புதிய மொழி கற்க‌ உதவும் தளம்

linபுதிதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா?அப்ப‌டி என்றால் ‘லிங்கியோ’ தளம் உங்களுக்கானது.

பன்மொழி பயிலகம் என்றும் இந்த தளத்தை வர்ணிக்கலாம்.நீங்கள் எந்த மொழியை பயில விரும்புகிறீர்களோ அந்த மொழியை இந்த தளத்தின் வாயிலாக கற்றுக்கொள்ளலாம்.

பிற மொழியை கற்க உதவும் மற்ற இணையதளங்களில் இருந்து இந்த தளம் மிகவும் மாறுபட்டது.மேம்பட்டதும் கூட.

காரணம் இந்த தளத்தின் மூலம் நீங்கள் கற்க விரும்பும் மொழியை அந்த மொழியை பேசுபவரிடம் இருந்தே கற்றுக்கொள்ளலாம்.இப்படி உலக மொழிகளில் 40 க்கும் மேற்பட்ட மொழிகளுக்கான ஆசிரியர்களை இந்த தள‌த்தில் சந்திக்கலாம். நீங்கள் தேர்வு செய்யும் ஆசிரியார் இண்டெர்நெட் மூலம் உங்களுக்கு நேரிடையாக சொல்லித்தருவார் என்பது சிறப்பு.

இந்த‌ த‌ள‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து எளிமையான‌து. முத‌லில் நீங்க‌ள் க‌ற்க‌ விரும்பும் மொழியை தேர்வு செய்ய‌ வேண்டும் . அத‌ன் பிற‌கு உங்க‌ளைப்ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ளை ச‌ம‌ர்பித்து ப‌திவு செய்து கொள்ள‌ வேண்டும்.அத‌ன் பிற‌கு உங்க‌ள் தேவையை குறிப்பிட்டு அத‌ற்கு பொருத்த‌மான‌ ஆசிரிய‌ரை தேர்வு செய்து கொண்டு அத‌ற்கான‌ கால‌ நேர‌த்தையும் தீர்மானித்துக்கொள்ள‌லாம்.

பின்ன‌ர் குறிப்பிட்ட‌ நேர‌த்தில் காதில் மைக்ரோபோன‌ மாட்டிக்கொண்டு ,வெப்கேம் முன் அம‌ர்ந்து ப‌யில‌ வேண்டிய‌து தான்.ஏதாவ‌து ச‌ந்தேக‌ம் இருந்தாலும் நேரிலேயே கேட்டுக்கொள்ள‌லாம்.வேறு எதையும் டவுன்லோடு செய்ய வேண்டியதில்லை.கற்றுத்தரும் ஆசிரியரும் வெப்கேமோடு அமர்ந்திருப்பார் என்பதால் வகுப்பில் கற்பது போன்ற உணர்வை பெறலாம்.
க‌வ‌னிக்க இந்த‌ இல‌வ‌ச‌ சேவை இல்லை. க‌ட்டண‌ச்சேவை.க‌ற்றுத்த‌ர‌ முன்வ‌ரும் ஆசிரிய‌ர் நிர்ண‌யிக்கும் தொகையை செலுத்த‌ வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரிய‌ரின் திற‌மையையும் ம‌திப்பிடும் வ‌ச‌தியும் உண்டு. என‌வே ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் மதிப்பீட்டைப்பார்த்து ஆசிரிய‌ரை தேர்வு செய்ய‌லாம்.

இதே போல ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு மொழியை க‌ற்றுத்த‌ர‌ விரும்புவ‌ர்க‌ள் த‌ங்க‌ளை இந்த‌ த‌ள‌த்தில் இணைத்துக்கொள்ள‌லாம்.

ப‌ல‌ மொழிக‌ள் இருக்கிற‌தே த‌விர‌ த‌மிழை காண‌வில்லை.

—–
link;
http://www.lingueo.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “புதிய மொழி கற்க‌ உதவும் தளம்

  1. மிக்க நன்றி சிம்மரே!

    Reply
  2. NATARAJAN

    sir,
    i am natarajan from alangudi-622301 tamil nadu.
    i want learn hindi

    Reply
  3. i am venkadesh live in karur. i need learn japanese.

    Reply
      1. cybersimman

        please visit the website for details

        Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *