டிவிட்டரும் டிவிட்டர் சார்ந்த தேடலும் முக்கியத்துவம் பெற்றுவரும் காலம் இது.டிவிட்டரில் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை தேடித்தருவதற்காக என்றே பல தேடியந்திரங்கள் உருவாகியிருக்கின்றன.
இவ்வளவு ஏன் மைக்ரோசாப்டின் பிங் சார்பிலும் கூட டிவிட்டர் தேடியந்திரம் உருவாகியுள்ளது. கூகுலுக்கும் கூட இதே போன்ற திட்டம் இருக்கிறது.
இதன் உட்பொருள் என்னவென்றால் தேடலின் தன்மை மாறி வருகிறது என்பதே. டிவிட்டர் ஃபேஸ்புக் போன்ற தளங்கள் வழியே ஒவ்வொரு நொடியும் தகவல்கள் வெள்ளமென வந்துகொண்டிருக்கின்றன. இவற்றை கனக்கில் எடுத்துக்கொள்ளாமல் இண்டெர்நெட்டில் எதுவும் செய்ய முடியாது.
புதிய போக்குகள் முதல் புதிய செய்திகள் வரை இந்த தகவல்களில் பொடிந்து கிடக்கின்றன.
ஆக இண்டெர்நெட்டில் தேடுவது என்றாலும் இவற்றிலும் தேடியாக வேண்டும். இந்த நோக்கத்தோடு புதிய அலையை தேடியந்திரங்கள் உருவாகத்தொடங்கியிருக்கின்றன.
இவற்றில் ஒன்று ‘கலக்டா’.
இன்றே இப்போதே என்று சொல்வது போல இந்த தேடியந்திரம் இந்த நொடியில் இண்டெர்நெட்டில் வெளியாகும் தகவல்களை தேடி தருவதாக உறுதி அளிக்கிறது.
இணையதளங்களுக்கு விஜயம் செய்வது அவற்றில் உள்ள தகவகல்களை பட்டியலிடுவது அதிலிருந்து தேவையான தகவல்களை தேடித்தருவது எல்லாம் பழைய உத்தி என்று சொல்லும் இந்த தளம் இண்டெர்நெட்டில் வெளியாகிகொண்டிருக்கும் தகவல்களை உடனுக்குடன் தேடி தருவதாக கூறிக்கொள்கிறது. அதாவது மின்னல் வேகத்தில் தகவல்கலை ஆராய்ந்து வேண்டியவற்றை எடுத்து தருகிறது.
வலைப்பதிவு, டிவிட்டர், புகைப்பட தளங்கள் ஆகியவற்றில் உள்ள தகவல்களை தேடி உயிர்ப்புடன் தேடலை நிறைவேற்றி தருவதாகவும் கலக்டா கூறுகிறது.
பயன்படுத்தி பார்த்தால் வேறுபாடு தெரியும் என்றும் கலக்டா நம்பிக்கையோடு சொல்கிறது.
—
link;
http://www.collecta.com/

0 Comments on “மின்னல் வேக தேடியந்திரம்.”
குளோபன்
புதுசட்டை நல்லாயிருக்கே!!!!
cybersimman
thanks globen
prabakaran.k
hi
very good backround.
cybersimman
thanks