விளையாட்டு வீரர்களுக்கான விக்கிபீடியா

jo1வீக்கிபீடியா தெரியும்.ஜோக்கிபீடியா தெரியுமா?

ஜோக்கிபிடீயாவை விளையாட்டு வீரர்களுக்கான விக்கிபீடியா என்று சொல்லலாம்.

விளையாட்டு விரர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பும் ரசிகர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் .எந்த வீரரை பற்றிய தகவல் தேவை என்றாலும் கூகுல் மூலம் சுலபமாக தேடிக்கொள்ளலாம் தான். அதே போல பிரமலமான வீரர்கள் என்றால் விக்கிபீடியாவில் அவர்களைப்பற்றிய கட்டுரை தவறாமல் இடம்பெற்றிருக்கும்.கூடவே இணைப்புகளும் இடம்பெற்றிருக்கும்.

அப்படியிருக்க ஜோக்கிபீடியாவில் என்ன சிறப்பு?

சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து நேரிடையாக தகவலை பெறுவதை ஸ்டிரைட் பிரம் த ஹார்ஸ்’ஸ் மவுத் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் இல்லையா?அது போல வீரர்களிடம் இருந்தே நேரடியாக தகவல்களை பெறும் வகையில் ஜோக்கிபீடியா அமைந்துள்ளது.

எப்படி என்றால் இந்த தளத்தில் வீரர்களுக்கான பக்கத்தில் அவர்கள் பற்றிய சுருக்கமான அறிமுகத்தோடு அவர்களின் இணையதள‌ம், வலைப்பதிவுகள்,டிவிட்டர் பக்கம் ஆகியவற்றுக்கான இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கும். அதோடு அவ‌ர்க‌ளின் ஃபேஸ்புக் ப‌க்க‌ம் ,மைஸ்பேஸ் ப‌க்க‌ம் யூடியூப் சான‌ல் ஆகிய‌வையும் இட‌ம்பெற்றிருக்கும்.

குறிப்பிட்ட‌ அந்த‌ வீர‌ர் டிவிட்ட‌ர் மூல‌ம் தீவிர‌மாக‌ த‌க‌வ‌ல்க‌ளை ப‌கிரும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர் என்றால் அவ‌ற்றை உட‌னுக்குட‌ன் இங்ஙேயே தெரிந்து கொள்ள‌முடியும்.

இப்போது தான் பெரும்பாலான வீரர்க‌ள் த‌ங்க‌ளுக்கான‌ சொந்த‌ இனைய‌த‌ள‌ம் ம‌ற்றும் வ‌லைப்ப‌திவை பெற்றுள்ள‌ன‌ரே. மேலும் ப‌ல‌ர் டிவிட்ட‌ரிலும் குதித்து வ‌ருகின்ற‌ன‌ர். இப்ப‌டி வீர‌ர்க‌ளுக்கு சொந்த‌மான‌ இணைய‌ இருப்பிட‌ங்க‌ளில் இருந்தே த‌க‌வ‌ல்க‌லை தெரிந்து கொள்ள‌ வ‌ழி செய‌கிற‌து இந்த‌ ஜோக்கிபீடியா.

இந்த‌ த‌ள‌த்தில் இப்போதைக்கு மூவ‌யிர‌த்துக்கும் அதிக‌மான‌ வீர‌ர்க‌ள் ம‌ட்டுமே இட‌ம்பெற்றுள்ள‌ன‌ர்.ஆனால் ர‌சிக‌ர்க‌ள் நினைத்தால் புதிய‌ வீர‌ர்க‌ளுக்கான‌ ப‌க்க‌த்தை துவ‌க்கி த‌க‌வ‌ல்க‌ளை சேர்க்க‌லாம்.வீர‌க‌ளே கூட‌ த‌ங்க்ளுக்கான் ப‌க்க‌த்தை உருவாக்கிகொள்ள‌லாம்.

இந்த‌ த‌க‌வ‌ல்க‌ளை விக்கிபீடியா போல் யார் வேண்டுமானாலும் திருத்த‌லாம்.
—–
link;
http://www.jockipedia.com/wiki/Main_Page

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *