bibleபைபிளை படித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கிறிஸ்துவர் அல்லாத பலருக்கு ஏற்படலாம்.கிறிஸ்த்துவர்களின் புனித நூலான பைபிளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலே இதற்கான தூண்டுகோள்.

ஆர்வம் ஒருபுறம் இருக்க பைபிளை படிப்பது சுலபமானதல்ல. அதன் மொழி நடை கடினமானது. அதிலும் படிக்க ஆரம்பிக்கும் போது பைபிளின் மொழி நடை வாசகர்களை உள்ளே விடாமல் சோதனைசெய்யக்கூடியது.

அதோடு பைபிளில் விவரிக்கப்படும் சம்பவங்களும், பெயர்களும், ஊர்களும் குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடியவை.

ஆனால் இவற்றையெல்லாம் மீறி பைபிளை படிப்பது உன்னதமான அனுபவமாக இருக்கும் . மாற்று மதத்தை புரிந்துகொள்ள இது உதவும்.

பைபிளை படித்துப்பார்க்க வேண்டும் என்னும் தூண்டுதலைப்பெற இப்போது அற்புதமான இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.உண்மையில் பைபிளை ஏற்கனவே படித்தவர்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தளம் என்றாலும் இதை பயன்படுத்தும்போது பைபிளை படிக்க வேண்டும் என்ற உணர்வும் எற்படலாம்.

அந்த தளம் பைபிளுக்கான வரைபடம் எனலாம். அதாவது பைபிளில் விவரிக்கப்படும் சம்பவங்கள் நிகழும் இடங்களை வரைபடத்தில் அறிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. பைபிள் கதை நிகழும் தற்போதைய இஸ்ரேல்,பாலஸ்தீனம்,மற்றும் இதற மத்தியதர பகுதியில் அமைந்துள்ள இடங்களை கூகுல் வரைபடத்தின் துணையோடு காட்டுகிறது.

படிக்கும் போது அதில் வரும் இடங்கள் குறித்த குழப்பம் ஏற்படலாம். ஆனால் வரைபடத்தில் பார்க்கும் போது தெளிவாக இருக்கும்.அதைதான் இந்த தளம் செய்கிறது.

பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் பைபிளில் வரும் அத்தியாயங்கள் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. தேவையான அத்தியாயத்தை தேர்வு செய்துவிட்டு அதில் தேவையான் இடத்தை தேர்வு செய்து பார்த்துக்கொள்ளலாம்.
சம்பவ இடங்கள் தெளிவாக காட்டப்படுவதோடு காலப்போக்கில் அவற்றின் பெயர்களில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவையும் சுட்டிக்காட்டப்படும்.நிச்சயம் பைபிள் பிரியர்களுக்கு இந்த தளம் பேரூதவியாக இருக்கும்.

அதே போல மற்றவர்கள் இந்த தளத்தை பயன்படுத்த முற்பட்டால் பைபிளை படித்துப்பார்க்கும் எண்ணத்தையும் ஏற்படுத்தலாம்.

இதே போலவே ஹோமரின் ஒடிசி போன்ற காவியங்களுக்கும் வரைபட சேவையை உருவாக்கலாம். நம்முடைய கம்பராமாயணத்திற்கும் வரைபட சேவையை உருவாக்கவேண்டும்.

அந்த தளத்தின் முகவரி;
link;
http://www.biblemap.org/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பைபிள் வரைபடம்

  1. உண்மை தான். இது மற்றய இதிகாசங்களுக்கு உருவாகினால் நல்லது. மற்ற இனத்தவர்கள் மதத்தவர்கள் படிக்க இலகுவாக இருக்கும்

    Reply
  2. colvin

    //ஆர்வம் ஒருபுறம் இருக்க பைபிளை படிப்பது சுலபமானதல்ல. அதன் மொழி நடை கடினமானது. அதிலும் படிக்க ஆரம்பிக்கும் போது பைபிளின் மொழி நடை வாசகர்களை உள்ளே விடாமல் சோதனைசெய்யக்கூடியது.//

    பயனுள்ள குறிப்பு. இருப்பினும் உங்கள் கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழிலேயே ஏராளமான இலகு மொழிபெயர்ப்புகள் உண்டு. தமிழ் கிறிஸ்தவர்கள் பலர் இன்னும் மிக பழைய மொழிபெயர்ப்பையே உபயோகிப்பதாலும் பெருமளவு இம்மொழிபெயர்ப்பையே பாவிப்பதனாலும் உங்கள் கருத்து அதுவாக இருக்கலாம். கத்தோலிக்க வேதாகமங்களையும் இன்னும் சமீபத்தில் வந்த மொழிபெயர்ப்புகளையும் படித்தால் அதன் இலகு, எளிய தமிழ் நடை உங்களுக்குப் புரியும்.

    Reply
    1. cybersimman

      எனது தனிப்பட்ட அனுபவத்தை சொன்னேன். மீண்டும் முயற்சித்துப்பார்க்கிறேன்.

      Reply
  3. Devakumar

    அருமையான தகவல். நன்றி.

    Reply
  4. வேதங்கள் படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் மிகக் கடினமானவை என்பதால் இந்து மதத்தில் புராணங்களும் இதிகாசங்களும் தோன்றின. அதனால் வேதங்களின் சாரம்சம் இன்று குழந்தைகள் வரை சென்றடைந்திருக்கிறது. மற்ற மதங்களில் வேதங்கள் மட்டுமே போற்றப்படுகின்றன.

    Reply
  5. I.IGNACIMUTHU

    good idea keep itup

    Reply
  6. idhellam devai illtha velai

    Reply
  7. Pastor.Y.Robinbenhur

    இது ஒரு நல்ல பயனுள்ள பகுதி படியுங்கள் பயனடையுங்கள்

    Reply
    1. cybersimman

    2. அன்பின் சிம்மன் – பயனுள்ள [அகுதியாக இருக்கலாம் – ஆனால் புரிய வில்லை – எவ்வளவு தூரம் பயனப்டும் எனத் தெரியவில்லை – பொறுத்திருந்து பார்ப்போம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

      Reply
  8. shalini

    good but jesus comes soon

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *