செல்போன் பேசியபடி காரோட்டுவது தவறு. அதே போல எஸ் எம் எஸ் அனுப்பியபடி வகனமோட்டுவதும் தவறு. இந்த இரண்டு தவறுகளையும் ஒரே நேரத்தில் செய்தால் எப்படி இருக்கும்?
அமெரிக்காவைச்சேர்ந்த டிரக் டிரைவர் ஒருவர் இந்த இரட்டைத்தவற்றை
செய்து தொடர் விபத்துகளை ஏற்படுத்தியுள்ளார்.
நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் என்னும் அந்த வாலிபர் மேற்கு நியூயார்க் நகரைச்சேர்ந்தவர்.கடந்த புதன்கிழமை அன்று லாக்போர்ட் என்னும் பகுதியில் அவர் கார் ஓட்டிச்சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஒரு கையில் செல்போனில் பேசியப்டி மறு கையில் இன்னொரு செல்லில் எச் எம் எஸ் அனுப்பிக்கொண்டிருந்தார். இதன் விளைவாக அவரது கவனம் சிதறி முன்னே சென்று கொன்டிருந்த கார் மீது மோதி அதன் பிறகு வீட்டின் வேலி மீது மோதி கடைசியில் அந்த வீட்டின் நீச்சல் குளத்தில் வண்டி சென்று விழுந்திருக்கிறது.
இந்த விபத்தில் காரில் இருந்த பெண்ம்ணி மற்றும் அவரது பிள்ளைக்கு காயம் ஏற்பட்டதாம்.
விசாரணையில் வாலிபர் தனது தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.
வாலிபரின் செய்கை போலிஸ் அதிகாரிகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.செல்போன் பழக்கத்தால் ஏற்படும் தீவிர பாதிப்பின் அடையாளமாக இது கருதப்படுகிறது.
காரோட்டும் போது எஸ் எம் எஸ் அனுப்ப தடை விதிப்பது பற்றிய விவாத்ததை இது மேலும் தீவிரமாக்கியுள்ளது.

0 Comments on “எஸ் எம் எஸ் விபத்து”
Pingback: எஸ் எம் எஸ் விபத்து | Seidhivalaiyam
seidhi valaiyam
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்