வர்த்தக நிறுவனம் ஒன்றால் மோசமாக நடத்தப்பட்ட நுகர்வோரா நீங்கள்? முறையற்ற சேவை தொடர்பாக புகார் மேல் புகார் கொடுத்தும் சமந்தப்பட்ட நிறுவனத்தால் அலட்சியபடுத்தப்பட்ட அனுபவத்திற்கு ஆளானவாரா நீங்கள்? அப்படியென்றால் உங்கள் பிரச்சனையை யூடியூப்பிற்கு எடுத்துச்சென்று நியாயம் கேட்காலாம் தெரியுமா?
இதற்கு முன்னோடியாக அமெரிக்காவைச்சேர்ந்த டேவ் கரோல் தன்னுடைய பிரச்சனையை யூடியூப்பிற்கு கொண்டு சென்று தன்னை அல்லாட வைத்த நிறுவனத்தை பணிய வைத்திருக்கிறார்.
யூடியூப்பிற்காக அவர் உருவாக்கிய பாடல் ஒன்று பல லடசம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்டிருப்பதோடு அவருக்கு நீதியும் கிடைக்கச்செய்திருக்கிறது.இந்த ஆதரவு அவரும் எதிர்பாரத்து.அவரை அல்லாட வைத்த நிறுவனமும் எதிர்பாராதது.
விஷயம் இது தான். கரோல் இசைக்குழு ஒன்றை நடத்தி வருகிறார்.சன் ஆப் மாக்ஸ்வல் எனபது அந்த குழுவின் பெயர்.பத்து மாதங்களுக்கு முன் கரொல் குழுவினர்ரோடு விமான பயணம் மேர்கொண்டார்.
யுனைடட் ஏர்லைன்ஸ் விமான சேவையில் சிக்காகோவிலிருந்து அவர்கள் நெப்ரஸ்கா நகருக்கு சென்றனர். இந்த பயணத்தின் போது கரோலின் கித்தார் பழுதடைந்துவிட்டது. விமான லக்கேஜ் சேவை பிரிவு அதனை சரியாக கையாளாத்தால் கித்தார் பழுதானது.
பொதுவாக பயணங்களின் போது லக்கேஜ் சேதமடைந்தாலே கடுப்பாகி விடும்.அப்படியிருக்க இசைகலைஞரான கரோலுக்கு தன்னுடைய இசைக்கருவி பழுதானால் பெருங்கோபம் ஏற்படுவது இயற்கை தானே.கர்ரோலும் கடும் அதிருப்தி அடைந்து நிறுவனம் தனக்கு ஏற்பட்ட இழப்பிற்கு பதில் சொல்லவும் நஷ்டஈடு வழங்கவும் வேண்டும் என விரும்பினார்.
யுனைடட் நிறுவனத்திடம் இது பற்றி முறையிட்டார். நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். உடனடியாக நஷ்டஈடும் தந்திருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு செய்யாமல் அவரை அலட்சியப்படுத்தியது. இழுத்தடித்தது.புகார் மேல் புகார் செய்தும் இந்த நிலை நீடித்தது.
கிட்டத்தட்ட பல மாதங்கள் இப்படி இழுத்தடிக்கப்பட்டார்.
தோடர் அலட்சியத்தால் வெறுத்துப்போன கரோல் இனி புகார் செய்வதில் பயனில்லை என்னும் முடிவுக்கு வந்துவிட்டார்.ஆனால் நிறுவனத்தின் அலட்சியத்தை அப்படியேவிட மனமில்லை.
கடைசியாக நிறுவனத்திற்கு இசைபயமான பாடம் புகட்ட தீர்மானித்து கித்தாரை கையில் எடுத்துக்கொண்டார்.
நான் வேறு எப்படியாவது பயணம் செய்திருக்க வேண்டும்.காரில் சென்றிருக்கலாம்.ஆனால் யுனைடட் விமானத்தில் சென்றிருக்க கூடாது.காரணம் யுனைடட் ஊழியர்கள் கித்தாரை உடைக்கின்றனர் என ஒரு பாடலை உருவாக்கினார். விமான லக்கேஜ் கையாளும் ஊழியர்களை சித்தரிக்கும் பின்னணியில் ஒரு வீடியோ படத்தையும் தயாரித்தார்.
பின்னர் இந்த வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றிவிட்டார்.விமான நிலையத்தில் சூட்கேஸ் மீது அமர்ந்தபடி அவர் பாடும் அந்த பாடலில் கலந்திருந்த நகச்சுவையும்,அதன் பின்னே இருந்த கோபமும் மற்றவர்களை கவர்ந்தது. விளைவு அந்த வீடியோவை பார்த்து ரசித்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கு அதனை அனுப்பி வைத்தனர்.அவர்கள் தங்கள் நண்பரக்ளுக்கு அனுப்பினர்.
அப்புறம் என்ன யூடியூப் இலக்கணப்படி அந்த வீடியோ பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டது.உடனே சிஎன்என் போன்ற செய்தி நிறுவனங்கள் இது பற்றி செய்தி வெளியிட்டன. இதனையடுத்து மேலும் பலர் அந்த வீடியோவை பார்த்தனர்.
இதன் பயனாக யுனைடட் நிறுவனத்தின் மோசமான சேவை மற்றும் தனது வாடிக்கையாளரின் புகாரை அது கவணிக்காமால் அலட்சியப்படுத்தியதும் இண்டெர்நெட் முழுவதும் விவாதிக்கப்படும் பொருளாயிற்று.நிறுவனத்தின் மானமே போயிற்று என்றும் சொல்லலாம்.
இதற்குள் கரோலின் விடியோ கிட்டத்தட்ட 30 லடசம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுவிட்டது. அந்த விடியோவும் புகழ் பெற்றதாகி விட்டது. அதன் மூலம் அவர் உலகிற்கு சொல்ல விரும்பிய செய்தியும் பிரபலமாகிவிட்டது.
இதன்பிறகு விழித்துக்கொண்ட யுனைடட் நிறுவனம் அவருக்கு நஷ்ட ஈடு வழங்க முன்வந்தது.
இண்டெர்நெட் யுகத்தில் வர்ததக நிறுவனங்கள் அலட்சியமாக நடந்துகொண்டால் அது குறித்த அதிருப்தியை வலுவாகவே தெரிவிக்க யூடியூப் போன்ற தளங்கள் உதுவுகின்றன என்பதற்கான் உதாரணமாகவே இந்தசம்பவம் கருதப்படுகிறது.
நீங்களும் கூடயூடியூப் மூலம் முறையிடலாம்.ஆனால் அந்த புகார் ரசிக்கும் படி புதுமையான முறையில் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
—
குறிப்பிட்ட அந்த யூடியூப் வீடியோவை தற்போது காண்பதில் சிக்கல் உள்ளது.அதற்கான இணைப்பு இதோ…

4 Comments on “பழி வாங்கிய யூடியூப் பாட்டு”
aruna
suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuper!
கிரி
கில்லாடியா இருக்காரு 😀
Pingback: This is how a revenge should be « Moulee's