பாப் இசை மன்னன் என்று அழைக்கப்பட்டு வந்த மைக்கேல் ஜாக்சன் மரணம் இசை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பல பிரபலங்கள் டிவிட்டர் மூலம் அவரது மறைவிற்கு இரங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அமைச்சர் சஷி தரூரில் தொடங்கி ஹாலிவுட் நட்சத்திரங்கள் வரை பலர் டிவிட்டரில் ஜாக்சன் நினைவு தொடர்பாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
தற்போது வளைகுடா நாட்டிற்குச்சென்றுள்ள தரூர் ஜாக்சனின் இசை சாத்னைகள் அவரது சர்ச்சைகளை கடந்து நிறகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ நா சபையில் இருந்த போது ஜாக்சனை சந்திததை நினைகூர்ந்துள்ள தருர் அவரை மோசார்ட் போன்ற இசை மேதை என வர்ணித்துள்ளார்.
பிரபல பாப் பாடகியான மரியா கரே ஜாக்சனுக்கு மாற்றே கிடையாது என தெரிவித்துள்ளார். இசை உலகிறகும் அவர் செய்துள்ள ஈடு இணையில்லாத பங்களிப்பை நினைவு கூற வேண்டும் என்றும் கரே கூறியுள்ளார்.
கலிபோர்னியா கவர்னரான அர்னால்டு ஜாக்சன் சிறந்த பொழுதுபோக்கு விருந்து அளித்தவர் என்றும் பாப் உலகின் அடையாளச்சின்னம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆஸ்கர் விருது வென்ற நடிகையான ஜான ஃபான்டா ,அவரது மறைவு குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மிகச்சுருக்கமாக ஜாகசனின் புகழ் பாடியுள்ளார். ஹாலிவுட் நட்சத்திர தம்பதியான டெமி மூர் மற்றும் குட்சர் ஜாக்சனின் குடும்ப உறுப்பினரகளின் அந்தரங்கத்தை மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனிடையே ஜாக்சனின் மறைவை அடுத்து ஒரே நேரத்தில் இணையவாசிகள் இண்டெர்நெட்டை முற்றூகையிட்டதால் பல இணையதளஙகள் தர்காலிகமாக பாதிக்கப்பட்டன.
——-
மைக்கேல் ஜாக்சன் பற்றி நான் எழுதிய கட்டுரைக்கு பார்க்கவும்;
link;
http://www.maalaisudar.com/newsindex.php?id=29931 & section=23