உங்களுக்கு ஒட்டகச்சிவிங்கி வரையத்தெரியுமா? அழகாக வரைய வேண்டும் என்றில்லை. ஒட்டகச்சிவிங்கிப்போல இருந்தால் போதுமானது.
வரையும் திறமையை விட ஆர்வம் இருந்தால் போதும்.அந்த ஆர்வம் இருந்தால் உடனடியாக ஒரு ஒட்டகச்சிவிங்கியை வரையுங்கள். வரைந்ததும் ஒன்மில்லியன் கிராபே என்னும் இணையதளத்திற்கு அனுப்பி வையுங்கள்.
காரணம் இந்த தளம் இப்படி 10 லட்சம் ஒட்டகச்சிவிங்கி ஒவியங்களை சேகரிப்பதற்காக துவக்கப்பட்டுள்ளது.அந்த பத்து லட்சம் ஒட்டகச்சிவிங்கிகளில் உங்கள் ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றாக இருக்கும்.
எதற்கு இந்த வேலை என்று கேட்கலாம்.
இந்த தளத்தின் நோக்கம் மிகவும் உயர்வானது என்றோ லட்சிய தன்மை கொண்டது என்றோ கூற முடியாது.ஆனால் சுவாரஸ்யமானது. இந்த தளத்தை உருவாக்கிய நபருக்கு ஜோர்கன் என்னும் பெயரில் ஒரு நண்பர். இருவரும் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது எப்படியோ ஒட்டகச்சிவிங்கி பற்றி பேச்சு வந்தது.பத்து லடசம் ஒட்டகச்சிவிங்கிகள் பற்றியு பேசியிருக்கின்றனர்.
ஜோர்கன் 10 லட்சம் ஒட்டகச்சிவிங்கிகளை சேகரிப்பது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவரது நண்பரோ இண்டெர்நெட் இருக்கும் போது எதுவும் முடியாதது இல்லை என்று நம்பினார். இண்டெர்நெட் மூலம் இதனை சாதிப்பது சாத்தியம் என்றே நினைத்தார்.
உடனே ஒன்மில்லியன் கிராபே இணையதளத்தை அமைத்து ஒட்டகச்சிவிங்கிகளை வரைந்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று அனுப்பப்படும் ஒட்டகச்சிவிங்கிகள் தளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்று வருகிறது.அவற்றோடு ஒட்டகச்சிவிங்கிகள் வந்த கதையும் தனியே வலைப்பதிவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நீஙகளும் உங்கள் ஒட்டகச்சிவிங்கியை அனுப்பி வைக்கலாம். ஆனால் அதற்கு முன் அதறகான நிபந்தனைகளை தெரிந்துகொள்ளுங்கள்.ஒட்டகச்சிவிங்கி எப்படி வேண்டுமானால் இருக்கலாம்.ஆனால் கம்ப்யூட்டர் உதவியோடு உருவாக்கப்படக்கூடாது.கையால் வரையப்பட்டிருக்க வேண்டும்.
இவாறாக 2011 ம் ஆண்டுக்குள் 10 லட்சம் ஒட்டகச்சிவிங்கிகளை சேர்க்க இலக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அப்படி தான் ஜோர்கனிடம் சவால் விடப்பட்டூள்ளது.
இன்டெர்நெட்டால் எதுவும் சாத்தியம் என்று காட்டுவோம் வாருங்கள் என ஒட்டகச்சிவிங்கி தளத்தை அமைத்தவர் அழைப்பு விடுக்கிறார்.ஏற்றுக்கொல்கிறிர்களா?
—-

0 Comments on “ஒட்டகச்சிவிங்கி வரைய வாருங்கள்”
Limat
நண்பரே அது ஒட்டகசிவிங்கி அல்லவா ?
cybersimman
mannikkavum sari thaan.